வியாழன், 29 மார்ச், 2012

உலகில் இதுவரை ஒரு போதும் மேற்கொள்ளப்படாத புரட்சிகர முகமாற்று அறுவைச் சிகிச்சை

இதுவரை ஒருபோதும் மேற்கொள்ளப்படாத புரட்சிகரமான முகமாற்று அறுவை சிகிச்சையொன்றை அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்துள்ளனர்.

மணப்பெண்ணே இது உங்களுக்கு மட்டுமே

‘மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்” என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின் இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

காலில் விழுந்தும் பயனில்லை

அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை நேரில் அழைத்து விளக்கம் கோருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார்.

தாய் வெளிநாட்டில், 8 வயது மகளை ஆபாச படம்காட்டி கெடுத்த காமத்தந்தை கைது!

தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம்கெட்ட தந்தை ஒருவர் ராகம - கல்வலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வருக! வருக!

இந்திய அனைத்து கட்சி பாராளுமன்ற குழு ஏப்ரல் 16ம் திகதி இலங்கை வருகிறது

அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்த நிலையில் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது.

தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்!

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.
தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.

தனிமைப்பட்டு நிற்கும் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்மொழிந்து இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் முழுமையானதாகவும் மனநிறைவு அளிப்பதாகவும் இல்லை என்பது உண்மை.

சிவப்புக் கலர் உணர்ச்சியை தூண்டுமா!!!!!!!

சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ, காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சென்னை பெண்மணிக்கு வலது பக்கத்தில் இதயம்

மனிதனின் உடலில் இதயம் முக்கியமான உறுப்பு ஆகும். ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பும் முக்கியமான வேலை செய்கிறது. நாம் உறங்கினாலும் இது தூங்காது. 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டு இருக்கும். மூளை உள்பட மற்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்கும். ஆனால் இதயத்துக்கு ஓய்வு கிடையாது. அந்த அளவுக்கு இதயம் முக்கிய உறுப்பாக உள்ளது. இதயமானது மனிதனுக்கு இடது பக்கம்தான் இருக்கும். இதுதான் படைப்பு.

பொம்மை போல் உள்ள டீனேஜ் பெண் (படங்கள் இணைப்பு)

லண்டனைச் சேர்ந்த 15 வயது யுவதி இயற்கையிலேயே ஒரு பொம்மை போல காட்சியளிக்கும் இவளது பெயர் வீனஸ் ஏஞ்சலி. இவள் ஒரு அசல் பொம்மை போல பார்ப்பவர்களை அப்படியே வியக்க வைக்கிறாள்.இவளது குரலும் அவளைப்போலவே இனிமையாக இருக்கிறது.

“வசந்த காலங்களில் மட்டும்தான் குயில்கள் கூவும் வானொலிக் குயிலுக்கோ வருடமெல்லாம் வசந்தம்''

வானொலியில் குரலைக் கேட்டு வயது பதினாறு என்றல்லவா எண்ணினேன் என்றாராம் சிவாஜி. வயசுக்கும் வொய்ஸூக்கும் சம்பந்தமில்லாதவர் தான் ராஜேஸ்வரி

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக் கூட்டம் அதிசயம். வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம். துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம். குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்! ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற மேற்படி பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர்தான் கவிஞர் வைரமுத்து.

குயில் என்றால் கூவும் (பாடும்) பறவை என்று மட்டும் அர்த்தமல்ல. சொல், கோகிலம், மேகம் என்றும் குயிலுதல் என்றால் சொல்லுதல், ஒலிக்குதல், அமைத்தல், பதித்தல், செறித்தல், இழைத்தல், நெய்தல் என்றும் அர்த்தங்களாகும்.

முடிந்தவர்கள் உதவுங்கள்

பிரித்தானியாவில் தெற்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெற் ஒன்றில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டமையால் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடமாட முடியாத பேரவலத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற இலங்கைத் தமிழ் சிறுமி துஸா கமலேஸ்வரனின் வைத்திய சிகிச்சைக்காக மனிதாபிமான நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றது லண்டன் பொலிஸ். துப்பாக்கி சுட்டு அனர்த்தம் இடம்பெற்று ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் துஸா வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றார்.

எதிராளியை சுத்தியலால் தாக்கிக் கொன்று அவரது மாமிசத்தை சமைத்து உண்ட கொடூரம்

சேர்பிய ஆயுதக்குழுவொன்று தமது குழுவைச் சேர்ந்த எதிராளி ஒருவரை சுத்தியலால் தாக்கிக் கொன்று கூரிய கத்தியால் அவரது உடலிலுள்ள தோலை உரித்து எலும்பை நீக்கி தசைப்பகுதிகளை இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் அரைத்து உண்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

தோலை உரித்து முகமூடி தயாரிப்பு

தகப்பனாகும் தகுதி யாருக்கு?

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

குடும்பத்தை இணைத்த “பேஸ்புக்'

 தனது 6 வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்த சிறுவன் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களை “பேஸ்புக்' வலைத் தளத்தின் உதவியினால் சந்தித்த நெகிழ்ச்சிக்குரிய ம்பவம் ஒன்று மத்திய பிரதேசம் அருகே இடம்பெற்றுள்ளது.

இது குறித்த விபரம் வருமாறு, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவருக்கு குட்டு, கால்லு (சலீம்), ஷேரு என்ற மூன்று மகன்களும், ஷகீலா என்ற மகளும் உள்ளனர்.

அழகிய நவநாகரிக யுவதிகளை உறுப்பினர்களாக கொண்ட கடத்தல் குழுவைச் சேர்ந்த மூவர் கைது

கடைகளுக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சென்ற 54 பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் அழகான பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட கடத்தல் குழுவொன்றைச் சேர்ந்த 3 கடத்தல்காரர்களை பிரேசில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்படி மூவரும் “புளொன்டெஸ்' என்றழைக்கப்படும் குழுவின் உறுப்பினர்களாவர்.

கர்ப்பம் தரித்த பெண்கள் தினசரி 2 கிண்ணம் சூடான தேநீர் அருந்தவும்

பெண்கள் தினசரி இரண்டு கிண்ணம் சூடான தேநீர் அருந்தினால் கர்ப்பம் தரித்து குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிப்பதாக பிரித்தானிய பிந்திய ஆய்வொன்று கூறுகிறது.

நியாயமான தீர்ப்பு

நீச்சல் பயிற்சிக்கு மகளை அனுப்ப மறுத்த பெற்றோருக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!

நீச்சல் பயிற்சிக்கு மகளை அனுப்ப மறுத்த முஸ்லீம் தம்பதிகளுக்கு சுவிஸில் 1400 சுவிஸ் பிறாங் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. சுவிஸ் பாசல் நகரில் வாழ்ந்து வரும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் பெற்றோர் தங்களது மகளை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக அளிக்கப்பட்ட நீந்தல் பயிற்சிக்கு அனுப்ப மறுத்ததால் 1400 சுவிஸ் பிறாங்க தண்டப்பணம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இப்படி நடக்கும் என்று இவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள் (காணொளி இணைப்பு)

பிரித்தானியாவில் நபர் ஒருவரை பிடிப்பதற்கு 5 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒன்று அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கே நின்ற புல்-டோக் எனப்படும் நாய் (அதுவும் அதன் பெயர் "பொஸ்ஸின்") அவர்கள் ஐவரையும் பலமாகத் தாக்கியுள்ளது. முதலாவதாக காலில் கடி வாங்கி சதையை பிய்த்துக்கொண்ட பொலிஸ் ஆபிசர் காரில் ஓடிப் போய் ஒளிந்துகொண்டார், மற்றைய ஒரு பொலிஸ்காரரின் கையைக் கடித்த நாய், மற்றைய பொலிஸ்காரர்களையும் மாறிமாறி கடிக்கத்தொடங்கி விட்டது.


அமைச்சர் மேர்வின் பாணியில் யாழில் இமெல்டா அட்டகாசம்! நீதிமன்றம் அழைப்பாணை

யாழ். கொட்டடி மாட்டு இறச்சிக்கடை உரிமையாளரினால் யாழ். அரச அதிபருக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த காளை மாட்டினைத் தடுத்தி நிறுத்தியமைக்கான தகுந்த காரணம் சமர்ப்பிக்குமாறு கோரியே யாழ்.அரச அதிபருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல