ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

வெங்கடாசலபதி முஸ்லிம் பெண்களுக்கு ஆசீா்வாதம் வழங்கும் உலக அதிசயம்-(படங்கள்)


இதுதான் இந்தியா.. பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள்

சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம்.

ஜேர்மனியில் வாகன விபத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவர் பலி! -(படங்கள்)

ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.

எம்ஜிஆர் 100 | 32 - 34

‘தெய்வத்தாய்’ பட பூஜைக்கு வரும் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.

எம்ஜிஆர் 100 | 29 - 31


அரசு விழாவில் மூதாட்டிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவி வழங்குகிறார். அருகே எஸ்.டி.சோமசுந்தரம்.

எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

M.G.R. பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எம்ஜிஆர் 100 | 27 - 28

அரசு விழா ஒன்றில் பெண்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவிகள் வழங்குகிறார்.

எம்ஜிஆர் 100 | 27 - மனிதரை மனிதராக மதிப்பவர்!

M.G.R. மனிதரை மனிதராக மதித்து நேசிப்பாரே தவிர, அவரது வாழ்க்கைத் தரம் என்ன? எந்த பதவியில் இருக்கிறார்? என்றெல்லாம் பார்த்து மரியாதை செய்ய மாட்டார். முக்தா சீனிவாசன் ஒருமுறை கூறியது போல, முதல் நாள் எம்.ஜி.ஆரின் காரில் ராஜீவ் காந்தியை பார்க்கலாம்; அடுத்த நாள் அதே காரில் ஒரு லைட் பாய் எம்.ஜி.ஆருடன் சென்று கொண்டிருப்பார். கடைநிலை ஊழியராக இருந்தால்கூட, அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் எம்.ஜி.ஆர். மரியாதை அளிப்பார்.

எம்ஜிஆர் 100 | 23 - 26


‘இதயக்கனி’ படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் வாலி, நடிகைகள் லதா, ராதா சலூஜா. நிற்பவர்களில் இடது ஓரம் நடிகர் கோபாலகிருஷ்ணன், நடிகரும் முன்னாள் அமைச்சருமான திருச்சி சவுந்திரராஜன் (உயரமாக இருப்பவர்).

எம்ஜிஆர் 100 | 23 - மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!

M.G.R. தனது படங்களில் காட்சி அமைப்பு அவருக்கு திருப்தி ஏற்படும் வரையில் விடமாட்டார். அதே நேரத்தில் மற்றவர்களின் கருத்து என்ன? குறிப்பிட்ட காட்சியை யூனிட்டில் உள்ளவர்கள் எப்படி ரசிக்கிறார்கள்? என்பதையும் அறிந்து கொள்வார். மற்றவர்களின் கருத்துக்கள் நியாயமாக இருந்தால் அதற்கேற்ப காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்வார்.

எம்ஜிஆர் 100 | 20 - 22

சத்துணவு சாப்பிடும் குழந்தைக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். பரிமாறுகிறார்.

 எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!

M.G.R. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.

எம்ஜிஆர் 100 | 16 - 19

‘ஒளிவிளக்கு’ படத்தில் ஸ்டைலான எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 16 - அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!

M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

எம்ஜிஆர் 100 | 12 - 15


‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதுகிறார் சின்னப்பா தேவர்.

எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!

M.G.R. நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல என்பதுபோல, அலட்சியமாக எதிர்கொள்வதை காட்டும் வகையில் சிரித்துக் கொண்டே ஸ்டைலாக வாள் வீசுவதிலாகட்டும், எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். ‘சாலிவாஹனன்’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயக நடிகரைவிட எம்.ஜி.ஆர். சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல