திங்கள், 25 ஜனவரி, 2010

ஒரு சோக வரலாற்றின் குறை முடிவு (இறுதிப்பாகம்)

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலையும் இந்திய வம்சாவளியினர் தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்கள். ஒன்று 1954 ஜனவரியில் மற்றது 1954 ஒக்ரோபரில் இரண்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரவில்லை.

ஒரு சோக வரலாற்றின் குறை முடிவு பாகம் 2

இரண்டு விசேட மசோதாக்கள் 1941 மார்ச் மாதம் சட்ட சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. ஒன்று குடிவரவைக் கட்டுப்படுத்தும் மசோதா. மற்றது நாட்டில் வாழும் இலங்கையரல்லா தோரைத் தனியான பதிவேட்டில் பதிவு செய்வதற்கான மசோதா. இவ்விரு மசோதாக்களினதும் சூத்திரதாரி டீ.எஸ். சேனநாயக. இந்திய வம்சாவளியினரின் வருகையைத் தடுப்பதும் ஏற்கனவே வந்தவர்களைத் தனிமைப்படுத்துவதும் இவ்விரு மசோதாக்களினதும் நோக்கம்.

ஒரு சோக வரலாற்றின் குறை முடிவு (பாகம் 1)

1948 ஓகஸ்ட் 04

இலங்கையில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய இந்திய வம்சாவளியினரின் வாழ்வில் பேரிடி விழுந்த தினம். பிரசாவுரிமையும் வாக்குரிமையும் இல்லாதவர்களாக அவர்களை ஆக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தினம்.

ஈழத் தமிழரின் உரிமைப் போராட்ட வரலாற்றை நினைவு கூரும் செல்வநாயகம் ஸ்தூபி (பாகம் 4)

வீரசிங்கம் மண்டபம்


செல்வநாயகம் நினைவுக் கோபுரம்


உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு தெற்காக வீதிக்கு அருகில் வீரசிங்கம் மண்டபம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் பண்பாட்டு நிலையமாக இது விளங்குகின்றது. இக்கட்டிடம் கீழ்ந்தளத்தோடு நான்கு மாடிகளைக் கொண்டிருக்கின்றது. மாடிகளில் வேறு அரச அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கீழ்த்தளத்தில் யாழ்ப்பாணத்தின் கலாசார நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்ற அரங்குள்ளது. இந்த அரங்கில் மேடையேறாத நிகழ்ச்சிகளே கிடையாது. நடன அரங்கேற்றங்கள், கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்வுகள் எனப் பல மேடையேறியுள்ளன. யாழ்ப்பாணப் பிரதேசம் கூட்டுறவில் முதன்மையானது. கூட்டுறவு என்பதற்கு யாழ்ப்பாணத்தை இலங்கை முழுவதும் உதாரணமாகக் கொள்வர். கூட்டுறவின் தந்தையாகத் திகழ்ந்தவர் வீரசிங்கப் பெரியார் ஆவார். இவர் நினைவாக இக்கட்டிடத்தை அமைந்துள்ளார்கள்.

யாழ் நினைவுச் சின்னங்களாக நிற்கும் நடுகற்கள் (பாகம் 3)

யாழ்ப்பாணக் கோட்டையை அடுத்த நாம் தரிசிக்க வேண்டிய இடம் பொதுசன நூல் நிலையமாகும். யாழ்ப்பாணக் கோட்டைக்குக் கிழக்கே கம்பீரமாக இம்மாடிக் கட்டடம் காணப்படுகின்றது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் வரலாற்றில் யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது. விலை மதிக்க முடியாத பல நூல்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. உலகில் எங்கும் பெறமுடியாத கையெழுத்துப் பிரதிகளையும் பனையோலை ஏடுகளையும் கொண்டிருந்தது. 1981 ஆம் ஆண்டில் 99000 அறிவு நூல்களை ஒருங்கே கொண்டிருந்தது.

ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட அற்புதமான யாழ். கோட்டை (பாகம் 2)

யாழ்ப்பாண வளைவு
யாழ்ப்பாணத்துக்குள் நுழைபவர்களை வரவேற்பதற்காக ஒரு அலங்கார வளைவு செம்மணி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கண்டி வீதியின் குறுக்காக இது கட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் எப்படித் தோற்றம் பெற்றது? (பாகம் 1)

யாழ்ப்பாணம்: ஒரே பார்வையில்

1025 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு (மொத்தமாக)

929 சதுர கி.மீ. நிலப்பரப்பளவு

96 சதுர கி.மீ உள்நாட்டு நீர்நிலைகள்

15520 ஹெக்டேயர் நெற்காணி


1530 ஹெக்டேயர் பயிர் நிலம்

1470 ஹெக்டேயர் தென்னந்தோட்டம்

33720 ஹெக்டேயர் வீட்டுத் தோட்டங்கள்

690 ஹெக்டேயர் கட்டடங்கள்

390 ஹெக்டேயர் தரிசு காணி

அமெரிக்காவின் மன்னிப்பை நிராகரித்த ஸ்பெயின் அரசியல்வாதி


அல்ஹைடா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் தற்போதைய தோற்றத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தின் சொந்தக்காரரான ஸ்பெயின் அரசியல்வாதி அமெரிக்காவின் மன்னிப்புக் கோரலை நிராகரித்துள்ளார்.

ஸ்பெயின் இடதுசாரி அரசியல் கட்சியொன்றின் தலைவரான கஸ்பர் லமாஷரெஸ் (Gaspar Llamanzares) இச் சம்பவம் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.ஸ்பெயினின் உள்துறை அமைச்சினூடாக அமெரிக்கத் தூதுவர் மன்னிப்புக் கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய லமாஷெரஸ்,


This combination photo shows, left, a digitally enhanced image taken from the U.S. Department of State's website rewardsforjustice.net on Thursday, Jan. 14, 2010, showing what Osama bin-Laden could look like today and, at right, an image released by Izquierda Unida, showing a 2004 general election campaign image of Gaspar Llamazares. (AP Photo/U.S. State Department and Izquierda Unida)

மன்னிப்புக் கோரல் மட்டும் போதாது. அவமதிப்பான இச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். இது கவலையை மட்டும் ஏற்படுத்தவில்லை. கவலையுடன் சேர்த்து எவ்.பி.ஐ.யின் நடத்தை தொடர்பில் கோபத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பின்லேடனின் தற்போதைய தோற்றத்தை வடிவமைப்பதற்கு எவ்.பி.ஐ.யின் தடயவியல் அதிகாரிகள் கூகுள் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட லமாஷெரஸின் புகைப்படத்தைப் பயன்படுத்தியிருந்தனர்.

அத்துடன் இராஜாங்கத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தேடப்படும் நபர்களின் புகைப்படத் தொகுதியில் வடிவமைக்கப்பட்ட பின்லேடனின் புதிய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.இந்நிலையில், ஸ்பெயின் அரசியல்வாதியான புகைப்படம் பயன்படுத்தப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்ததைத் தொடர்ந்து எவ்.பி.ஐ. இணையத்தளத்திலிருந்து இப் புகைப்படத்தை நீக்கிய போதும் விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களிலுள்ள புலனாய்வுத் துறையினரின் கரங்களில் இப் புகைப்படம் இல்லையென்பதற்கான உத்தரவாதத்தை எவ்.பி.ஐ. வழங்க வேண்டுமெனவும் லமாஷெரஸ் கோரியுள்ளார்.

சருமத்தில் சுருக்கமா?

தோலில் கொஞ்சம்கூட சுருக்கமே இல்லாமல்... இருக்க என்ன செய்யலாம் இதோ சில ஐடியாக்கள் ஒயில் மசாஜ்: பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படிச்செய்துவர, சருமத்தில் சுருக்கமா... என்பீர்கள்

தாடைப்பகுதியில் சதை ஏற்பட்டு கம் உப்பி காணப்படும் எப்படி  சரி செய்வது?

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பொடுகுப் பிரச்சினையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ் *மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் தலை யில் குளித்தால், பொ
 டுகுத் தொல்லை நீங்கும்.

உங்கள் கழுத்தையும் கவனியுங்கள்


பொதுவாக ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண் பேசும்போது அனேகமாக கழுத்தைப் பார்த்து... அவர் போட்டிருக்கும் நகைகளை பார்த்து பேசுவது வழக்கம். ஆனால் பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறைய ஆபரணங்களைப் போட்டு கழுத்து கறுத்துப் போயிருக்கும். இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கிக் காட்சியளிக்கும்.

மருத்துவக் குறிப்புகள்

செருப்புக்கடி புண்ணுக்கு.


தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூ தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணில் தடவி வர குணமாகும்.

சீனாவும் கூகிளும்


இன்றைய உலகின் இணையற்ற சக்தி எதுவென்றால், அது இணையம் (Internet) எனலாம்.
இது உலகின் எந்தவொரு மூலையில் இருப்பவரும் இன்னொருவருடன் தொடர்பு கொண்டு, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

இதன் காரணமாக, பூகோள எல்லைகளைத் தாண்டி, ஒட்டுமொத்த மனிதகுல நாகக வளர்ச்சியில் இணையத்தின் தாக்கம் அபரிமிதமானதாக மாறியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல