வியாழன், 9 செப்டம்பர், 2010

10 வயது சிறுமி மீது வல்லுறவு தந்தைக்கு 7 வருட கடூழிய சிறை

அக்கரைப்பற்று 1 ஆம் பிரிவு காதிரியா பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் மொஹமட் ஆசிப்!

‘ஸ்பொட்பிக்ஸிங்’ (spot-fixing) சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஆசிப் (Mohammad Asif) பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோர உத்தேசித்துள்ளதாக பிரித்தானிய பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானில் தற்போது கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்.

குடும்ப சுமையைத் தங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத் தீயில் துவள்கின்றேன் என கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 13வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சண்முகம் ஆனந்தராஜ் தெரிவிக்கின்றார்.

ஆதரவற்ற 4 சிறுவர்களை நேர்டோ எனப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் பொறுப்பேற்பு!

ஆதரவற்ற 4 சிறுவர்களை நேர்டோ எனப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் பராமரிப்பதற்காகப் பொறுப்பேற்றுள்ளது. வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட இவர்கள் உறவினர்களினால் சில தினங்களுக்கு முன்னர் வவுனியா நேர்டோ அலுவலகத்தில் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

காவடி அறுந்து விழுந்ததில் ஊழியர் காயம்!

நல்லூர்க் கந்தனின் தீர்த்தத் திருவிழாவின் போது காவடி அறுந்து விழுந்ததில் கடமையில் இருந்த மாநகர சபை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.தீர்த்தத் திரு விழாவான இன்று பெருமளவு பக்தர்கள் காவடிகள் எடுத்துத் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

அந்தரங்க நேரத்தில் வேறொரு ஆணின் பெயரை அழைத்த பெண் காதலனால் படுகொலை

Joanne Kitchen

வேறொரு ஆணின் பெயரை சத்தமாக கூறி அழைத்த பெண்ணொருவரை குரல்வளையை நெரித்து அவரது காதலர் கொன்ற சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
ஜோன்னி கிச்சன் (Joanne Kitchen 41)என்ற மேற்படி பெண், தனது காதலரான காரி ஹிக்ஸுடன் (Gary Higgs, 44) பல வருட காலமாக திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சைக்கிள் ஓட்டி பால் விநியோகம் செய்யும் நன்றியுள்ள நாய்

சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் சைக்கிளை ஓட்டி, பால் விநியோகம் செய்துவருகிறது “மணி' என்கின்ற நாய்.
தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி கீழ் தும்பல அள்ளியைச் சேர்ந்தவர் தங்கவேல்.

கன்னித்தன்மையை ஏலமிட்ட யுவதி மீது தாக்குதல்

ஏலத்திலிருந்த தனது தாயின் வீட்டை மீட்பதற்காக, தனது கன்னித்தன்மையை விற்பதாக அறிவித்திருந்த ஹங்கேரிய யுவதி, இனந்தெரியாத நான்கு மனிதர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளாள்.

13 கிலோ எடையுள்ள கோல்ட் பிஷ்

பிரான்ஸை சேர்ந்த இளைஞர் ஒருவர் 13 கிலோகிராம் (30 இறாத்தல்) நிறையுடைய கோல்ட் பிஷ் ரக மீனொன்றைப் பிடித்துள்ளார்.   மூன்று வயதுடைய சராசரி சிறுமியின் எடையை இம்மீன் கொண்டுள்ளது.

அதிவேகமாக நகரும் உணவு மேசை

பிரிட்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் அதிவேகமாக நகரக் கூடிய உணவு மேசையொன்றை உருவாக்கியுள்ளார்.

சொத்துக்காக சொந்த உறவையே தீயிட்டுக்கொழுத்திய யாழப்பாணத்து பெண்கள்

யாழ்ப்பாணத்தின் தட்டார் தெருவில் வசித்து வந்த 47 வயதுடைய க.விஜயலட்சுமி என்பவரை அவரின் சொந்தச் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் சொத்துக்களை அபகரிக்கின்றமைக்காகப் படுகொலை செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்.

காட்டுமிராண்டித்தனத்தை கைவிட்ட ஈரான்

ஈரான் நாட்டு சட்டப்படி பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தால் அவர்கள் கல்லால் அடித்து கொல்லப்படுவார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரை கல்லால் அடித்து கொல்ல உத்தரவிட்டார். எனவே அவருக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன.

பாட்டி வாங்கிய பிளாக்பெல்ட்

Historic honour: 77-year-old lollipop lady Ena Mallett has become the first woman to earn a 7th dan black belt in Spirit Combat karate
60 வயதை கடந்து விட்டாலே தள்ளாடும் நிலை பலருக்கு வந்துவிடும் நிலையில் இங்கிலாந்தில் பாட்டி ஒருவர் கராத்தேவில் கலக்கி வருகிறாராம்.

அமெரிக்க டொலரில் கைவண்ணம் (படங்கள் இணைப்பு)

Irina Truhanova
அமெரிக்காவைச் சேர்ந்த இரினா ருஅனோவா (Irina Truhanova) எனும் பெண்மணி அமெரிக்க டொலர் நோட்டுக்களை வைத்து அரிய ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளை உரு வாக்கி வருகிறாராம்.

இப்படியும் ஒரு மிரட்டல்

Robert Edward Tyrrell Jr. 29

துப்பாக்கி முனையில் வழிப்பறி, கொள்ளை போன்ற முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவிலோ வாலிபர் ஒருவர் தனது அம்மாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி இருக்கிறாராம். அதுவும் எதற்காக தெரியுமா? தன்னுடைய துணிகளை இஸ்திரி போட்டித்தர மறுத்ததற்காகவாம்.

இப்படியும் ஒரு சாதனையா?

ஹொலிவுட்டில் 3டி தொழில்நுட்பம் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில் ஹொங்கொங்கில் அந்த வகையான படத்தை 3டி தொழில்நுட்பத்தோடு உருவாக்கி உள்ளனராம்.

ஆவேசமடைந்த நடிகை

கேள்வி மேல் கேள்வி கேட்டால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அதிலிலும் நடிகைகள் என்றால் கோபத்திற்கு கேட்கவே வேண்டாம். அதுதான் ஹாலிவுட் நடிகை ட்ரூ பாரிமூர் (Drew Barrymore) தனது கடந்த காலம் பற்றி கேள்விகளால் துளைத்தெடுத்த நிருபரிடம் கடுங் கோபத்தை காட்டியிருக்கிறாராம்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கொழும்பில் ஆயுத பயிற்சி; புனே குண்டுவெடிப்பில் சிக்கியவன் பரபரப்பு தகவல்

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஜெர்மனி பேக்கிரியில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி குண்டு வெடித்தது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மராட்டிய தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

விற்பனைக்கு வரும் ஓஸாமா பின்லாடன் வீடு

அல்கய்தா தலைவர் பின்லாடன் வீடு பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேமில் உள்ளது. தற்போது இந்த வீட்டை முஇன் கோரி (Mu'in Khoury) என்பவர் விலைக்கு வாங்கி அதில் குடியிருந்து வருகிறார்.

நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி

மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்... அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அதர்வாவும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்ந்தார்கள்.

முரளி உடல் தகனம் செய்யப்பட்டது

மறைந்த நடிகர் முரளியின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நெப்போலியன் மற்றும் திரையுலகினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

புற்றுநோய் ஏற்படுவதை தக்காளி தடுத்து விடும்

தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வதால் புற்றுநோயில் இருந்து ஆண்கள் தப்பலாம் என்று இத்தாலி ஆய்வு தெரிவித்துள்ளது.

புலிகளுடன் 12 நாடுகளுக்கு சென்றிருந்த ஊடக பிரமுகர் கனேடிய அதிகாரிகளின் வலையில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினருடன் கடந்த காலங்களில் 12 நாடுகளுக்கு பயணித்து இருந்த ஊடகப் பிரமுகர் ஒருவரும் எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கின்றமை கண்டறியப்பட்டிருக்கின்றது.

போத்தல் போத்தலாக பீர் குடிக்கும் மான் (வீடியோ இணைப்பு)

சீனாவில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் உள்ள ஒரு மான் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக தினமும் போத்தல் போத்தலாக பீர் குடித்து காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது

குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி

நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடத்தப்போவதாக அறிவித்த குரான் எரிப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று அமெரிக்காவின் புளோரிடா தேவாலயம் அறிவித்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல