புதன், 4 ஆகஸ்ட், 2010

நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி (வீடியோ இணைப்பு)

நம்பிக்கைதான் வாழ்க்கை என்று கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களின் பிரமுகர்களுடனான சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கழிவறையை விட அழுக்கானது கையடக்கத் தொலைபேசி

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை ‘நடமாடும் நோய்க்கூடம்’ என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.

உலகில் நீளமான முடிக்காரர்

6.2 மீட்டர் நீள முடி


பெண்களுக்கு நீண்ட கூந்தலின் மீதுள்ள ஆர்வம் குறைந்து வருவதாலோ என்னவோ ஆண்கள் மத்தியில் நீளமாக முடி வளர்ப்பதில் கவனம் அதிகரித்துள்ளது. அதனால்தான் போலும் உலகில் நீளமான முடிவளர்த்து ஒரு ஆணே சாதனை படைத்திருக்கிறார்.

மொட்டைத் தலையுடனும் , கால் இல்லாமலும் ஜப்பானியர் வடிவமைத்துள்ள ரோபோ டெலநாய்டு ஆர்

ரோபோக்களை உருவாக்குவதிலும் வடிவமைப்பதிலும் ஜப்பானியர்கள் கெட்டிக்காரர்கள். அந்த வகையில் ஹிரோஷி இஷிகுரோ என்ற ஜப்பானியரின் புதிய மிகவும் வித்தியாசமான உருவாக்கம் தான் டெலநாய்டு ஆர்.

பாலியல் உறுப்புகளுக்கு யப்பானில் திருவிழா! (படங்கள் வீடியோ இணைக்கப்பட்டுள்ளன)

யப்பானிய மக்கள் ஒவ்வோராண்டும் வசந்த காலத்தை காமத் திருவிழாக்கள் மூலமாக வரவேற்பார்கள். இந்தக் காமத் திருவிழாக்கள் வழமையாக மார்ச் மாத நடுப் பகுதியில் மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும்.

வேளாங்கண்ணியில் அதிசயம் ! தோண்ட தோண்ட சிலைகள்

வேளாங்கண்ணியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 13 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

பிண சூட்கேசுடன் வந்தபெண்கள் திடீர் மாயம்

தராபாத் மொகதிபட்டின பேருந்து நிலையத்தில், நேற்று (ஆக.3) மதியம் ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ஒரு காரில் வந்த 2 பெண்கள் பெரிய சூட்கேஸ் ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்று விட்டனர்.

என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என நம்பவில்லை-சொல்கிறார் கேபி

கொழும்பு: உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என என நான் நம்பவில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்கி கொண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு விடுதலைப் புலிகள் தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் கேபி. ஆனால் மலேசியாவில் வைத்து அவரை இலங்கை உளவுத்துறையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் இலங்கை அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். அவர் கைது செய்யப்பட்டதே ஒரு நாடகம்தான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஐலன்ட் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியை தொடர்ந்து பிரசுரித்து வந்தது அப்பத்திரிக்கை. இதுபோக கேபி அளித்து வெளிவராமல் இருந்த ஒரு பேட்டியின் விவரம் தெரிய வந்துள்ளது.

அதன் விவரம்:

பாரதிராஜாவா..... பசில்ராஜாவா ?

சீமான் விவகாரம்... சீறும் அமீர்!

''சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' - தமிழ் இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாட நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா இப்படி சில வார்த்தைகளைக் கொட்ட, ஈழ ஆதரவு இயக்குநர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஏற்கெனவே, ராமேஸ்வரம் போராட்டத்துக்காக சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் திகுதிகுவாக வெடித்திருக்கிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல