புதன், 27 ஏப்ரல், 2016

ஆண்களின் வலது கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறியலாம்

 Researchers in South Korea say finger ratios affect the size of testicles. Men with larger testes were found to have longer ring than index fingers. The study was based on 172 Korean men aged 20 to 69 years old. In the image above, the hand on the left would have smaller testicles than the one on the right

ஜோதிடத்தின் படி, கையை வைத்து ஒருவரது எதிர்காலத்தைக் கணிப்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே கையை வைத்து ஒருவரின் இனப்பெருக்கத்தைக் கூற முடியும் என்பது தெரியுமா? ஆம், சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஆணின் விதைப்பையின் அளவை அந்த ஆணின் வலது கையைக் கொண்டு அறிய முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஹார்ட் ட்ரைவைப் பூட்டிவிடும் 'பெட்யா' வைரஸ்

ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அண்மையில் புதியவகை பிணைப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் PETYA Crypto-ransomware.

பழக்கத்தில் இல்லாத பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும். இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வேர்ட் டிப்ஸ்... ஹைலைட் செய்த சொற்களை மாற்ற - சொற்களுக்கிடையே அடிக்கோடு

ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒரு வாசகர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்துள்ளதாகவும், பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எழுதி உள்ளார். தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலுமா? எனக் கேட்டுள்ளார். இவருக்கான பதிலை அனைவரும் படிக்கும் வகையில் டிப்ஸாக இங்கு தருகிறேன்.

எக்ஸெல் டிப்ஸ்... பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட - தலைப்பு தொடர்ந்து காட்டப்பட

பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட: நீங்கள் முதன் முதலில், எக்ஸெல் புரோகிராமினைத் தொடங்குகையில், காலியாகக் காணப்படும் ஒர்க் ஷீட்டில், சில அம்சங்கள், மாறா நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருகக்கும். அவற்றில் நீங்கள் ஒர்க் ஷீட் அச்சடிக்கையில் தேவைப்படும் பக்க மார்ஜின் ஒன்றாகும். நீங்கள் இதனை மாற்றி அமைக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும்.

தமிழுக்கான புதிய யுனிகோடு எழுத்துருக்கள்

கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்திட, மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நமக்கு மாறா நிலையில் கிடைப்பது 'லதா' என்ற பெயரில் கிடைக்கும் எழுத்துருதான். வேறு சில தமிழ் சாப்ட்வேர் மற்றும் ட்ரைவர்கள் வழங்குவோர், சில யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைத் தந்துள்ளனர்.

வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்யப்படுமா?

வாட்ஸ் அப் செயலிதான் இன்று பன்னாட்டளவில், உடனடியாக செய்திகளை, போட்டோக்களை அனுப்ப அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. அண்மையில், இதில் பதிந்து அனுப்பப்படும் தகவல்கள், முழுமையாக 'என்கிரிப்ட்' (தரவுமுறையினை மறைக்கப்பட்ட குறியீடாக மாற்றி அனுப்பும் முறை) செய்யப்படும் என வாட்ஸ் அப் அறிவித்தபோது, பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்தியாவில் இது அனுமதிக்கப்படாது என்றே தெரிகிறது.

சனல் 4 வெளியிட்ட புகைப்படத்திலிருந்த 5-வது நபரும் அடையாளம் காண்பிப்பு

image source: google
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளியான தனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்டது என இராணுவ த்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல