திங்கள், 12 ஜனவரி, 2015

திருமணங்களில் ஜாதக பொருத்தங்களின் முக்கியத்துவம்!

பல இந்து திருமணங்களில் பின்பற்றப்படும் முதல் படியே, மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஜாதக பொருத்தம் பார்ப்பது தான். எந்த ஒரு பிரச்சனையுமின்றி இரண்டு பேர்களின் ஜாதகமும் பொருந்தி விட்டால், அந்த தம்பதி சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்ந்திடுவார்கள் என நம்பப்படுகிறது.

6 நாட்களாக சிறுநீரை அருந்தி உயிர் வாழ்ந்த நிர்மாண பணியாளர்


நிர்­மாண தள­மொன்­றி­லி­ருந்து விழுந்து கைகளும் கால்­களும் உடைந்து அசைய முடி­யாத நிலை­யி­லி­ருந்த நிர்­மாண தொழி­லா­ளி­யொ­ருவர், ஒரு ­வார கால­மாக தனது சிறு­நீரை அருந்தி உயிர் வாழ்ந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

பிரான்ஸை உலுக்கிய அல்கைதா தாக்குதல்கள்

சார்ளி ஹெப்டோ என்ற பத்­தி­ரி­கையின் பாரிஸ் அலு­வ­லகம். அந்த அலு­வ­ல­கத்தில் ஆசி­ரியர் பீடக் கூட்டம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இரு ஆயு­த­பா­ணிகள் அலு­வ­லக வளா­கத்­திற்குள் நுழை­கி­றார்கள். தாம் ஏந்­தி­யி­ருந்த துப்­பாக்­கிகள் மூலம் அங்­குள்­ள­வர்­களை சர­மா­ரி­யாக சுடு­கி­றார்கள். சுவர்­க­ளிலும் மேசை­க­ளிலும் இரத்தம் தெறிக்­கி­றது. பத்து பேர் மர­ணத்தைத் தழு­வு­கி­றார்கள். அவர்­களில் எட்டுப் பேர் பத்­தி­ரி­கையின் செய்­தி­யா­ளர்கள்.

எப்படி வீழ்த்தப்பட்டார் மஹிந்த? அடுத்த கட்டம் என்ன??

இலங்­கையின் தேர்தல் வர­லாற்றில் முதல் முறை­யாக அதி­கா­ரத்திலிருந்து கொண்டு மீண்டும் போட்­டி­யிட்ட, ஜனா­தி­பதி ஒருவர், மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்டு, வீட்­டுக்கு அனுப்­பப்­பட்ட சம்­ப வம் கடந்த வாரம் நிகழ்ந்­தது.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான திருப்­ப­மாக இந்த தேர் தல் அமைந்­தி­ருந்­தது.

அரிய முக­ப்பி­ள­வுடன் பிறந்த பாகிஸ்தான் குழந்­தைக்கு அதி­ந­வீன முகச்­சீ­ர­மைப்பு அறு­வைச்­சி­கிச்சை மூலம் மறு­வாழ்வு

அரிய குறை­பா­டான இரு­பக்க முகப்­பி­ளவு மற்றும் இரு கண்­களும் பாதிக்­கப்­பட்ட 18 மாத பாகிஸ்தான் குழந்­தைக்கு வெற்­றி­க­ர­மாக சென்­னையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்­சீ­ர­மைப்பு மருத்­து­வ­ம­னையில் மறு­வாழ்வு அளிக்­கப்­பட்­டது.


கழுத்துப் பிடிப்பு, தோள்­பட்டை வலிகள் ஆபத்­தா­ன­வை­யா?

“பஸ்­சாலை இறங்கி நேரை உங்­க­ளிட்­டைத்தான் வாறன்” என்று ஒரு கையை மடக்கிக் கழுத்தைத் தட­வி­ய­படி சொன்னார்.

மழை நீரால் நிறைந்து கிடக்கும் வயல்­க­ளையும், போரினால் சிதைந்து இன்­னமும் திருத்­தப்­ப­டாது கிடக்கும் கட்டடங்­க­ளையும் பார்த்துக் கொண்டே பகல் முழுவதும் பயணம் பண்­ணி­யி­ருக்­கிறார். ஒரே பக்­க­மாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்­த­படி வந்­ததில் பிடித்­து­விட்­டது.

நீங்கள் இணையத் தளத்தின் அடிமையா..?




புதிய போதை

இணையம்... கேட்­டதைக் கொடுக்கும் அலா­வுதீன் பூதம். மெகா சைஸ் புத்­த­கங்­களைப் புரட்­டா­மலே, சீனியர் ஜீனி­யஸ்­க­ளிடம் சந்­தேகம் கேட்­கா­மலே விர­ல­சைவில் தகவல் சுரங்­கத்தைத் திறக்கும் தங்கச் சாவி. அப்­ப­டிப்­பட்ட சூப்பர் பவர் பூதம் நம் கட்­டுப்­பாட்டை மீறினால் என்ன ஆகும்? மனி­த­குல மேம்­பாட்­டுக்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு தொழில்­நுட்பம், பூமராங் ஆகி அவ­னையே தன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ கதை­களைப் படித்­தி­ருப்போம். அப்­ப­டித்தான் இன்று இணையம் தன்­னு­டைய அடி­மை­யாக மனி­தனை மாற்றிக் கொண்­டி­ருக்­கி­றது. சரி... இதனால், என்ன ஆகி­விடப் போகி­றது? ‘‘இணைய அடி­மைத்­தனம் என்­பது தனிப்­பட்ட பிரச்­னை­யல்ல. வேறு ஏதோ ஒரு மன­நலக் கோளாறின் அடை­யா­ள­மா­கவோ, தீவி­ர­மான பிரச்சி­னையின் வடி­கா­லா­கவோ இருக்­கலாம். அதனால், உட­ன­டி­யாகக் கவ­னிக்க வேண்­டி­யது அவ­சியம்’’ என்­கிறார் மன­நல மருத்­துவர் மோகன் வெங்­க­டா­ச­ல­பதி.

எதிர்­கா­லத்­தையே கேள்­விக்­கு­றி­யாக்கும் புகை­யிலைப் பாவனை!

இழந்­தவை எது­வா­னாலும் இழப்­புக்­களை ஈடு­செய்­வ­தென்­பது எவ­ராலும் முடி­யாது. அது உயி­ராக இருந்தால் வேத­னைகள் ஒரு­வ­ருக்கு மட்­டு­மல்ல, அனைத்து உற­வு­க­ளுக்கும் அது உறுத்­தலே. அந்­த­வ­கையில், புகை­யிலைப் பயன்­பாட்டைக் கட்­டுப்­ப­டுத்­தவும், புற்­று­நோ­யினால் ஏற்­படும் இறப்­பு­களைக் குறைக்­கவும் புகை­யிலை எதிர்ப்பு தின­மா­னது 1987ஆம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில், புகை­யி­லை­யினால் ஏற்­படும் பாதிப்­புகள் குறித்து மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த, ஒவ்­வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி இத்­தினம் உல­க­ளவில் நினைவு கூரப்­ப­டு­கின்­றது. புகை­யிலைப் பாவனை எனும்­போது வெறு­மனே புகைத்­தலை மட்டும் நாம் முன்­னி­லைப்­ப­டுத்த வில்லை. புகை­யி­லையை உப­யோ­கித்து தயா­ரிக்­கப்­படும் அனைத்து வித­மான பொருட்­க­ளுமே இதில் உள்­ள­டங்­கு­கின்­றன.

புதிய வருடம் யாருக்­கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது?

சோதிடமும் எண் சோதிடமும் கலந்து ஓர் இலகுவான ஆய்வு

தத்தம் அன்­றாட வாழ்வின் எதிர்­பார்ப்­புகள் எதிர்­கால முன்­னேற்றம் பற்­றிய கன­வுகள் மெய்ப்­பட வேண்­டு­மென விரும்­பு­வது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் இயல்பு. ஆனால் எதிர்­பார்த்­தது போல அவை கைவ­ச­மா­கின்­ற­னவா என்­பது தான் கேள்­விக்­குறி. அதிலும் கடந்­தாண்­டிலோ அதற்கு முன்போ எத்­த­னையோ கஷ்­டங்­களைச் சுமந்து பல இடர்­பா­டு­களைக் கடந்து இளைத்துக் களைத்துப் போன பலரின் எதிர்­பார்ப்பு புதிதாய் மலர்ந்­துள்ள புத்­தாண்­டி­லா­வது தங்­க­ளது ஒரு சில எதிர்­பார்ப்­புக்­களோ குறைந்­த­பட்ச ஆசை அபி­லா­ஷைகளோ நிறை­வேற வாய்ப்புக் கிட்­டுமா என்­பதே. சென்ற ஆண்டில் ஏழாம் எண்காரர்கள் வாழ்வில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்­களை சந்­தித்­தி­ருப்­பார்கள். அவர்­களை விட இரண்டாம் எண்காரர்­க­ளுக்கு அவர்­களை அறி­யா­மலே தேங்­காய்க்குள் இளநீர் சேரு­மாப்­போல சில அல்­லது பல அதிர்ஷ்ட வாய்ப்­புக்கள் கிட்­டி­யி­ருக்கும். அப்­ப­டி­யானால் இந்த ஆண்டு எந்த எண்காரர்­க­ளுக்கு நன்­மைகள் செய்யும் ஆண்­டாக மலர்ந்­துள்­ளது என்­ப­தை­ய­றிய ஆவல் உந்­து­கி­ற­தல்­லவா?

கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

கண்­ணாடி என்­பது உப்­புக்கு சப்­பாக இருப்­ப­வர்கள் அணியும் ஒரு பொருள் கிடை­யாது. இது அவ­சி­ய­மான ஒரு பொரு­ளாக மாறி விட்­டது. கண்­ணா­டியின் ஃப்ரேம் சின்­ன­தாக, சிக்­கென, கவர்ச்­சி­யாக வந்­து­விட்­டது. அதனால் கண்­ணாடி அணியும் பெண்கள், அவர்­களின் கண்­க­ளுக்கு மேக்-கப் போடு­வது முக்­கி­ய­மா­ன­தாக மாறி­விட்­டது. நீங்கள் காண்டாக்ட் லென்ஸை நிரந்­த­ர­மாக தூக்கி எறிந்து விட்­டீர்­களா அல்­லது அதனை சீரான முறையில் அணிய சோம்­பே­றித்­த­ன­மாக உள்­ளதா? எப்­படி இருந்­தாலும் அழ­கான கண்கள் வேண்டாம் என எந்தப் பெண்ணும் கூற மாட்­டார்கள். அதற்கு காரணம் முகத்தின் அழகை மிகைப்­ப­டுத்தி காட்­டு­வதில் முக்­கிய பங்கை கொண்­டுள்­ளது கண்கள். கண்­ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்­க­ளுக்கு எவ்­வாறு மேக்-கப் போட வேண்டும் என்ற டிப்ஸ்கள் கூறப்­பட்­டுள்­ளன. அவை­களைப் பின்­பற்றி பயனைப் பெறுங்கள்.

மாண­வர்­களைத் தாக்கும் மன அழுத்தம்!

பொது­வா­கவே பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்கள் - எப்­போதும் படித்­துக்­கொண்டே இருக்க வேண்டும் என எதிர்­பார்ப்­பது வழக்கம். படிக்­கா­விட்டால் அவர்கள் எதிர்­கா­லமே இருண்டு போய்­வி­டுமே என்ற எண்­ணத்­தால்தான் இத்­தனை எதிர்­பார்ப்பும். ஆனால், இப்­படி அவர்­களை இடை­வெ­ளி­யில்­லாமல், எந்தப் பொழு­து­போக்கும் இல்­லாமல் கட்­டா­யப்­ப­டுத்தி படிக்க வைத்தால் நிச்­சயம் மன அழுத்தம் ஏற்­படும். இதனால், பரீட்­சையில் தோல்­வி­ய­டை­ய­வில்லை என்­றாலும், வாழ்க்­கையில் தோல்­வியை தழு­வு­வார்கள் எனப் பல ஆராய்ச்சி முடி­வுகள் உரைக்­கின்­றன.

மணப்பெண்ணுக்கான சந்தன பேஸ் பெக்

அழ­கான தோற்­றத்தைப் பெறவும் சரு­மத்தை பள­ப­ள­வென வைத்­தி­டவும் பல வித­மான ஃபேஸ் பெக்­குகள் வந்து விட்­டன. சந்­தை­யிலும் வகை வகை­யாக ஏரா­ள­மான பொருட்கள் கிடைக்­கி­றன. ஆனால் அதில் பல்­வேறு ஃபேஸ் பேக்­கு­களில் இர­சா­யன பொருட்கள் பல கலக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் இயற்­கை­யான ஃபேஸ் பேக்­கு­க­ளையும் பலர் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். ஃபேஸ் பெக்­கு­களை நாம் அன்­றாடம் பயன்­ப­டுத்தி வந்­தாலும், அவை குறிப்­பாக சில நிகழ்­வு­க­ளுக்கு கண்­டிப்­பாக தேவைப்­படும். அப்­ப­டிப்­பட்ட ஒரு நிகழ்வு தான் திரு­மணம். பிறகு என்ன அலங்­காரம் இல்­லாத மணப்பெண் இருக்க முடி­யுமா என்ன? மணப்­பெண்­ணாகப் போகும் பெண்கள் தினமும் விலை உயர்ந்த அழகு நிலை­யத்­திற்கு செல்­வது கஷ்­ட­மான ஒன்று. ஆனால் அங்கே கிடைக்கும் அனைத்து பயன்­களும் வீட்­டி­லேயே கிடைத்தால் மகிழ்ச்சி தானே! உங்­களின் அனைத்து வித­மான சரும பிரச்­சி­னை­க­ளுக்கும் சந்­தனம் ஒரு சிறந்த தீர்­வாக இருக்கும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல