வியாழன், 17 பிப்ரவரி, 2011
கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
மீனவர்கள் பிரச்சினைக் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் கீழே....
17.02.2011
கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு
கலைஞர் அவர்களுக்கு
ஓர் அவசரக்கடிதம்!....
பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!...
17.02.2011
கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு
கலைஞர் அவர்களுக்கு
ஓர் அவசரக்கடிதம்!....
பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!...
கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்
சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்
வரலாற்றில் இன்று (17.02.2011)
இலங்கை தமிழ் இளைஞர்கள்
அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது எச்.எல். ஹன்லி எனும் நீர்மூழ்கி கப்பல் அமெரிக்க யுத்த கப்பலொன்றை மூழ்கடிப்பதில் பங்குபற்றியது. யுத்த கப்பலொன்றை மூழ்கடித்ததில் சம்பந்தப்பட்ட முதலாவது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.1924: முதலாவது காலநிலை செய்மதியான வான்கார்ட்-2 ஏவப்பட்டது.
1979: வியட்நாம் மீது சீனா படையெடுத்தது.
Labels:
இன்று
உலகின் மிகவும் சிக்கனமான நீர் பாவனையுள்ள மலசலகூட உபகரணம்
மலசலகூட உபகரணங்களை உற்பத்தி செய்து வரும் முன்னணி ஜப்பானிய கம்பனியான “இனக்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் சிக்கனமான நீர்ப் பாவனையுடைய புதிய மலசலகூட உபகரணத்தை படத்தில் காணலாம்.
ஒரு தடவை கழுவுவதற்கு 4 லீற்றர் நீரை மட்டும் உபயோகிக்கும் “சற்றிஸ்' என்ற மேற்படி மலசலகூட உபகரணம் செவ்வாய்க்கிழமை டோக்கியோ நக ரிலுள்ள நிறுவனத்தின் காட்சிகூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது ஊழியர் ஒருவர் விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.
ஒரு தடவை கழுவுவதற்கு 4 லீற்றர் நீரை மட்டும் உபயோகிக்கும் “சற்றிஸ்' என்ற மேற்படி மலசலகூட உபகரணம் செவ்வாய்க்கிழமை டோக்கியோ நக ரிலுள்ள நிறுவனத்தின் காட்சிகூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது ஊழியர் ஒருவர் விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
காதலனை சந்திக்கும் முயற்சி மரணத்தில் முடிந்த அவலம்
தனது ஆருயிர் காதலனை சந்திப்பதற்காக 8 ஆம் மாடியிலுள்ள குடியிருப்பொன்றிலிருந்து துவாய்கள் மற்றும் ஒரு படுக்கை விரிப்பு என்பவற்றை இணை த்து கட்டி கீழ் தளமொன்றிலுள்ள வரவேற்பு பகுதிக்குள் தரையிறங்க முயற்சித்த இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர், கை நழுவி தரையில் விழுந்து பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
பன்முக கலைஞர் கபிலா வாத்சாயன்
இந்திய குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் பெருமைமிகு பத்ம விபூஷண் விருது பெற்றவர்களின் பட்டியலில் பிரபல நாட்டிய கலைஞர் கபிலா வாத்சாயனின் (82) பெயரும் இடம்பெற்றிருந்தது. நாட்டிய துறைக்காக இவர் ஆற்றியுள்ள பணிகளை கெளரவிக்கும் வகையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
Labels:
பெண்கள் பக்கம்
மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் புகைப் பழக்கத்தை விட முடியுமா?
மருத்துவ சிகிச்சை மூலம் புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக உலகளவில் ஆண்டுதோறும், 50 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக பலியா கின்றனர். சிலர், அந்த பழக்கத்தை எளிதாக விட்டு விடுகின்றனர். சிலரால், என்ன செய்தும் அந்த பழக்கத்தை விட முடிவதில்லை.
Labels:
மருத்துவம்
ஆண் நண்பர் இல்லை; இங்கிலாந்து அழகி ஏக்கம்
இங்கிலாந்து நாட்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர், ஜெசிகா லைன்லி. சட்ட மாணவியான இவர், ஆறு மாதங்களுக்கு முன் `மிஸ் இங்கிலாந்து' பட்டம் பெற்றார். ஆனால், இதுவரை ஒரு ஆண் நண்பர் கூட தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 5 அடி 11 அங்குலம் உயரத்துடன் ஆண்களை கவரும் வகையில் இருக்கும் இந்த 21 வயது அழகியை யாரும் காதலிக்கவும் இல்லை.
Labels:
வினோதமான செய்திகள்
மாட்டையும் கடத்துகிறார்கள்
மண்டைதீவில் உரிமை கோரப்படாத மாடுகளை கடத்தி அவற்றை இறைச்சிக்கு வெட்டும் நடவடிக்கையில் வெளியார் சிலர் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். இவ்வாறு இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த மாடொன்றினை படையினர் கண்டு அதனை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இத்தகைய நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Labels:
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



















