வியாழன், 24 செப்டம்பர், 2015
ஜிமெயிலில் ஆவணக் காப்பகம்
மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணுவோரும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.
Labels:
கணணி மையம் (Gmail)
எக்ஸெல் டிப்ஸ்... பைல்களை ஒழுங்கு படுத்த, பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி
எக்ஸெல் புரோகிராமில், பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், நமக்கு File Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த டயலாக் பாக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்தில், பல செயலிகளுடன் நாம் பயன்படுத்தும் அதே டயலாக் பாக்ஸ் ஆகத்தான் உள்ளது. இருப்பினும், இதில் காட்டப்படும் பைல்களை, நாம் ஏதேனும் ஒரு வகையில் ஒழுங்கு படுத்திப் பெறலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்! நீளவரியை மடக்கி அமைக்க, வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்
நீளவரியை மடக்கி அமைக்க:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண் 8 சறுக்கல்கள்
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின்னர், தன் தொடு உணர் திரை தொழில் நுட்பத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தை, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்கமும் வெகு சிறப்பாக இருந்தது. புதிய வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம், டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் கிடைத்து பலர் மகிழ்ச்சியுடன் மாறிக் கொண்டனர்.
Labels:
கணணி மையம் (Windows 10)
வேர்ட் டிப்ஸ்! வேர்டில் எப்2 கீ:
டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்! ஸ்கிரீன் டிப்:
வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்! வேர்டில் எக்ஸெல் ஒர்க்ஷீட் சார்ட் பதித்திட:
பொதுவாகவே, மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள சார்ட் ஒன்றை அப்படியே பதித்திடலாம். இதனைக் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
இசைப் பாடல்களை இலவசமாகப் பதிய
பாடல்களை, எம்பி3 வடிவிலோ அல்லது வீடியோ பைல்களாகவோ தேர்ந்தெடுத்துப் பதிவது தற்போது அனைவரும் மேற்கொள்ளும் பழக்கமாக உள்ளது. பல இணைய நிறுவனங்கள், இந்தப் பாடல் கோப்புகளைப் பதிந்து வைத்திட, இலவசமாகவும், கட்டணம் பெற்றுக் கொண்டும், தங்கள் சர்வர்களில் இடம் தந்து வருகின்றன. இதன் மூலம், நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இவ்வாறு சேமித்து வைத்த பாடல் கோப்புகளைப் பெற்று இயக்க முடியும். அத்தகைய தளங்களையும், அவற்றின் இலவச மற்றும் கட்டண திட்டங்கள் சிலவற்றையும் இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (MP3)
ஆண்ட்ராய்ட் சிஸ்ட ஸ்மார்ட் போனில் பதிந்திருந்த இணைய தள முகவரிகளை அழிக்க
இணையத்தில் தள முகவரிகள் மட்டுமின்றி, நாம் பார்த்த யு ட்யூப் படங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் தேடியவை, புத்தகங்கள் போன்ற அனைத்து தேடல்களும் பதியப்படுகின்றன. ஸ்மார்ட் போனில், இலவசமாக எந்த அப்ளிகேஷனையோ அல்லது ஒரு பொருளையோ பெற்றாலும், அது தளம் சார்ந்து பதியப்படுகிறது.
தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் “My Apps” என்ற பட்டியலில் இடம் பெறும்.
தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் “My Apps” என்ற பட்டியலில் இடம் பெறும்.
Labels:
கணணி மையம் (Android)
எக்ஸெல் டிப்ஸ்... ஒரே நேரத்தில் இரண்டு ஒர்க் ஷீட்கள்
ஒரே நேரத்தில் இரண்டு ஒர்க் ஷீட்கள்: பலர், இரண்டு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து, ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் பணிகளைத் தொடர விரும்புவார்கள். அல்லது ஒரே ஒர்க் ஷீட்டின் இரு நகல்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் தேவை ஏற்படலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
எக்ஸெல் டிப்ஸ்... நெட்டுவரிசைகளைப் பிரித்தல்
நெட்டுவரிசைகளைப் பிரித்தல்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்?
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
எக்ஸெல் டிப்ஸ்... வித்தியாசமான ஷார்ட் கட் கீகள்
வித்தியாசமான ஷார்ட் கட் கீகள்: செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் மெனு தேடி அவற்றை அமைக்காமல், ஷார்ட் கட் கீகள் மூலம் அமைப்பது எளிமையான ஒன்றாகும். இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும். இதற்கென, எக்ஸெல் சில ஷார்ட்கட் கீ வசதிகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த
நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம். கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம். இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள். சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.
Labels:
கணணி மையம் (Android)
வேர்ட் டிப்ஸ்! டேபிள் ஒன்றை வரைய
டேபிள் ஒன்றை வரையலாம்: வழக்கமாக வேர்ட் புரோகிராமில், ரிப்பனில் கிடைக்கும் insert டூலைப் பயன்படுத்தி, நாம் டேபிள் ஒன்றை டாகுமெண்ட்டில் இணைப்போம். இதற்குப் பதிலாக, டேபிள் ஒன்றை நாம் வரையும் வகையில், வேர்ட் draw~-a~-table என்ற டூலைத் தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியும் நாம் டேபிள் ஒன்றை உருவாக்கலாம்; அதாவது வரையலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


