திங்கள், 2 ஜனவரி, 2017

நகலெடுத்து ஒட்டுவதில் புதிய வசதிகள்

விண்டோஸ் 10 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில் நமக்குப் பல வசதிகளையும் பயன்களையும் தரும் ஒரு செயல்பாடு, 'நகலெடுத்து ஒட்டுவது'. இந்த செயல்பாட்டில், இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தருவதற்குப் பல செயலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அதற்கு முன், நகலெடுத்து ஒட்டுகையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

இலக்கணப் பிழை திருத்தும் செயலிகள்

Grammarly
ஏற்கனவே தரப்பட்ட கட்டுரையில் சொல்லப்பட்ட Grammarly செயலி தான் இந்த வகையில் மிகச் சிறந்ததாகும். இது பற்றி சுருக்கமாக இங்கு தருகிறேன். நாம் ஆங்கில மொழியில் தயாரிக்கும் ஆவணங்கள், மின் அஞ்சல்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவுகள் என அனைத்தையும் திருத்தி அமைக்கும். வேர்ட் செயலி காட்டும் பிழைகளைக் காட்டிலு பத்து மடங்கு அளவில் பிழைகளை இது சுட்டிக் காட்டுகிறது. முன் ஒட்டுச் சொற்கள் (preposition), சரியான வினைச்சொல் பயன்பாடு, பெயர்ச்சொல் பயன்படுத்தல், தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் என அனைத்து வகைகளிலும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. இதனை இலவசமாகப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://www.grammarly.com/. இதன் மேம்படுத்தப்பட்ட, கூடுதல் வசதிகள் கொண்ட பதிப்பு பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

தன் சார்பு தகவல்களைக் குறைக்க.........

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும்.

வேர்ட் டிப்ஸ்... ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட், குறிப்புகளைப் பார்க்க, தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க

வேர்டில் குறிப்புகளைப் பார்க்க
வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டபடும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும். சில பயனாளர்கள், இந்த குறிப்பு பலூன்கள், சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பின்னர், தேவைப்படும்போது, இவற்றைப் பார்த்தால் போதும் என எண்ணுவார்கள். இவர்கள், இதற்கெனக் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றலாம்.

எக்ஸெல் டிப்ஸ்... தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க... பைலை விரும்பும்போது பார்க்க

தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படியே, தலைப்பு உள்ள வரிசைகளை அப்படியே உறைந்து போய் நிற்க வைக்கலாம். அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல