காப்ஃபைன் அடங்கிய உணவுகளை உட்கொண்டால் உடல் மற்றும் மன ரீதியான சோர்வுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளங்கும் என்று சொல்லப்படுகிறது. அதனை குறைவான அளவில் உட்கொண்டால் சிறப்பாக செயல்பட்டு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதன் ஊக்குவிக்கும் செயல்திறன் பல பேரை அதற்கு அடிமையாக்கி விடுகிறது. அதனால் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வேலை செய்ய சில பேர் அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் ஏற்பட போவது நரம்பு தளர்ச்சி, பதற்றம், தசைத்துடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற உடல் நல கோளாறுகளே. இன்றைய வாழ்க்கை சூழலில், பல பேர் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தங்கள் ஆற்றலை வெளிக்காட்ட துடிக்கின்றனர். அதனால் பல பேர் காப்ஃபைன் மற்றும் காப்ஃபைன் எனர்ஜி பானங்களை குடித்து தெம்பாக இருக்கின்றனர். ஒரு முறை அடிமையானால் காஃபினை கைவிடுவது அவ்வளவு சுலபம் கிடையாது.
சனி, 23 நவம்பர், 2013
அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...
உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.
Labels:
பலதும் பத்தும்
காதலரின் பெற்றோர்களை சந்திக்க போறீங்களா?
ஒருவரை முதலில் சந்திக்கும் போது என்ன வகையான தோற்றத்தை ஏற்படுத்துகிறோமோ, அதுதான் அவரை மீண்டும் சந்திக்கும் போதும் நிலைத்து நிற்கும் என்று சொன்னால் அதில் உண்மை பொதிந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இப்படியிருக்கும் போது, எந்தவொரு பெண்ணும், தன்னுடைய காதலனின் பெற்றோர்களை முதன்முதலில் சந்திக்கும் போது பதட்டமடைவதையும் தவிர்க்க முடியாது. 'அவர்கள் என்னை விரும்புவார்களா? எனக்கு அவர்களை பிடிக்குமா?' என்பது போன்ற எண்ணங்கள் அப்பொழுது அவர்களை அலைக்கழிப்பதையும் தவிர்த்திட முடியாது. உங்களுடைய காதலரின் பெற்றோர்களை நீங்கள் முதன் முதலில் சந்திக்கும் அதில் தவறுகள் நடக்காத வண்ணம் நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீறி தவறுகள் நடந்தால், எதிர்காலத்திலும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
Labels:
ஆண்கள் பக்கம்,
பெண்கள் பக்கம்
மாமியார்-மருமகள் சண்டைகளை தவிர்ப்பதற்கான வழிகள்!!!
ஒவ்வொரு பெண்ணும் தனது திருமண வாழ்வைப் பற்றி கனவு கண்டிருப்பாள். அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்றே விரும்புவாள். இது மட்டுமல்லாது புகுந்த வீட்டில் தனது கணவரின் உறவினர்களும் தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவே பெரிதும் விரும்புவாள். இதே போன்ற உணர்வை தான் கணவரது உறவினர்களும் கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு வரும் மருமகள் புகுந்த வீட்டில் நல்லுறவை ஏற்படுத்துவாள் என்று நம்புவார்கள்.
Labels:
பலதும் பத்தும்
உறவுகளில் பிரச்சனைகள் வராமலிருக்க ஃபேஸ்புக்கில் நிச்சயம் செய்யக்கூடாதவைகள்!!!
நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைய வழி சமூக வலைத்தளங்கள் மாறி விட்டன. நம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாம் விரும்பும் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள மிகவும் இன்றியமையாத சாதனங்களாக இவை உள்ளன. குறிப்பாக ஃபேஸ்புக்கானது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேருக்கும் மேலாக பயன்படுத்தப்படும் வலைத்தளமாக உள்ளது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வழியாக தொடர்பு கொள்வது மிகவும் எளிய விஷயமாக இருப்பதே இதன் காரணமாகும். இது நம்மை அனைவருடனும் தொடர்பில் இருக்க வைக்கிறது. மேலும், உங்களுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லையென்றால், உலகை விட்டே விலகியுள்ளவர் போல நடத்தும் நிலையும் கூட இன்று நிலவி வருகிறது.
Labels:
பேஸ்புக் (Facebook)
கார்த்திகை பூக்களை தேடி அழிக்கும் சிங்கள படையினர்
விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் வன்னியில் உள்ள சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு கிளிநொச்சி வடமராட்சி கிழக்கு உட்பட வன்னிப்பிரதேசங்களிலேயே கார்த்திகை பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் மழைக்காலம் ஆரம்பித்ததும் மரங்களிலும் வேலிகளிலும் படரும் கார்த்திகை மரத்தில் பூக்கும் கார்த்திகை பூக்களை விடுதலைப்புலிகள் தமிழீழ தேசிய மலர்களாக அறிவித்தனர்.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள்
இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை சிவிலியன் விருதுகள். அரசியல் சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
Labels:
பலதும் பத்தும்
``கள்ளன் - பொலிஸ் விளையாட்டு...?´´
ஒருகாலத்தில் கிராமத்து சிறார்களினால் பெரிதும் விரும்பப்பட்ட ‘கள்ளன் – - பொலிஸ் விளையாட்டு’ பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அது, கள்வர்களாக பாத்திரமேற்கும் சிறுவர்களை பொலிஸாக பாத்திரமேற்கும் சிறுவன் தேடிப் பிடிப்பது பற்றியது. கள்வர்கள் ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்தவுடன் “டுமீல்” அல்லது “சூட்டிங்” என்ற வார்த்தையை பொலிஸ்கார சிறுவன் சத்தமிட்டுச் சொல்வதன் மூலம் கள்வர்கள் தோற்கடிக்கப்படுவர். இதில் முதன்முதலாக அகப்படும் கள்வன் அடுத்த ஆட்டத்தில் பொலிஸாக பாத்திரமேற்பான்.
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக கிடைத்த செய்திகள் இந்த விளையாட்டை ஞாபகமூட்டினாலும், அங்கு நடப்பது விளையாட்டல்ல என்பதை உள்மனது சொல்லியது. அதேபோல் இவ்
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக கிடைத்த செய்திகள் இந்த விளையாட்டை ஞாபகமூட்டினாலும், அங்கு நடப்பது விளையாட்டல்ல என்பதை உள்மனது சொல்லியது. அதேபோல் இவ்
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







