செவ்வாய், 25 ஜனவரி, 2011

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போன பெண் மின்சார அதிர்ச்சியூட்டப்பட்டு கொலை!

பாகிஸ்தானில் உள்ள கிராமப்புற மக்களிடம் நீண்டகாலமாக ஒரு வழக்கம் உள்ளது. ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள அவளுடைய குடும்பத்தை சேர்ந்த மூத்த ஆண்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணுக்கு தண்டனை அளிக்கும்.

ஆடுகளுக்கு தாயான நாய்

தாய் ஆடு இறந்துவிட்டதனால் தவித்து நின்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு தாய்ப்பாலுக்கு நிகராக பாலூட்டி வருகிறது இங்குள்ள கருணையுள்ள நாயொன்று.. தாயை இழந்த ஆடுகளுக்கு இப்போது அம்மா இதுதான்.

உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வந்துள்ளது

உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் சமீபத்தில் அபான்ஸ் நிறுவனத்தினால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த சலவை இயந்திரம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு இலகுவில் புரியக் கூடிய விதத்தில் உங்களுக்கு விளக்கம் கொடுக்கும். “சலவை இயந்திரமான என்னை நீங்கள் நான் சொல்வது போன்று இயக்கினால், உங்களுடைய உடைகள் மற்றும் ஏனைய துணிகளை தூய்மையாக சலவை செய்வதற்கு நான் உதவி செய்வேன்” என்று முதலில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்.

குச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள் திடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம்; கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர்கள் விரைவு !

திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அநுராதபுரம் சிறையில் மோதல் 3 பேர் பலி: 8 அதிகாரிகள் உட்பட 21பேர் காயம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோத லில் கைதிகள் 3 பேர் உயிரிழ ந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

‘சூதாட்டம்’ ஆகிப் போன பிரிட்டிஷ் இளவரசர் திருமணம்

இளவரசர் சார்லஸ் மகன் திருமணத்திலும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் வித்தியாசமான பரபரப்பு. சார்லஸ் மகன் வில்லியம் - கேட் திருமணம் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெகு விமரிசையாக நடக்க உள்ளது. இந்த திருமணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

மகரஜோதி மனித தயாரிப்பே. சபரிமலை தேவஸ்தானம் ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்

குழந்தையொன்றுக்கு ஏற்பட்ட பக்கவாத நோயை குணப்படுத்துவதற்கு தேவைப்பட்ட பணத்தை சேகரிப்பதற்காக போலந்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பலர் நிர்வாணமாக நின்று கலண்டர் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள பௌத்த விகாரை தாக்குதல்

சென்னையில் பௌத்த குருமாரின் சேவை மையம் மீது இனந்தெரியாத நபர்கள், நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியதில், இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த குருமார் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர் இலங்கையில் தஞ்சம் கோரவுள்ளனர்

இந்திய நாகப்பட்டிண மாவட்ட வேதார்ணயத்திற்கு அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல