இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் வெளிவிவகார செயலாளர் நிருபமாராவும் நேற்று கொழும்பை வந்தடைந்தனர். இந்திய-இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்துக்கு இணைத் தலைவராக தலைமை தாங்கவுள்ள கிருஷ்ணா இவ்விரு நாடுகளுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன் படிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவுள்ளார்.
வியாழன், 25 நவம்பர், 2010
நியூயோர்க் ரைம்ஸின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்
யுத்தக்குற்றவாளிக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பதவி என பிரபல நியூயோர்க் ரைம்ஸ் ஊடகம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப் பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
Labels:
இலங்கை
இலங்கை வாலிபருடன் காதல் கொண்ட அக்ஷரா கமல்ஹாசன்!
கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார்.
Labels:
சினிமா
பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் சிக்கினார்
பிரபல நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் ‘மதராசபட்டினம்’ விஜய் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் ஒரு படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது. நேற்று இரவு இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டு, இரவு பத்து மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய்யின் “வேலாயுதம்” படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல காரில் புறப்பட்டார். அவருடன், கனா கானும் காலங்கள் பாண்டி, மற்றும் எம்.எஸ்.பாஸ்கரின் உதவியாளர் இருநதனர்.
Labels:
சினிமா
மழையை வைத்து சம்பாதித்த மகத்தானவர்கள்
வவுனியா செட்டிகுளத்திலிருந்து பூவரசங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பிரதான பாதையூடான போக்குவரத்து இன்று மதியம் வரை பாதிக்கப்பட்டிருந்தது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தசாமிநகர் பகுதியில், வீதியின் குறுக்காக மழை நீர் 5 அடிக்கும் மேலாக பாய்ந்ததனால் இப்பாதையூடான போக்குவரத்துகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன.
Labels:
இலங்கை,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





