வியாழன், 6 ஜனவரி, 2011

பிபாசா பாசுவின் பிறந்த நாள்

பிபாசா பாசு ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார்.

தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பு ஜனவரி 7 1979. டில்லி
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 2001 முதல்

ஜனாதிபதியின் தங்கச்சிலை மீண்டும் உருக்கப்பட்டது

தங்கத்தினால் செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவச்சிலை ஜோதிடர் ஒருவர் கூறியுள்ள ஆலோசனையின் பிரகாரம் நேற்று முன்தினம் மீண்டும் உருக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 இளைஞர்கள் கடத்தல்

மன்னாரில் நேற்று மாலை 6.45 மணியளவில் நான்கு இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் அதிகரித்த பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குட்டைப் பாவாடை அணிய தடையில்லை

நாட்டின் சில பகுதிகளில் குட்டைப் பாவாடை அணிவதற்கு இலங்கை அரசு தடை விதித்ததாக கூறி வெளியான செய்திகளுக்கு அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனத்தை சீண்டிப்பார்த்த கைகளுக்கு விலங்கு

உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியின் உறவினர் ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபரினை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டீ அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறு மக்கள் பகுதியினர் மட்டுமேயாவர்-உதய கம்மன்பில!

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறு மக்கள் பகுதியினர் மட்டுமேயாவர். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்ற மற்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள். அவர்களினால் சுய நிர்ணய உரிமையையோ சுயாட்சியையோ கோர முடியாது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல