செவ்வாய், 9 அக்டோபர், 2012

வறுமை நிலையிலும் கூட சாதனை படைத்துவரும் இளம் கண்டுபிடிப்பாளர் வினோஜ்குமார்

இலங்கை பொறியியலாளர் நிறுவனம் (I.E.S.L.)  வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர்கள்  ( JUNIOR  INVENTOR OF THE YEAR COMPETITION  – 2012)  போட்டியில் இவ்வாண்டுக்கான தேசிய நிலைப்போட்டியில் தெரிவாகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப்பேரில் தமிழ்மாணவன் ஒருவரும் தெரிவாகியுள்ளார்.

சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் மறுப்பு

இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, சொடுக்கு எரிக் சொல்ஹேம் தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கணவன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ராதிகா: பயந்து விழித்த குழந்தை

இரவு நேரத்தில் தொலைக்காட்சியை பார்க்கவே இப்பொழுது பயமாகத்தான் இருக்கிறது. கணவனை கொலை செய்ய துடிக்கும் மனைவி. குழந்தையை மீட்க கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் மனைவி என குடும்ப உறவுகளை கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளாகவே சீரியலில் ஒளிபரப்பாகின்றன.

ராதிகாவின் செல்லமே சீரியல் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தில் அதை பார்த்துவிட்டு படுத்தால் ரத்தக் கொதிப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை என்கின்றனர் தொலைக்காட்சி விமர்ச்சகர்கள்.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்"

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.

அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல