புதன், 29 பிப்ரவரி, 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 22

ராஜிவ் கொலைக்கு 14 நாட்களுக்கு முன் நடந்த ரிகர்சல்!

ராஜிவ் காந்தி மே 21, 1991-ல் கொல்லப்பட்டார். அதற்கு 2 மாதங்களுக்கு முன், மார்ச் மாத தொடக்கத்தில் முருகன், புதிதாக ஒருவரை பாக்கியநாதன் வீட்டுக்கு அழைத்து வந்தார். விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் சென்னை செயல்பாடுகளுக்கு பெறுப்பேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருப்பவர் என அவரை பாக்கியநாதனுக்கும் நளினிக்கும் அறிமுகம் செய்து வைத்தார் முருகன்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 21

ராஜிவ் கொலை: முருகன்-நளினி இணைக்கப் பட்டது இப்படிதான்!

இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம் (கடந்த அத்தியாயங்களை தவறவிட்டவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 20

முகம் தெரிந்த நபர்களின் பெயர்களும் தொடர்புகளும்

சென்னை அடையாறு பகுதியில் ‘அனபான்ட் சிலிகான் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நளினியும், வில்லிவாக்கம் நபர் தெரிவித்த அவரது பக்கத்து வீட்டு நளினியும், ஒரே நபர்தான் என்பதை புலனாய்வுக்குழு புரிந்து கொண்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை –19

நளினியின் போன் நம்பர் கிடைக்கிறது

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே குண்டு வெடிப்பில் இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் பெட்டிதான் புலனாய்வுக் குழுவுக்கு முதன்முதலாக உருப்படியான சில தகவல்களைக் கொடுத்தது. அந்தப் பெட்டிக்குள் இருந்த காகிதங்கள் புலனாய்வுக் குழுவை ஹரிபாபு விஷயத்தில் உஷார் படுத்தியது. அதையடுத்து ஹரிபாபு தொடர்பான சில தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது புலனாய்வுக் குழு.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 18

ஹரிபாபுவின் பெட்டியில் இருந்த பொருட்கள்

சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த ஒருவர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார். அவர் கொடுத்த தகவல்கள் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தில் நடந்த சம்பவங்களுடன் பொருந்தி வருவதுபோல இருந்தன.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 17

புலனாய்வுக் குழுவினருக்கு முதலாவது தடயம் கிடைக்கிறது

லண்டனில் இருந்து வந்து சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷுடன் தொடர்பு கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர்மீது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட 7 காரணங்கள் இருந்தன என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம். (அதைப் பார்த்து விட்டு மேலே படிக்க, இங்கே கிளிக் செய்யவும்)

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 16

ராஜிவ் கொலையில் சினிமாக்காரர்களின் தொடர்பு!

“ஈழ விடுதலை இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவின் கொலையைச் செய்தது யார் என்ற மர்மம் தொடர்கிறது” என்று கூறி, அந்த கொலை வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்தது, அப்போதைய தி.மு.க. அரசு. ஆனால், அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது, தமிழக காவல்துறைக்கும் தெரியும், இந்திய உளவுத்துறைகளுக்கும் தெரியும்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 15

பத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்!

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே 30ம் தேதி தமிழகம் எங்கும் விளம்பரமாக வெளிவந்தது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 14

சி.ஐ.ஏ.தான் ராஜிவ்வை கொலை செய்தது என்ற குற்றச்சாட்டு!

ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி த்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட்ட வெடிப்பொருள் பற்றி பேட்டி கண்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 13

‘தி ஹிந்து’ பத்திரிகை மீண்டும் ஒருமுறை காட்சிக்குள் வந்தது. ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்குமுன், அவரை ரகசியமாகச் சந்தித்த ஒருவரைப் பற்றி செய்தி வெளியிட்டு, மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, மீடியா சர்க்கிளில் மகத்தான ஸ்கூப் அடித்தது தி ஹிந்து.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 12

கிட்டுவுக்கு இதில் உள்ள தொடர்பு அநேகருக்கு தெரியாது!

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வில் சி.பி.ஐ. குழு சென்னையில் தடயங்களைத் தேடிக்கொண்டிருக்க, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரசுரிக்கப்படும் ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 11

சென்னை பத்திரிகையாளர், சுபா சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு, குர்தா-பைஜாமா நபரைப் பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் சுபா சுந்தரமோ, “குர்தா- பைஜாமா நபர் எனது பார்ட்னர் அல்ல. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று கூறியபோதுதான், பத்திரிகையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 10

இந்த ஒரு பதில்தான், ராஜிவ் கொலை வழக்கில் புலிகளை உள்ளே கொண்டுவந்தது. இந்தப் பதில் வந்திராவிட்டால், கேஸ் வேறு விதமாகப் போயிருக்கும்! ஒருவேளை புலிகளில் சம்மந்தம்கூட தெரிய வந்திராது!
ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை, ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று கடந்த அத்தியாயம் ஒன்றில் கூறினோமல்லவா? அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகையில் பார்த்த சென்னை பத்திரிகையாளர் ஒருவர், அதிர்ந்து போனார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல