கடையில் பொருள்கள் வாங்கும் போது நெருக்கமாக நின்ற பெண்ணிடம் உடமைகளையும், பணத்தையும் பறிகொடுத்தனர் தம்பதியர்.இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.கணவனின் சம்பளப்பணத்துடன் வங்கியிலிருந்தும் பணம் பெற்று அவற்றினை சிறிய கைப்பையில் வைத்து அதனை தோளில் போடும் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு சென்ற தம்பதியினர் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள்கள் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.அவ்வேளையில் இவர்களுக்கு மிக நெருக்கமாக நின்று பொருள்கள் கொள்வனவு செய்வதில் பெண் ணொருவர் ஈடுபட்டிருந்தார்.கொள்வனவு முடிந்து பணம் செலுத்தும் இடத்துக்கு வந்து பார்த்தபொது தோளில் போடப்பட்டிருந்த கைப்பை வெட்டப்பட்டு அதனுள்ளிருந்த சிறிய கைப்பை காணாமற் போய் இருந்தது. நெருக்கமாக நின்ற பெண்ணையும் காணவில்லை. தென்மராட்சி தெற்கு மறவன் புலோவைச் சேர்ந்த தம்பதியினரே உடைமைகளைப் பறிகொடுத்தவர்களாவர்.