சனி, 6 பிப்ரவரி, 2010

பற்களையும் கவனமாக கவனியுங்கள்

ப‌ற்க‌ளி‌ன் அருமை இரு‌ப்பவ‌ர்க‌ளு‌க்கு‌த் தெ‌ரியாது, அதனை இழ‌ந்தவ‌ர்களு‌க்கு ம‌ட்டுமே‌த் தெ‌ரியு‌ம். ப‌ல் போனா‌ல் சொ‌ல் போ‌ச்சு எ‌ன்பா‌ர்க‌ள்.

மாதவிடாய் காலத்தில்

வயதுக்கு வந்த அதிக பெண்கள் மிகவும் அவதி படுவது அந்த 5 நாட்களில் 3 நாட்கள் அதிகமான வயிற்று வலி. இந்த வலி வருவது இயல்பு தான், இதுக்குனு நாம் மருத்துவரை அனுகி மாத்திரைகள் எடுத்தால் அதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகையல் முடிந்த வரை வீட்டிலே இதுக்குனு கைமருந்து எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் எதுவும் வராது.

மார்பக புற்று நோயை தடுக்க

பல நூற்றாண்டு காலமாகப் புற்று நோய் என்பது மரணம் எனக் கருதப்பட்டதுமல்லாது இந் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் காணப்படுவது இழுக்கு என்ற மனப்பாங்கு காணப்பட்டது. மேலும் இது ஒரு பரம்பரை நோய் எனவும் நினைத்தனர். அறியாமை காரணமாக இந் நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. குணப்படுத்த முடியாத முற்றிய நிலையில்தான் அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்பத்தில் இந் நோயைக் கண்டு பிடித்து சிகிச்சை அளித்தால் பூரணமாகக் குணப்படுத்த முடியும்.

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும். அரைதேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல்
  செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும்.

அழகு + ஆரோக்கியம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.இந்த பழமொழியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன. முகம் அழகாக தோன்ற வேண்டுமானால் உடலில் உள்ளே உள்ள உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க
 வேண்டும்.

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்
 லப்படும் வழக்குகள்.

குழந்தை பேறு தாமதமாக காரணங்கள்

த‌ம்ப‌திக‌ள் இருவரு‌க்கு‌ம் குழ‌ந்தை‌ப் பேறு உ‌ண்டாவத‌ற்கான ப‌ல்வேறு கார‌ணிக‌ள் ‌சீராக இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே இய‌ற்கையான முறை‌யி‌ல் குழ‌ந்தை‌ப் பேறு உ‌ண்டா‌கிறது.

காதின் அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.

கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட காரணம் ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்...

பாதாம் கேக்

தேவையான பொருட்கள்

தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்

மைதா மா - 250 கிராம்

சீனி - 250 கிராம்

மாஜரீன் - 250 கிராம் 

முட்டை - 4 வனிலா - 1 தே. கரண்டி

வேக்கிங்பவுடர் - 15 கிராம்

சார்லி சாப்ளினும் தபால் தலையும்

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்றார். சாப்ளின் நாக்கை நீட்டினார். “நாக்கின் நிறம் மாறி விட்டதே” என்று பதறிய டாக்டர், நாக்கை கூர்ந்து கவனித்து விட்டு, “பத்து செண்ட் தபால் தலை அல்லவா நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்றார் நிதானமாக. “டாக்டர் சார்! இத்தனை நேரம் அதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கண்டுபிடித்து தந்ததற்கு ரொம்ப நன்றி” என்று சாவாதானமாகக் கூறிய சாப்ளின் அந்த அஞ்சல் தலையை எடுத்து மேஜை மேல் இருந்த கவரில் ஒட்டத் தொடங்கினார்
Image Hosted by ImageShack.us

சாப்ளின் நடித்த முதல் சினிமா

சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் சினிமா மேக்கிங் ய லிவிங் (Making a Living) என்பதாகும். வாழ்க்கைக்கான வழி என்ற தலைப்பு கூட அவரைப் பொறுத்தமட்டில் சரியானதாகவே அமைந்ததது. படம் 1914 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்தது. பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஒப்பந்த நடிகரான அவருக்கு வராச் சம்பளம் தந்தாக வேண்டுமே! படத் தயாரிப்பாளர் படம் எடுக்கத் தொடங்கினார். வெறுமனே உட்கார வைத்துச் சம்பளம் தர முடியாதல்லா? படப்பிடிப்புக் குழுவினருடன் நடிகரை அனுப்பிவிட்டார். தயாரிப்பாளர் உடன் செல்லவில்லை.

புறக்கணிக்கப்பட்ட கவிதை


இன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.

1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற புரட்சிக் கருத்துக்களை ஷெல்லி வெளியிட்டார்.

ஷெல்லியின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மதப்பற்று மிகுந்தவர். அவர் ஷெல்லியின் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டினார். ஷெல்லி மறுக்கவே உதவி செய்வதை தந்தை நிறுத்திக் கொண்டார். இதனால் உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டது, இருந்தாலும் தன்னுடைய புரட்சிகர எழுத்தை மட்டுமே ஷெல்லி நிறுத்திக் கொள்ளவே இல்லை.

அவர் இத்தாலியில் தங்கியிருந்தபோது படகொன்றில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பெரும் புயலடித்து படகு கவிழ்ந்தது. 1822 ம் ஆண்டு 30 வயது கூட நிறைவடையாத ஷெல்லி மரணமடைந்தார். ஆனால் அவரது கவிதைகள் அவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட போது பெரும் புயலைக் கிளப்பியது. இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.
Image Hosted by ImageShack.us

உலகின் முதல் ஆம்புலன்ஸ்

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

நாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை
 வெளியிட்டுள்ளார்.

கற்பனையின் பலம்

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர். மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.

கம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந்திருக்கும் சில எழுத்துக்களை மட்டும் காட்டச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களை கம்ப்யூட்டர் திரையை இரு கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளச் சொன்னார்கள். அடுத்து அதையே முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண்டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்.

விளைவு, திரையை பின்னால் பிடித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாணவர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உளவியல்படி நமக்கு கையருகே இருக்கும் பொருளைப் பற்றித்தான் நாம் அதிக நேரம் கவனிக்கிறோம். அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக்கிறோம். ஒரு வகையில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், முடிவெடுப்பதில் இடைஞ்சலாகவே உள்ளன. அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்தனை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள்.

மனக்கற்பனை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனையிலிருந்து உறுதியாகிறது.
Image Hosted by ImageShack.us

முக்கிய வெள்ள சேதங்கள்

1. 1887 ஆம் ஆண்டில் சைனாவில் உள்ள ஹாவாங்ஹோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 9,00,000 பேர் இறந்தனர்.

2. 1889 ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவில் உள்ள ஜோன்ஸ்டான் அணைக்கட்டு இடிந்து விழுந்து 2,200 பேர் மடிந்தனர்.

3. 1928 -ல் சீனாவில் உயர்ந்த யாங்கட்ஸீ பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 100,000 பேர் இறந்தனர்.

4. 1931-இல் சீனாவில் உள்ள யாங்கட்ஸி பகுதியில் ஏறக்குறைய 200,000 பேர் இறந்தனர்.

5. 1938-இல் சீனாவில் உள்ள ஹுவாங்ஹோவில் குறைந்தபட்சமாக 900,000 பேர் இறந்திருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டது.
Image Hosted by ImageShack.us

மாவீரர் நாள் குறிப்புகள்

மாவீரர்நாள் தொடங்கிய ஆண்டு: 1989

முதல் மாவீரர்: சங்கர் (27/11/82)

முதல் சைனைடு அருந்திய போராளி: பாகின் (18/05/84)

முதல் பெண் போராளி : மாலதி (10/10/87)

முதல் பெண் கரும்புலி : அங்கையர்கன்னி (16/08/94)
Image Hosted by ImageShack.us

மறந்துபோகாமல் இருக்க

சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள்
  என்றும் மறப்பதில்லை. ஏன்?

தமிழ் நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 5. சீர்மரபினர் பட்டியல் 6. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?

இன்று சிசேரியன் எனப்படும் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பெண்கள் இயற்கையான பிரசவத்திற்குத் தகுதியாக இருப்பினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிசேரியன் சிகிச்சைக்கு நிர்ப்பந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். சில பெண்கள் அறியாமை காரணமாகவும், பிரசவ வலி தாங்க முடியாமல் போய்விடும் என்ற பயத்தாலும் சிசேரியனுக்குத் தாங்களாகவே முன்வந்து விடுகின்றனர்.

'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்.

பால் சேர்க்காத 'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல