செவ்வாய், 30 நவம்பர், 2010

அணுசக்தி விஞ்ஞானி குண்டுத்தாக்குதலில் பலி (படங்கள் இணைப்பு)

மஜீத் ஷஹ்ரியா
ஈரானில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் அந்நாட்டு அணுசக்தி விஞ்ஞானியொருவர் பலியானதுடன் பிறிதொரு அணுசக்தி விஞ்ஞானி காயமடைந்துள்ளார். மேற்படி அணு சக்தி விஞ்ஞானிகள் பயணம் செய்த கார்களிலேயே குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம் பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.பழைய கட்டிடம் ஒன்றினை உடைத்துக் கொண்டிருந்தபோது அக் கட்டிடம் இடிந்து விழுந்ததினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழிந்த சப்பாத்தை திரும்பத்திரும்ப தைத்து அணிந்த கோடீஸ்வரர்

லி கா சிங், ஹொங்கொங் நாட்டின் அதி பிரபல செல்வந்த வர்த்தகர். இவர் கிழக்கு ஆசியாவின் பெரும் பணக்காரர், உலகில் 14 ஆவது செல்வந்தர், பெப்ரவ 2010 மதிப்பீட்டின் படி 21.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்திற்கு அதிபதியாவார்.

27 வருடங்களாக ஒரே துவாயைத் தொடர்ந்து உபயோகித்த பெரும் செல்வந்தர்

வாங் யங் சிங்க் என்பவர் தாய்வான் தேசத்தில் பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை நிறுவிய செல்வாக்குள்ள பிரபல தொழிலதிபர். 2008 ஆம் ஆண்டு போப்ஸ் சஞ்சிகை நடத்திய ஆய்வின்படி இவர் 5.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்தைக் கொண்டுள்ள உலகில் 148 ஆவது செல்வந்தராவார். இவர் ராய்ப்பாய் நாட்டில் சின் தின் நகரில் பிறந்தார்.

சூனியத்தில் ஈடுபட்ட 72 வயது பெண்மணி உயிருடன் தீவைத்து படுகொலை

சூனியக்காரியாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 72 வயது பெண்மணி ஒருவர் 5 பேரைக் கொண்ட குழுவினரால் உயிருடன் தீவைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கானாவில் இடம்பெற்றுள்ளது.

பிஸ்கட் உண்ட 14 வயது சிறுமிக்கு உள்ளங்கைகளில் சூடம் ஏற்றி கொடுமை

ஐந்து பிஸ்கட்டுக்களை வீட்டு உரிமையாளர் இல்லாத சமயம் உண்டமைக்கான தண்டனையாக 14 வயது சிறுமியின் உள்ளங்கைகளில் சூடம் ஏற்றி கொடுமை செய்த சம்பவம் ஒன்று மொறாஹேன பகுதியில் இடம் பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல