செவ்வாய், 26 மார்ச், 2013

பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்..திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் திரைப்பட நடிகையான சுகுமாரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்?

இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே . உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.

பிளாஸ்டிக் (Plastic) எப்படி உருவானது?

பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை ...!

புளுகுவதற்கு ஒரு அளவு கணக்கே கிடையாதா??????

விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. புதுக்கோட்டையில் நடந்த பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து புதுக்கோட்டை பாவாணன் பேசிய பேச்சுகளை கேட்டு உணர்வாளர்களே உருகிவிட்டனர்.

விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது.

ஐயோ! ஐயோ! எண்டு சனம் அலறித்துடிச்சாலும்

ஐயோ! ஐயோ! எண்டு சனம் அலறித்துடிச்சாலும் நாங்கள் எங்கள் திருட்டுப் பிழைப்பை நிறுத்த மாட்டமியா!

ஐபோன், ஐபோன், எண்டு T.C.C பணம் தின்னும் பிசாசுகள் தமது பிள்ளைகளுக்கு புதுவீடும், புதுக் காரும் வாங்கிறதுக்கான திட்டம்தான் இது. இவங்கடை பிள்ளைகளுக்கு எப்பனும் வெக்கம் மானம் இல்லையோ!

அரை உண்மைகளின் அபாயம்

 
பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை

லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.

9 வயது சிறுமிக்கு நடுஇரவில் நேர்ந்த சோகம்

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சியெரா நெடுஞ்சாலையில், ஹாலிவுட் நகரை சேர்ந்த அலிஜேந்த்ரா ரெண்டாரிய (35) என்பவர் தனது 9 வயது மகளுடன் போர்டு எஸ்கேப் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது.

‘காந்தி’ திரைப்பட இயக்குநர் முதியோர் இல்லத்தில்

”காந்தி” படத்தை இயக்கியவரும், புகழ்பெற்ற நடிகருமான ரிச்சர்ட் ஆட்டன்பரோ (89) முதுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆட்டன்பரோ 2008ம் ஆண்டில் தவறி கீழே விழந்ததால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு சக்கர நாற்காலியை பயன்படுத்த தொடங்கி விட்டார்.

“தமிழ் மக்களுக்கு இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் தர தயார்”

“இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசு தயார்” என அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். “உங்களுக்கு இந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல