சனி, 15 டிசம்பர், 2012
'பாலியல் துஷ்பிரயோகமல்ல- மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகம்'
''இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை; ஆனால் அவர்கள் மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார்கள்'' என்று அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகிறார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 9
யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பில் பல்வேறு ஊகங்களும் விசாரணைகளும் இடம்பெற்ற போதிலும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதில் தொடர்ச்சியான குழப்பமே நிலவி வந்தது. அல்லது தற்போதும் நிலவி வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் படை அதிகாரிகள் உட்பட பல அரச ஊழியர்களும் கொல்லப்பட்டனர். தங்களது மாநகர சபையிலேயே ஒரு ஊழியராக பணியாற்றியவாறு புலிகளுக்கு தகவல் வழங்கியபடி ஒருவர் இருக்கிறார் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. தங்களிடையேதான் இருக்கிறார் அவர் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 11
தனது முதலாவது முயற்சி வெற்றி பெறாத தாக்கத்துடன் கிளிநொச்சியிலுள்ள தனது அரசியல்துறை நடுவகப்பணியகத்திற்கு திரும்பிய தமிழ்ச்செல்வன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். மிகவும் இரகசியம் பேணப்படவேண்டிய இந்த விடயம் தொடர்பில் ஒரு பொருத்தமான ஆளை கண்டுபிடிப்பது தமிழ்ச்செல்வனுக்கு கஸ்டமாகவே இருந்தது. ஏனெனில் இவ்விடயத்தில் இரண்டு விடயங்கள் முக்கியமானவையாக காணப்பட்டன. ஒன்று இவ்விடயம் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருக்கவேண்டும். காரணம் புலனாய்வுத் துறைக்குரிய முழுமையான பொறுப்பும் யாழ்மாவட்டம் உட்பட அனைத்துப் பிரதேசங்களையும் கையாளும் பணி பொட்டம்மானுக்குரிய பணியாகும். பொட்டம்மான் பார்க்கவேண்டிய வேலையை வேறொரு பிரிவினர் பார்ப்பது இயக்க நடவடிக்கைகளுக்கு உகந்த செயற்பாடு அல்ல.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 12
பரணியைத் தமிழ்ச்செல்வன் இப்பணிக்கென நியமித்ததைத் தொடர்ந்து பரணி இப்பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். இதே வேளை மறுபுறத்தில் பொட்டம்மான் நசீர் என்பவரை இலங்கையிலுள்ள ஊடகங்கள் அனைத்தையும் கையாளுவதற்கான பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறித்த யாழ்ப்பாணப் பத்திரிகை தொடர்பான பல்வேறு இரகசியத்தகவல்கள் மேலதிகமாக நசீருக்கு கிடைத்திருந்தது. குறித்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்த சிவராமை நசீர் அவசரமாக வன்னிக்கு அழைத்திருந்தார். சமாதான சூழ்நிலை நிலவிய காலத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








