புதன், 5 ஜனவரி, 2011

யாழ். திருநெல்வேலியில் கொள்ளையரால் இளைஞர் குத்திக்கொலை

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குழுவினால்  இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலாஷேத்திரா நிறுவப்பட்ட நாள்

கலாக்ஷேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும்.

யாழ். கும்பிளானில் பெண் கடத்தல், குற்றவாளிகள் மடக்கிப்பிடிப்பு

யாழ். குப்பிளான் பகுதியில் இளம் பெண்ணை கடத்த இளைஞர்கள் சிலர் மேற்கொண்ட முயற்சி பொலிஸாரின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கில்பேட் - Quillpad

கில்பேட் என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஓன்லைன் டைப்பிங் கருவி இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உட்பட 10 இந்திய மொழிகளில் ஆங்கில உச்சரிப்பு (Phonetic) முறையில் இலகுவாக டைப் செய்யலாம். உதாரணமாக ‘ammaa’ என ஆங்கிலத்தில் டைப் செய்ய தமிழில் ‘அம்மா’ என உடனே மாற்றும்.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் கூகில் போன்ற தேடற் பொறிகளிலும் தமிழில் தகவல் தேடுவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த இணைய தளத்திற்கான முகவரி

http://www.quillpad.com/
http://www.quillpad.com/editor.html

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10

1) PIN TAB


- உங்கள் குரோம் உலவியில் TAB வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரே விண்டோவில் பல பக்கங்களை திறப்பதற்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

 இந்த TAB களை கையாள PIN TAB என்ற வசதி இங்கு உள்ளது. இந்த வசதியை பெற TAB மீது ரைட்க்ளிக் செய்து பாருங்கள்.

28 வருடங்களின் பின் பிள்ளை வரம்

28 வருடங்களின் பின்னர் தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் பிறந்த ஒரங்ஒட்டங் குட்டி பொதுமக்களின் பார்வைக்காக விசேட கூடொன்றில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3ம் திகதி யூபோ மற்றும் அக்கீ தம்பதியினருக்கு பிறந்த இந்த குட்டிக்கு மிருகக் காட்சிசாலை தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோரிடமிருந்து முன்மொழியப்பட்ட பெயர்களில் இருந்து தேர்ந்தெடுத்து அக்கீபோ எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தோல்வி உங்களைத் துரத்துகிறதா ?

தோல்வி என்னும் சொல்லே தேவையில்லை. தோல்வி என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு நண்பனே! ஆனால் அதை விரோதி என்று தவறாக அடையாளம் காணுகிறீர்கள்.

மரண பாடம்!

தாய்வானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து பல நிமிடநேரம் உயிருடன் புதைக்கப்படுகின்றனர்.

சவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு

இஸ்ரேலிய மொஸாட் புலானாய்வு சேவையினால் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்றினை சவூதி அரேபிய பாதுகாப்புத்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்கொலை செய்து கொள்வதற்காக 9 ஆவது மாடியிலிருந்து குதித்த நபர் உயிர்பிழைப்பு

வன்கெலிஸ் கபடோஸின் இளமைப் பருவத்து படம்
தற்கொலை செய்து கொள்வதற்காக 9 ஆவது மாடியிலிருந்து குதித்த நபர் ஒருவர், கீழே குவிக்கப்பட்டிருந்த குப்பை பைகளின் குவியல் மீது விழுந்து உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

தலைநகரில் .அடக்கப்பட்ட ஒரு தமிழ்க்குரல்

இன்றைய காலகட்டத்தில் மாமனிதர் குமார் இந்நாட்டில் மூவின மக்களும் ஒற்ருமையாக வாழ்வதற்கு வற்புறுத்திய கொள்கையை வெளிப்படுத்துவது சாலப்பொருத்தமாகும்.

ஈரானில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் பரிசுப் பொருட்கள் விநியோகத்திற்கு தடை

ஈரானில் காதலர் தினத்துக்கான வாழ்த்து அட்டைகளையும் அன்பளிப்புக்களையும் விற்பனை செய்வதற்கு கடைகளுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.

நெற்றியை ஊடுருவி சென்ற கூய கொழுக்கி

விபத்தொன்றின் போது கூரிய கொழுக்கி யொன்று நெற்றியை ஊடுருவி மூளைக்கு இரு மில்லிமீற்றர் தூரத்தில் நிலை கொண்ட நிலையில், 13 வயது சிறுவன் ஒருவன் அபூர்வமான முறையில் உயிர் தப்பிய சம்பவம் வடகிழக்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மலைப்பாம்புகளுக்கு திருமணம்

ஆண் மலைப்பாம்பொன்றுக்கும் பெண் மலைப்பாம்பொன்றுக்கும் கோலாகலமாக திருமணம் செய்து வைக்கப் பட்ட விசித்திர சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது.

காதல் தோல்வியால் உலகிலேயே பருமனானவராக மாறிய நபர் புதிய காதலிக்காக உடல் நிறையை குறைக்க தீவிர முயற்சி (படங்கள் இணைப்பு)

தனது பாரிய உடல் நிறைக்கு காதல் தோல்வியே காரணமென உலகின் மிகவும் பருமனான நபராக “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பிரித்தானியாவைச் சேர்ந்த போல் மாஸன் (50 வயது) தெரிவித்தார்.

புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?

900 ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

மேற்கத்தைய கலாசாரத்திற்கு அடிமையான மகளை கொலைசெய்த தந்தை

மேற்கத்தைய கலாசாரத்திற்கு பெரிதும் அடிமையான தனது மகளை கொலைசெய்த தந்தை மீதான வழக்கு விசாரணை இம்மாதம் தொடங்குகின்றது.

யாழ். செம்மணியில் அரைகுறை ஆடைகளுடன் இளைஞர் கும்பல் அட்டகாசம்!

யாழ். செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் ஒன்று மது போதையில் அரைகுறை ஆடைகளுடன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களுடனும் பகிடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளானதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக் கட்ட யுத்தத்தில் அமெரிக்கா இலங்கையை அச்சுறுத்தியது - விக்கிலீக்ஸ்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் ஆயுத கொள்வனவு தொடர்புகளைப் பேணிவந்ததால், ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு அச்சுறுத்தலாக விளங்கியதென விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி நோர்வேயின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவும் புலம்பெயர் தமிழர்களும் - விக்கிலீக்ஸ்

பிரித்தானிய தேர்தல் நடைபெற்ற காலத்தில் அங்கிருக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் யுத்தம் குறித்து தொடர்ச்சியாக பிரித்தானிய அரசிடம் முறைபாடுகளை செய்தமை மற்றும் தேர்தல் காலம் என்பவற்றை கருத்திற் கொண்டே பிரித்தானியா இலங்கை விடயத்தில் அதிகம் கரிசனைக் காட்டியதாக விக்கிலீக்ஸில் தகவல் கசிந்துள்ளது.

17 வயது சிறுவனிடம் காமலீலை புரிந்த 83 வயது கிழவனுக்கு சிறை

அம்பாறை பகுதியில் 17 வயது சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 83 வயதுடைய கிழவனை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் 83 வயதுடைய கிழவன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

புதைக்கப்பட்ட ஆட்டை தோண்டி எடுத்தப்பின் காணோம்! யாழில் அதிசயம்

யாழ். புகையிரத நிலையத்திற்கு தென்புறமாக உள்ள வேலி இல்லாத காணியில் புதைக்கப்பட்ட ஆடு ஒன்று புதைக்கப்பட்ட சிறிது நேரத்தில் புதைகுழியில் இருந்து காணாமற் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குமார் பொன்னம்பலத்தின் நினைவு நாள்

குமார் பொன்னம்பலம் ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவர். இவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். இவர் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல