புதன், 20 பிப்ரவரி, 2013

புதிய தலைமுறை விஷேச செய்திகள் (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

“பிரபாகரனின் மகன் சரணடைந்த போட்டோக்களை உறுதிப்படுத்த முடியவில்லை”

“நம்ப முடியலிங்க”
“விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தமது மெய்ப்பாதுகாவலர்களுடன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தபின் கொல்லப்பட்டதாக காண்பிக்கப்படும் போட்டோக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை” இவ்வாறு கூறியிருக்கிறார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித்.

பிரபாகரனை ராணுவ முகாமில் வைத்து சுட்டுக் கொன்றதா இலங்கை ராணுவம்?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்து ராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்து கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்மா மெஸ்: இட்லி வாங்க சர்ரென்று வந்து நின்றது புத்தம் புதிய இன்னோவா கார்!

முதல்வர் ஜெயலலிதாவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட மலிவு விலை உணவகங்கள், ஏழை மக்களுக்காக என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இந்த மலிவு விலை உணவகங்களில் உண்பதற்காக வந்தவர்கள் பெரும்பாலானோர், கார்களில் வந்திருந்தனர்.

விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர் விமான நிலையத்திற்குள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் விமானத்தில் பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சூரியதேவனின் மகன் சந்திரனுக்கு நடந்தது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வன் 12 வயது பாலச்சந்திரன் படையினரால் கொல்லப்படவே இல்லை என்று தெரிவித்து உள்ளார் இறுதி யுத்தத்தின்போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல