திங்கள், 19 நவம்பர், 2012

ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொடுத்தா கூட கைதாகலாம்!

ஃபேஸ்புக்கில் ஏதாவது கமெண்ட் போட்டாலோ, ஏன் அதற்கு லைக் கொடுத்தாலோ கூட கைது செய்யப்படலாம் என்ற நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தபோது மும்பையில் நடந்த பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய 21 வயது பெண் ஷாஹீன் மற்றும் அதற்கு லைக் கொடுத்த ரேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஒரு நடிகை.... மனித வெடிகுண்டாக மாறிய கதை!

ரஷியாவில் பெண்கள் மனிதவெடிகுண்டாக மாறி மதவாதிகளை பலியெடுப்பது தொடர் கதையாகி வருகிறது.. அண்மையில் டெஜஸ்தான் (Dagestan) மாகாணத்தில் 7 பேரை பலிகொண்ட மனித வெடிகுண்டு பெண்ணின் கதை சற்றே வித்தியாசமானது.....

கமல் உடல்நிலை... மீடியா கிளப்பிய பரபரப்பு!!

விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மீடியாவில் வெளியான செய்திகள் அவரது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது.

தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைக்கும் வைபவ காட்சிகள் சில (படங்கள் இணைப்பு)

வயிற்றுக்கு உணவில்லாதபோது (தமிழ்) உணர்வுக்கு இடம் ஏது?

தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் என்ற செய்தி ஆச்சரியத்திற்குரியதுதான். தமிழர்கள் என்றால் அவர்களை பொலிஸில், இராணுவத்தில் இணைக்கக்கூடாது என்பது அரசின் இறுக்கமான கொள்கையாக இருந்தது. அதேநேரம் இராணுவத்தில், பொலிஸில் இடம் பெற்றிருந்த தமிழர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் கடும் கோபம் கொண்டிருந்தனர்.

எப்போதுதான் உணரப்போகிறீர்கள் ஈழத்தமிழ்ர்களே...?






 


தமிழகத்திலிருந்து தோழர் சன்னா அவர்கள் பொதுவெளியில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி எழுப்பும் கேள்விகளும், போட்டுடைக்கும் உண்மைகளும்.
 
புலம் பெயர்ந்தத் தமிழர்களே.......
- சன்னா.

உலகில் நீங்கள் மட்டும்தான் ஒடுக்கப்பட்டவர்களா.. உங்களை ஆதரித்த பாவத்திற்காக உங்களை ஆதரிக்கும் சாதி இந்துக்கள் தருமபுரியில் செய்த வெறியாட்டத்தை பாருங்கள்..

கொள்ளை, தீ வைப்பு ஈழமண்ணில் மட்டும் நடக்கவில்லை, தமிழகத்திலும் நடப்பதைப் பாருங்கள். இதை நடத்துபவர்கள் சிங்களவர்கள் இல்லை. ராசபட்சேக்கள் இல்லை.. உங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்கும் சாதித் தமிழர்கள். இவர்களைத் தான் இத்தனைக் காலம் நீங்கள் நம்பி ஏமார்ந்திருக்கிறீர்கள். நம்பிக்கை துரோகிகள். கபட வேடதாரிகள்.

மும்பை தாதாவை மகாத்மா ரேஞ்சிக்கு உயர்த்துகிறீர்களே... நியாயமா...?

அம்மாடியோ.... இன்னிக்கு இந்தியாவில யாரு வீட்டுக்குப் போனாலும் ஒரே ஒப்பாரி சத்தமாக தான் இருக்கிறது. எல்லா தொலைக்காட்சிகளிலும் பால் தாக்கரேவின் இறுதி ஊர்வலம் தான் காட்டுகிறார்கள். ஒரு மும்பை தாதாவின் பெருமைகளையும், மகிமைகளையும் அவர்களால் சொல்லி சொல்லி மாளவில்லை. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சேர்ந்து பால் தாக்கரேவை ஒரு மகாத்மா ரேஞ்சிக்கு - ஒரு மகான் ரேஞ்சிக்கு உயர்த்திக் காட்டி இந்திய மூளைகளுக்கு அவர்களுக்கே தெரியாமல் காவி வண்ணம் பூசுகிறார்கள்.

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…01

‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே, விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு.

ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், மக்களே பலியாடுகளாகியிருக்கின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல