வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பாதாம் மில்க் ஷேக்

தேவையானவை:

பாதாம் 15
ஏலக்காய் 8
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
கசகசா 1 டீஸ்பூன்
பால் 2 கப்
சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் 1 கப்

மசாலா தட்டை

தேவையானவை:

மைதாமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

பருப்புத் துவையல்

முதல் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு 1 கப்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணைய் 1 டீஸ்பூன்

வடைகறி

தேவையானவை:

கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

சேமியா புலாவ்

தேவையானவை:

சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்

கேஸர் பேடா

தேவையானவை:

பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

வெஜ் ஆம்லெட்

தேவையானவை:

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/2 கப்

வெங்காயம் 2
காரட் 1
பீன்ஸ் 10
குடைமிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

வறுத்த உப்புமா

தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
புளி எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்

உருளை குருமா

தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
பட்டாணி 1\2 கப்
வெங்காயம் 2
தேங்காய் பால் 1/2 கப்

மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்

எலுமிச்சம்பழ சாதம்

தேவையானவை

பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

காசி அல்வா

தேவையானவை:
1.பூசணிக்காய் 1 (முற்றியது)
2.சர்க்கரை 1 1/2 கிலோ
3.தண்ணீர் 4 டம்ளர்
4.நெய் 1 ஸ்பூன்
5.திராட்சை,முந்திரி,பாதாம் சிறிதளவு
6.ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து
வேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.
2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.

வாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்
போட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.

Image Hosted by ImageShack.us

Strawberry அல்வா

தேவையானவை:

Strawberry 15
பால் 1கப்
சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
தேன் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1.Strawberry யை சிறு துண்டுகளாக நறுக்கி துருவிக்கொள்ளவும்.
2.துருவியதை பாலுடன் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் கழித்து சர்க்கரை,நெய்,தேன் விட்டு அடுப்பை slim ல் வைத்து
விடாமல் கிளறவேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்
Image Hosted by ImageShack.us

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை:

வெண்டைக்காய் 10
தயிர் 2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு (ஆய்ந்தது)

அன்னாசி ரசம்

தேவையானவை:

அன்னாசி 2 பெரிய துண்டுகள் (தோல் சீவியது)
துவரம்பருப்பு 1/2 கப்
புளி ஒரு சிறு எலுமிச்சைபழ அளவு
பெருங்காயம் ஒரு துண்டு
உப்பு தேவையானது

அவல் உப்புமா

தேவையானவை:

அவல் 1கப்
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்

வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு

ரவா உப்புமா

தேவையானவை:

ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
காரட் 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

குலாப் ஜாமுன்

தேவையானவை:

கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

மைக்ரோவேவ் மைசூர் பாக்

தேவையானவை:

கடலைமாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1 1/2 கப்
நெய் 1 கப்
பால் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடலை மாவு,பொடித்த சர்க்கரை,நெய் மூன்றையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் நன்கு கலந்து கீழ்கண்டவாறு வைக்கவும்.

மைக்ரோவேவ் "High" ல் 2 1/2 நிமிடம் வைக்கவேண்டும்.
முதலில் 30 செகண்டு வைத்துவிட்டு எடுத்து கிளறி மீண்டும் 30 செகண்டு வைத்து கிளறி
மீண்டும் இது மாதிரி மொத்தம் 5 தடவை செய்யவேண்டும்.(அதாவது 2 1/2 நிமிடம்).

பின்னர் பாலை விட்டு கலந்து
"High" ல் மீண்டும் 2 1/2 நிமிடம் மேற்கூறியவாறு 30 செகண்டுக்கு ஒரு தடவை எடுத்து கிளறி
வைக்கவேண்டும். (5 தடவை).
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
ஒரு தட்டில் நெய் தடவி மைசூர் பாக் கலவையை கொட்டி வேண்டிய வடிவத்தில்
கட் பண்ணிக்கொள்ளவும்.
Image Hosted by ImageShack.us

எண்ணைய் கத்திரிக்காய் கறி

தேவையானவை:

கத்திரிக்காய் 20 (சின்ன கத்திரிக்காய்)
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு 2 டேபிள்ஸ்பூன்
காரப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

கடையில் சிறு சிறு கத்திரிக்காய்களாக பார்த்து வாங்கவும்.
ஒவ்வொரு கத்திரிக்காயையும் முழுதாக வெட்டாமல் குறுக்குவாட்டில் முக்கால் பாகம் வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மஞ்சள்பொடி,உப்பு,பெருங்காயத்தூள்,காரப்பொடி,அரிசிமாவு ஆகியவற்றை கொஞ்சம் எண்ணைய் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையை ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கவும்.பின்னர் வாணலியில்
சிறிது எண்ணைய் ஊற்றி கத்திரிக்காய் உடையாமல் வதக்கி
Image Hosted by ImageShack.us

பயத்தம்பருப்பு தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

ஹைதராபாத் வெஜ் பிரியாணி

தேவையானவை

பாசுமதி அரிசி 2 கப்
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
தக்காளி 3
எண்ணைய்,உப்பு தேவையானது.

முட்டைகோஸ் கறி

தேவையானவை:

முட்டைக்கோஸ் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

பச்சைமிளகாய் சட்னி

தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

கத்திரிக்காய் கொத்சு

தேவையானவை:

பெரிய கத்திரிக்காய் 1
புளி எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது

அவசர ரசம் (மைக்ரோவேவ் சமையல்)

ரச பேஸ்டுக்கு தேவையானவை:

மிளகு 4 டீஸ்பூன்
சீரகம் 4 டீஸ்பூன்
தனியா 5 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
புளி 2 எலுமிச்சை பழ அளவு

பனீர் மட்டர்

தேவையானவை:

பனீர் துண்டுகள் 1 1/2 கப்
பச்சைப்பட்டாணி 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 4
பாதாம் பருப்பு 4
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாப் பொடி 1 டீஸ்பூன்
தயிர் 1/2 கப்
கொத்தமல்லித்தழை 1/2 கப் (ஆய்ந்தது)
எண்ணைய்,உப்பு தேவையானது

முதலில் செய்து கொள்ள வேண்டியது:

1.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
வடிகட்டி மிக்ஸியில் விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

2.தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எண்ணையில் வதக்கி விழுது போல ஆனவுடன் தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

3.பாதாம் பருப்பையும் முந்திரி பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரில் போடவேண்டும்.

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு
வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது பாதாம்,முந்திரி விழுது
மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.நன்றாக வதங்கிய பின்
காரப்பொடி,தனியாத்தூள் இரண்டையும் சேர்த்து மீண்டும் வதக்கி தக்காளி பேஸ்டை உப்புடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பச்சைப்பட்டாணியை சிறிது தண்ணீருடன் இந்த கலவையில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும்.கடைசியில் தயிர் சேர்க்கவேண்டும்.
அடுப்பை அணைக்கு முன்பு பனீர் துண்டுகளை பிழிந்து போடவேண்டும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
Image Hosted by ImageShack.us

வேப்பம்பூ ரசம்

தேவையானவை:

புளி நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

அரைக்க:

மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2

தாளிக்க:

கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

வேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
Image Hosted by ImageShack.us

காரட் சூப்

தேவையானவை:


காரட் 4
வெங்காயம் 1
பூண்டு 3 பல்
வெஜிடபிள் ஸ்டாக் 2 கப் **
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
சோளமாவு 1 டீஸ்பூன்
தேங்காய் பால் 1/2 கப்
உப்பு தேவையானது

அப்பம்

தேவையானவை:

பச்சரிசி 1 கப்
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
வாழைப்பழம் 1 (சிறியது)
கோதுமைமாவு 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி
பொடித்த வெல்லம்,வாழைப்பழம் இரண்டையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
(அரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்).
அதனுடன் கோதுமைமாவு,ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து எண்ணைய் காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் அப்ப மாவை ஒவ்வொன்றாக ஊற்றி இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவேண்டும்.
Image Hosted by ImageShack.us

பப்பாளியின் பயன்கள்

பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

குழந்தைகளுக்கு பப்பாளிப்பழம் கொடுத்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். பல் எலும்பு போன்றவை வலுவடையும்.

பப்பாளியை உணவில் சேர்த்துக்கொண்டால் தேவையற்ற சதைகள் குறையும். (பப்பாளி கூட்டு பண்ணலாம்)

பப்பாளியின் பாலை புண் உள்ள இடங்களில் பூசினால்குணமாகும்.

பப்பாளி இலையை அரைத்து பூசினால் கட்டி உடையும்.வீக்கமும் குறையும்.

பிரசவமான பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்கு சுரக்கும்.

பப்பாளி விதையை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

நன்கு பழுத்த பழத்தை கூழ் போல பிசைந்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முக சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.
Image Hosted by ImageShack.us

கல்கண்டு பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 கப்
கல்கண்டு 2 கப்
---
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
குங்குமப்பூ சிறிதளவு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு அரிசியையும் பயத்தம்பருப்பையும் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
இதில் வென்னீர் விட்டு நன்றாக களைந்து கொள்ளவும்.
பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து களைந்த அரிசியையும் பருப்பையும் அதில் கலந்து
குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் தண்ணீர் விட்டு
கல்கண்டை போட்டு கம்பிப்பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
இதில் வெந்த அரிசியையும் பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதமுள்ள நெய்,ஏலக்காய்தூள் சேர்க்கவும். குங்குமப்பூ வை சிறிது பாலில் கலந்து சேர்க்கவும்
எல்லாவற்றையும் நன்றாக கிளறி இறக்கவும்.
Image Hosted by ImageShack.us

தேங்காய் பால் குருமா

தேவையானவை:

தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்

சுண்டைக்காய் வத்தக்குழம்பு

தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது

வெண்பொங்கல் -சர்க்கரை பொங்கல்

வெண்பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயற்றம்பருப்பு 1/2 கப்
மிளகு 15
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
தண்ணீர் 10 கப்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது

சோயாபீன்ஸ் மசாலா

தேவையானவை:
சோயாபீன்ஸ் 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
கொத்தமல்லித்தழை 1/2 கப் (ஆய்ந்தது)
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்

அசோகா அல்வா (Thanjavur Halwa)

தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
கோதுமைமாவு 1 கப்
நெய் 1 1/2 கப்
சர்க்கரை 2 கப்
தண்ணீர் 2 1/2 கப்
கேசரிப்பவுடர் 1 டீஸ்பூன்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10

பயறு இட்லி உப்புமா

தேவையானவை:
பச்சபயறு 1 கப்
புழுங்கலரிசி 1/4 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
பச்சைமிளகாய் 3


பச்சபட்டாணி 1/4 கப் (உரித்தது)
உருளைக்கிழங்கு 1
வெங்காயம் 1
காரட் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்

உளுந்து சட்னி

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
மிளகாய்வற்றல் 4
தேங்காய் துருவல் 1/4 கப்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை சிறிது
புளி எலுமிச்சை அளவு

அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்

ஒரு சோதிட ஆராய்ச்சி

ஆடையணிகள் மீது ஆவல் கொண்ட ஆண்கள் அபூர்வமாகத் தான் காணப்படுகிறார்கள்.அதிலும் தத்தம் அந்தஸ்துக்கும் தொழிலுக்கும் ஏற்றவாறு உடையணிய வேண்டிய நிர்ப்பந்தம்தான் இவ்விதம் நவம் நவமான ஆடையணிகளின் பக்கம் அவர்களது கவனத்தைத் திரும்ப வைக்கிறது. ஆனால் பெண்கள் விடயம் அப்படியல்ல. விதம் விதமாய் வண்ண வண்ணமாய் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத்தக்கவாறு நாளுக்கொன்றாய், அல்லது ஒரே நாளில் பலவிதமாய் ஆடையணிந்து விதம் விதமான அழகோடு அசத்துவதில் அல்லது இவ்விதமான ஆடைகளின் மூலமாக தங்கள் அழகை விதம் விதமாய்க் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். ஆடையணியும் விடயத்தில் அடுத்தவரை மிஞ்ச வேண்டுமென்றே ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள்.

உங்களுக்குத் தெயுமா?

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் ஐவர்யெனிங்ஸ்.

முதல் முதலாக நியூயோர்க் நகரத்திலிருந்து வெளியான முஸ்லிம் பத்திகையின் பெயர் முஸ்லிம் உலகம் என்ற பத்திரிகை, 1893ஆம் ஆண்டு

இலங்கையில் ரப்பர் விதை சேர். கென்றிவிக்கம் என்பவரால், 1876ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல