கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்வதற்கு முயற்சி
உலகின் மிகவும் குள்ளமான நபர் தானே என நேபாளத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.
தலைநகர் காத்மண்டுவின் தென்மேற்கே பெயிரஹவா என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாஸ்டர் நயு (73 வயது) என்ற மேற்படி நபர், தன்னை உலகின் மிகவும் குள்ளமான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முகமாக காத்மண்ட் நகருக்கு திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார்.










