வியாழன், 27 மார்ச், 2014

பிரபாகரனின் இந்த புகைப்படத்தின் கதை...!!

பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் சென்னை பாண்டி பஜாரில் பொதுமக்கள் நடமாடிய ஒரு தினத்தில் பரஸ்பரம் சுட்டுக் கொண்டனர்.

இச் சம்பவம் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை : வைத்திய நிபுணரின் சாட்சியத்துடன் காணொளியை வெளியிட்டது சனல்-4 !!

இறுதி நாளில் என்ன நடந்தது சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது.

ஷூமாக்கரின் ரசிகர்கள் கெட்ட செய்தியை கேட்க தயாராகுங்கள்: முன்னாள் எஃப் 1 டாக்டர்

பாரிஸ்: கோமாவில் இருக்கும் முன்னாள் பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் குறித்த சில வருத்தம் அளிக்கும் தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று முன்னாள் பார்முலா நம்பர் ஒன் தலைமை மருத்துவர் கேரி ஹார்ட்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

நாடே சோகத்தில் மூழ்கியுள்ளபோது கோல்ப் விளையாடிய மலேசிய ராணி (படங்கள் இணைப்பு)

கோலாலம்பூர்: மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் கடலுக்குள் விழுந்த சோகத்தில் மலேசியா இருக்கையில் அந்நாட்டு ராணி கோல்ப் விளையாடியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம்- இந்தியா புறக்கணிப்பு!!

ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

சின்ன வெங்காய அறுவடை…

யாழ்ப்பாணத்தில் தற்போது சின்ன வெங்காய அறுவடை மும்முரமாக மேற் கொள்ளப்படுகின்றன. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்ததைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட விவசாயிகள் வெங்காயச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டினர்.
யாழ்ப்பாணச் சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபா முதல் 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா பொத்தி வைத்த ரகசியம் இதோ இதுதான்!

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.

இலங்கையை ஆக்கிரமித்திருக்கும் Facebook மோகம்

உல­க­ளா­விய ரீதியில் பேஸ்புக் வலையில் விழு­வோரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இதற்கு இலங்கை மாத்­திரம் விதி ­வி­லக்­கல்ல.

பேஸ்புக் பற்றி அறிந்­து­கொண்டு அதனைப் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் சாத­க­மான பலன்­களை அனு­ப­விக்கும் அதே­வேளை அது­பற்றிய அடிப்­ப­டையைக் கூட அறிந்­து­கொள்­ளாமல் பயன்­ப­டுத்­து­ப­வர்­களின் கதி ஆழம் அறி­யாமல் காலை விட்­டது போலத்தான்..!

உள்ளாடை அகற்றப்பட்டிருந்தது: குராமின் காதலி சாட்சியம்

என்னுடைய காதலனை தாக்கிய நபரை தங்காலை நீதிமன்றத்தில் வைத்தே அடையாளம் கண்டுவிட்டேன். உயிர் மீது இருந்த அச்சத்தின் காரணமாக அவரை நான் அடையாளம் காட்டவில்லை என்று பிரித்தானிய பிரஜையான குராம் ஷேகின் காதலியான விக்டோரியா எலஸ்சென்றானா சாட்சியமளித்தார்.

யாழ்ப்பாணத்தில் வீசும் மாற்றத்துக்கான காற்று

 KFC in Jaffna

யாழ்ப்பாணத்தில் போர் தீவிரமடைந்த காரணத்தால் முன்னர் நாங்கள் வாழ்ந்த எங்கள் பழைய யாழ்ப்பாணத்தை திரும்பவும் அடைவது தவிர்க்க முடியாதது என்பது எங்களுக்கு தெரியும். யுத்தம் நடந்த வருடங்களில்கூட மிக நுட்பமான முறையில் புதிய யாழ்ப்பாணம் ஒன்று உருவாகும் அடையாளங்கள் இருக்கத்தான் செய்தன. கடந்த 5 வருடங்களில் நான் யாழ்ப்பாணத்துக்கு 13 தடவைகள் சென்றுள்ளேன். ஆனால் கடந்த 2014 ஜனவரியில் சென்றபோது யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சர்வதேச அடையாளங்களை விட சிறந்த முக்கியமான மாற்றங்கள் எதையும் முன்னர் கண்டதில்லை.

புலிகளுக்கு உதவிய கனடா இளைஞனுக்கு இரு வருட சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதம் வாங்கியமைக்க்காக 08 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ரோரன்ரோவை சேர்ந்த ஆட்களில் கடைசி நபருக்கும் நியூயோர்க் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

புலித் தலைவர் கோபிக்கு ஆதரவான இளைஞர் நால்வர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படுகின்ற கோபியை கண்டு பிடிக்க பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்று கோரி பொலிஸாரால் பொது இடங்களில் இடப்பட்ட சுவரொட்டிகளை அகற்றியமைக்காக முல்லைத்தீவில் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தியரை கொன்ற இளைஞனுக்கு டுபாயில் மரண தண்டனை தீர்ப்பு!

இந்திய தொழிலதிபரை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டு, சார்ஜா மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார் இலங்கை இளைஞன் ஒருவர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல