புதன், 10 ஜூன், 2015

நிர்வாண ஆட்டத்தால் நிலநடுக்கம்.. இங்கிலாந்துப் பெண் மலேசியாவில் கைது.. 10 எருமை கொடுத்தால் விடுதலை!

மலேசிய மக்கள் புனிதமாக கருதும் கினபாலு மலைப் பகுதியில் நிர்வாண ஆட்டம் போட்டு கொண்டாடியதால் மலை சினம் கொண்டு, அதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறி வந்த புகாரைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உள்பட சிலரை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கினபாலு மலைப்ப குதியில் மே 30ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்திற்கு 16 பேர் பலியானார்கள்.

சிறுநீரகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!!!

தற்போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், பலரும் சிறுநீரக நோய்களுக்கு உள்ளாகின்றனர். உடல் உறுப்புக்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் சிறுநீரகம். இந்த சிறுநீரகம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல பணிகளை செய்கிறது.

அப்ப, இன்னும் ஒபாமா "தம்"மை விடலையா...??

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிகரெட்டை விட்டு விட்டதாக கூறப்பட்டாலும் கூட சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம், அவர் இன்னும் சிகரெட்டை விடவில்லையோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. ஜெர்மனியில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த ஒபாமா அங்கு ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது கையில் சிகரெட் பாக்கெட் போல ஒன்று வைத்திருந்தது சலசலப்பைக் கிளப்பியுள்ளது. ஒபாமா கையில் இருந்தது சிகரெட் பாக்கெட்தான் என்று கூறப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல