வியாழன், 15 நவம்பர், 2012

A grave failure of the UN (Video)


Share |
Image Hosted by ImageShack.us

புலிகளின் விமானத்தில் பறக்கப் பயப்பட்ட பிரபாகரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விமானப் படைப் பிரிவு குறித்த சுவாரஷிய தகவல்களை கொண்ட பதிவு இது.

உலகிலேயே முதன்முதல் விமானப் படையை கொண்டிருந்த போராட்ட அமைப்பு புலிகள்தான்.

பெற்றோரின் ஆசியுடன் இராணுவத்தில் இணையும் தமிழ் யுவதிகள்!

சுய விருப்பத்தின் பேரிலும், பெற்றோரின் சம்மதத்துடன் நூற்றுக்கும் அதிகமான தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைகின்றார்கள்.

துப்பாக்கி படத்திற்கு கடும் எதிர்ப்பு... பாதுகாப்பு கோரி அரசிடம் விஜய், கலைப்புலி தாணு மனு!

தான் நடித்த துப்பாக்கி படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் வெடித்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு கோரி தமிழக அரசை அணுகியுள்ளார் நடிகர் விஜய்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-5

விடுதலைப் புலிகள் இயக்கம் தமது கொள்கைகள், கோட்பாடுகள் என்பனவற்றில் திருகோணமலை நகரிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோன்று அடிக்கடி சிறிய சிறிய செயற்பாடுகளில் வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக தமிழ் மக்களிடத்திலும் சர்வதேச அரங்கிலும் தங்களால் அமைக்கப்படும் தமிழீழத்தின் தலைநகரமாக திருகோணமலையே விளங்குமென கூறிவந்தனர். ஆனால் நடைமுறையில் கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாகவும், குறிப்பாக யாழ் மாவட்டத்திற்கே விடுதலைப்புலிகள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அந்த நாட்களில் விடுதலைப்புலிகளின் கிழக்குமாகாணத் தளபதிகள் தங்களுக்குள் குறைப்பட்டுக்கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-4

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஊடகங்கள் மீது கோபம் கொண்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயமும் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகம் ஒன்றினால் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நல்லுறவைப் பேணிக்கொண்டிருந்த காலப்பகுதியில் அன்ரன் பாலசிங்கம் இறப்பதற்கு முன்னர் அன்ரன் பாலசிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்கள் வன்னிக்கு பிரபாகரனால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் வித்தியாதரன் முதன்மையானவராக அந்த நாட்களில் விடுதலைப் புலிகளால் கருதப்பட்டிருந்தார். வித்தியா தரனுடனான சந்திப்புக்களுக்குரிய ஏற்பாடுகளை லண்டனில் இருந்தவாறு அன்ரன் பாலசிங்கம் ஒழுங்குபடுத்தி இருந்தார்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-3

விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் ஊடகங்களைக் கையாள்வதற்கென பல்வேறு பிரிவுகள் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் இயங்கி வந்தன. இவற்றுள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஊடகப் பிரிவே வெளிப்படையாக செயற்பட்டது. ஆனால் மறை முகமாக விடுதலைப் புலிகளின் ஆதரவான ஊடகப் போக்குடைய பலரை ஒருங்கிணைக்கும் பணியை விடுதலைப் புலிகளின் பல பிரிவுகள் கையாண்டு வந்தன. இவற்றுள் வெளிநாட்டு ஊடகங்களை கையாளும் பொறுப்பு கஸ்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் தனது மேற்பார்வையில் நந்தகோபன் என்பவரை இதற்குப் பொறுப்பாக நியமித்து செயற்படுத்தி வந்தார்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-2

இந்தப் பதவி நிலைகளை வழங்குகின்ற பொழுது விடுதலைப் புலிகளின் தலைவரிற்கும், தளபதிகளுக்கும் இடையில் கருத்து மோதல்கள் உருவாகி வருவதுமுண்டு. இருந்தபோதிலும் தாங்கள் கூடுதலாக கதைத்தால்ஆபத்களைச் சந்திக்க வேண்டிவரும் என்பது தெரிந்ததால் தளபதிகள் மௌனமாக இருப்பதுண்டு. ஆனால் விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு கட்டமைப்பிலும் இருந்த தளபதிகள் தமது பிரிவுப் போராளிகள் இறக்கின்றபோது அவர்களுக்கு ஏனைய பிரிவுப் போராளிகளை விட கூடுதல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமென எதிர்பார்த்தனர். சில தளபதிகளின் எதிர் பார்ப்புகள் ஈடேறாமல் போவதால் அவர்கள் உள ரீதியான பாதிப்புகளையும் எதிர் கொண்டு வந்தனர்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்: பகுதி-1

தமிழ் ஊடகங்கள் சில செய்திகளை தற்போதும் ஊதிப் பெருப்பித்து வருகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கம் கெரில்லாத் தாக்குதல் முறைகளில் இருந்து மரபுவழி ரீதியான தாக்குதல் வழிமுறைகளுக்கு மாறிய சமயங்களில் விடுதலைப்புலிகளினுடைய இராணுவ பலத்தை எவருமே மதிப்பிட முடியாத ஒரு சூழல் காணப்பட்ட போதிலும், தமிழ் ஊடகங்கள் கூடுதலான மிகைப்படுத்தல்களுடன் கூடிய விதத்தில் விடுதலைப் புலிகளினுடைய ஆயுத பலத்தையும் ஆட்பலத்தையும் மெருகூட்டி வந்தன. இதன் விளைவாக விடுதலைப்புலிகள் தாங்கள் பெரியளவில் வளர்ச்சி கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டு இலங்கை இராணுவத்தினுடைய இராணுவ பலத்தை மதிப்பிடத் தவறிவிட்டனர். இதன் விளைவுகளை முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் சந்திக்க முடிந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல