செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

தங்கம், வைரம் கலந்த ஓட்கா

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஓட்டலில் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு அதற்காக, புது விதமான ஓட்கா மதுபானத்தை தயார்செய்தனர். சாப்பிடும் வகையிலான 24 காரட் சுத்த தங்க இலைகள், கடல் முத்துகள் இரண்டு, ஒரு காரட் வைரம் ஆகியவை இந்த மதுபானத்தில் சேர்க்கப்பட்டது.

மனைவியையும் இரு மகள்மாரையும் படுகொலை செய்த நபர் தானும் தற்கொலை

தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் படுகொலை செய்த நபரொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும் செயற்கைக்கோள்கள்

பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை செயற்கைக்கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான திட்டத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மாஸ்கோ நகரில் இருந்தபடி இரு நாட்டு விஞ்ஞானிகளும் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காக 2 செயற்கைக்கோள்களை ரஷியா - இங்கிலாந்து விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்ப இருக்கிறார்கள்.

கற்பழிப்பில் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்

மாதிரிப்படம்
இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருத்தி, ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாயுடன் 40 வயது ஆசாமி ஒருவர் அந்த பூங்காவுக்கு வந்தார். அந்த நாயை பார்த்ததும் அதன் அழகில் கவரப்பட்டு அந்த சிறுமி அந்த நாயுடன் விளையாடினாள். அந்த பெண்ணை கவனித்த நாயின் எஜமானர் அந்த சிறுமியை தேநீர் அருந்த அழைத்தார். அதற்கு சம்மதித்து வந்த சிறுமியை அவர் கற்பழிக்க முயன்றார்.

லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு பாதுகாப்பு வழங்க தயார்- மகிந்த ராஜபக்ஷ!

லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சில் உள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மூலம் லிபிய தலைவருக்கு இராஜதந்திர மட்டத்தில் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

மனித மூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கரத்தை உருவாக்கி சாதனை

மோட்டார் இயந்திரத்தால் செயற்படுத்தப்படும் வழமையான செயற்கை கரத்துக்கு பதிலாக மனித மூளையால் இயங்கும் செயற்கை கரமொன்றை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
கரத்தை இழந்த ஜெஸி சுலிவன் என்பவருக்கே இந்த செயற்கை கரம் பரிட்சார்த்தமாக பொருத்தி ஆய்வு செய்யப்பட்டது.

4 வருட காலமாக மண்டையோட்டை கத்தி ஊடுருவி இருப்பதை அறியாத நபர்

தனது தலையில் 4 அங்குல நீளமான கத்தி முனையொன்று இருப்பதை 4 ஆண்டுகளாக நபரொருவர் அறியாது வாழ்ந்த விசித்திர சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மனைவியை அடித்து காயப்படுத்திய கணவரை நையப்புடைத்த பெண்கள் (காணொளி இணைப்பு)

தனது மனைவியை அடித்து உதைத்து காயப்படுத்திய கணவர் ஒருவர், உள்ளூர் பெண்களால் பிரம்பாலும் சவுக்காலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.

புகைப்படங்கள் வெளியானதால் ருவண்டா அமைச்சர் இராஜினாமா (படங்கள் இணைப்பு)

ருவண்டாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோசப் ஹபினெஸா, அவரது முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச் சாட்டையடுத்து பதவி விலகியுள்ளார்.

நிறையை குறைத்தால் அதிக வட்டி

தென் கொரியாவைச் சேர்ந்த “ஹனா வங்கி' நாட்டிலுள்ள பருமனானவர்களின் தொகையைக் குறைக்க விநோத ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைறைப்படுத்தியுள்ளது.

“பேஸ் புக்' இணையத்தளம் மூலம் அறிமுகமான நண்பர் மீது காதல் கொண்ட மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

“பேஸ்புக்' இணையத்தளம் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் மீது காதல் கொண்ட பிரித்தானிய மனைவியை 23 தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த செல்வந்த அமெரிக்கப் பொறியியலாளர் தொடர்பான வழக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

பெறா மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி 8 பிள்ளைகளுக்கு தாயாக்கிய நபர்

தனது மனைவிக்கு முந்திய திருமணத்தின் மூலம் பிறந்த மகளை பாலியல் துஷ்பி ரயோகம் செய்து 8 குழந்தைகளுக்கு தாயாக்கியதை மாற்றாந் தந்தையொருவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட சம்பவம் ஜேர்மனி கொப்ளென்ஸ் நகரில் இடம்பெற்றது.

கரண்டியால் புலியை அடித்து விரட்டி கணவனின் உயிரை காப்பாற்றிய மனைவி

தனது கணவன் மீது பாய்ந்து அவரைக் கடித்துக் குதற தயாரான புலியை பெரிய மரக்கரண்டியொன்றால் அடித்து பெண்ணொருவர் விரட்டிய சம்பவம் வட மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல