நடிகர் ரஜினிகாந்த். | படம்: கே.பாக்கிய பிரகாஷ்.
'லிங்கா' படத்தின் பிரச்சினை இன்னும் தீராதக் காரணத்தால் ரஜினி படங்களுக்கு ரெட் போடுவதற்கான ஆலோசனையில் விநியோகஸ்தர்கள் இறங்கி இருக்கிறார்கள்.டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது 'லிங்கா'. அத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.



