திங்கள், 24 மார்ச், 2014

விமானம் மூழ்கியது என்று எப்படி கூறுகிறீர்கள்?: மலேசியாவிடம் ஆதாரங்களை கேட்கும் சீனா

கோலாலம்பூர்: மாயமான விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று மலேசியா அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை அளிக்குமாறு சீனா மலேசியாவிடம் கேட்டுள்ளது.

மலேசிய விமானம் விபத்தில் பலியான சென்னை பெண்- குடும்பத்தினர் சோகம்


சென்னை: மலேசிய விமானம் கடலில் மூழ்கி 239 பேர் ஜலசமாதி ஆனதில் சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன பெண் நிர்வாகி சந்திரிகா சர்மாவும் மரணித்துள்ளார். இதுநாள் வரை அவர் திரும்ப வந்துவிடுவார் என்று நம்பியிருந்த அவரது குடும்பத்தினர், இந்த தகவலினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானத்தின் “கருப்பு பெட்டி” எங்கே.. தேடல் தீவிரம்


கான்பெரா, ஆஸ்திரேலியா: மலேசிய விமானம் கடலில் மூழ்கிவிட்ட போதிலும் அதற்கான காரணங்கள் இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
அந்த முடிச்சை அவிழ்ப்பதற்கான சாவிகளைத் தேடி இன்னும் பல நாடுகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதில் முக்கியமாக கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்கும் தேடல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மலேசிய விமானத்தின் காக்பிட்டில் என்ன நடந்தது... ஏன் அடிக்கடி பறக்கும் உயரத்தை மாற்றினார் பைலட்...?

கோலாலம்பூர்: விபத்தில் சிக்கியதாக மலேசியாவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்ட விமானம் மாயமாவதற்கு முன்னர் அதிரடியாக உயரக் குறைப்பு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதனால், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் விமானத்தின் காக்பிட்டில் என்ன நடந்தது என்ற சந்தேகங்களுக்கு விடை தேடப்பட்டு வருகிறது.

பெண்களே! உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...

பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா? அது உங்களின் அழகையே கெடுக்கிறதா? இதனைப் போக்க அழகு நிலையங்களுக்கு செல்ல சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்படியானால் வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள். ஆம், எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது - மலேசிய பிரதமர்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்பதை புதிய தகவல்களை காண்பிப்பதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மாயமான விமானம்: பைலட்டுக்கு கடைசியாக வந்த மர்மபோனில் பேசிய கோலாலம்பூர் பெண்

கோலாலம்பூர்: மலேசிய விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அதன் பைலட் ஒருவருக்கு பெண் ஒருவர் போன் செய்ததாக கிடைத்த தகவலால் விமானத் தேடலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல