வெள்ளி, 20 ஏப்ரல், 2012

தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று பிறந்த பாலகனை கடத்திய மருத்துவத்தாதி (படங்கள் இணைப்பு)

கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்
இளம் தாயொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவருக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தையை கடத்திச் சென்ற மருத்துவத் தாதியொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

அத்துமீறி வீட்டுக்குள் பிரவேசிப்பவர்களை வீழ்த்தும் தொழில்நுட்ப தரை

வீட்டிற்குள் காலடியெடுத்து வைப்பவரை தன்னியக்க ரீதியில் குறிப்பிட்ட அறைக்கு வழி நடத்திச் செல்லக் கூடியதும் அத்துமீறி பிரவேசிப்பவர்களை நிலை தடுமாறி விழச் செய்யக்கூடியதுமான அதி நவீன தரை உருவாக்கத்திற்கான உரித்துடைமை தொழில்நுட்ப நிறுவனமான “ஐ.பி.எம்' க்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் யார் உள்ளனர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தீர்மானிக்கக் கூடிய உணர் கருவிகளை மேற்படி தரை கொண்டமைந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்களின் நரமாமிசத்தை பயன்படுத்தி தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை (படங்கள் இணைப்பு)

பிரேசிலில் கொலை செய்யப்பட்டவர்களின் பின் பகுதிகள் மற்றும் தொடைகளிலிருந்து பெறப்பட்ட நரமாமிசம் மூலம் தயாரித்து விற்கப்பட்ட இறைச்சி தின்பண்டத்தை நூற்றுக்கணக்கான மக்கள் அதன் விபரீதத்தை உணராது உட்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பஸ்ஸின் முகப்பு பகுதியில் தொங்கியபடி ஒரு மைல் தூரம் பயணித்த போக்குவரத்து அதிகாரி

பஸ் சாரதியொருவரின் சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளடங்கலான ஆவணங்களைப் பரிசீலிக்கும் முகமாக, மணிக்கு 30 மைல் வேகத்தில் சென்ற பஸ்ஸொன்றின் முகப்புப் பகுதியை பற்றியவாறு போக்குவரத்து உத்தியோகத்தரொருவர் ஒரு மைல் தூரம் பயணித்த சம்பவம் வியட்னாமில் இடம்பெற்றுள்ளது.


நண்பேன்டா (படங்கள், காணொளி இணைப்பு)


காரால் மோதுண்டு படுகாயமடைந்த தனது நண்பனை விட்டு அகல மறுத்த நாய்

வீதியில் காரால் மோதுண்டு படுகாயமடைந்த தன் நண்பனான நாயை விட்டு அகல மறுத்து அதனருகே காவலில் இருந்த நாயொன்று இணையத்தளம் மூலம் உலகளாவிய பிரபலத்தை பெற்றுள்ளது.அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லா புயன்ட் வீதியில் கடந்த புதன்கிழமை மேற்படி நாய் விபத்துக்குள்ளானது.

தாயின் சடலத்துடன் தன்னந்தனியே 5 நாட்களைக் கழித்த 2 வயது பாலகி

2 வயது குழந்தையொன்று வீடொன்றில் தாயின் சடலத்துடன் 5 நாட்களை தன்னந் தனியே கழித்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான செய்தி “ஏ.எஃ.பி' ஊடகத்தில் திங்கட்கிழமை வெளியிடப்பட் டுள்ளது. சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வக்கா வக்கா நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீண்ட திருமண ஆடை


1,706 அடி நீளமான பின் பக்க மேலாடைப் பகுதியைக் கொண்ட திருமண ஆடை யை அணிந்து மணப்பெண் ஒருவர் தனது திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஹுபி மாகாணத்திலுள்ள வுஹான் நகரைச் சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத மணமகளே இவ்வாறு நீண்ட திருமண ஆடையை அணிந்துள்ளார்.
105 இறாத்தல் நிறையுடைய இந்த திருமண ஆடையை தயாரிப்பதற்கு 4,983 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம் செலவிடப்பட்டுள்ளது.

ஆளற்ற தீவில் தன்னந்தனியே நிர்வாணக் கோலத்தில் வாழும் வயோதிபர் (படங்கள் இணைப்பு)

இயற்கையின் மீது அளவுக்கதிக பற்றுக் கொண்ட 76 வயது வயோதிபர் ஒருவர், தனது குடும்பத்தை பிரிந்து அடிக்கடி சூறா வளிகளுக்கு முகங்கொடுக்கும் பின்தங்கிய தீவொன்றில் தன்னந்தனியாக உடலில் எதுவித ஆடையும் அணியாமல் வாழும் அதிசய சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
ஒரு கிலோமீற்றர் அகலமான சொதோபனாரி என்ற மேற்படி தீவில் கடந்த 20 வருட காலமாக மஸபுமி நாகசாகி என்ற மேற்படி வயோதிபர் வசித்து வருகிறார்.

ஒளிந்து விளையாடிய 4 வயது சிறுமி தாயாரின் காரில் மோதுண்டு பரிதாப மரணம் (படங்கள் இணைப்பு)

ஒளிந்து விளையாடும் முகமாக தனது 4 வயது மகள் காரின் பின்னால் மறைந்து நிற்பதை அறியாத தாய், காரைப் பின்பக்கமாக செலுத்தி திருப்ப முயற்சித்ததால் காரில் மோதுண்டு அந்த சின்னஞ்சிறு மகள் பரிதாப மரணத்தை தழுவிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையத்தில் நிர்வாண போராட்டம்

அமெரிக்க விமான நிலையங்களில் நடத்தப்படும் பாதுகாப்பு தேடுதல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் சர்வதேச விமான நிலையத்தில் முழுமையான நிர்வாணக் கோலத்தில் நபரொருவர் தோன்றி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சினத்தால் காதலரது அந்தரங்க உறுப்பை கடித்து துண்டாக்முயற்சித்த காதலி (படங்கள் இணைப்பு)

தனது காதலருடனான வாக்குவாதத்தின் போது அவரது அந்தரங்க உறுப்பை கடித்து துண்டாக்க முயற்சித்த குற்றச் சாட்டில் 40 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.
சினியட் வோக்கர் என்ற காதலியே தனது காதலரான வின்சென்ட் ரெனோல்ட்ஸனின் அந்தரங்க உறுப்பை சினமடைந்த நிலையில் கடித்துக் குதறி யுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல