இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரற்றிக்கா சமீபத்தில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி பலராலும் அறியப்பட்ட விடையம். கோத்தபாயவின் மனைவிக்கு நாய் குட்டி ஒன்றை சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதிசெய்ய கோத்தபாய ஆடிய நாடகத்தை பிரற்றிக்கா எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்த கோத்தபாய அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் மலம் தின்னும் பன்றி ஊடகவியலாளர் நீங்கள் என்று கத்தியுள்ளார். இதனையும் அவர் வெளியிட்டு, கோத்தபாயவை மேலும் சங்கடத்தில் போட்டார். முன்னர் தான் பிரற்றிக்காவுக்கு தொலைபேசி அழைப்பை விடுக்கவில்லை என கோத்தபாய நிராகரித்திருந்தார்.
வெள்ளி, 26 அக்டோபர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



