இராணுவ மயமாக்கப்ப்ட்டுள்ள தனிச்சூழலில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்
யுத்தம் முடிந்து விட்டது. இடம்பெயர்ந்தோர் மீளவும் சொந்த இடங்களுக்குச் சென்று விட்டார்கள்: நாட்டில் எவரும் எந்த இடத்திற்கும் சுற்றுலா செல்லலாம். வடக்கு கிழக்கைப் பார்த்து இரசிக்கலாம். மலிவான பொருட்களை வாங்கலாம். இதுதான் இன்று தலைநகரில் உள்ள பெரும்பான்மை யினத்தோர் பலரின் மனநிலையாகும். ஆனால் யுத்தம், அவை எம்மீது குறிப்பாகப் பெண்கள் மீது செலுத்திய தாக்கம் எவ்வளவிற்குப் பாதிப்பைக் கொடுத்ததோ அதே அளவிற்கே இடப்பெயர்வும் அதன் பின்னரான இராணுவ மயமாக்கலுக்குட்பட்ட மீளக் குடியமர்தலும் தொடர்ச்சியான மற்றும் புதுமாதிரியான சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.