சனி, 24 மார்ச், 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 25

மே 21-ம் தேதி இரவு. ராஜிவ் காந்திக்கு அருகே குண்டு வெடித்ததும், ஏற்கெனவே திட்டமிட்டபடி நளினியும், சுபாவும் இந்திரா காந்தி சிலையை நோக்கி ஓடினர். குண்டு வெடித்த அதிர்ச்சியில் மைதானத்தில் இருந்த பலரும், இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டு இருந்ததால், இவர்கள் ஓடுவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.

இந்திரா காந்தி சிலையருகே இவர்கள் சில நிமிடங்கள் காத்திருந்த நிலையில், வந்து சேர்ந்தார் சிவராசன்.

தமிழன் அழுகையை உலகம் உணர்ந்தது -ஜூனியர் விகடன்!

உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி,
ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்​கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் வெற்றி பெற்று இருப்பதுதான் இந்த ஆறுதலுக்குக்காரணம். இதைத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளக் காரணம் இந்தியா எடுத்த நிலைப்பாடு.

கேணல் ரமேஸின் படுகொலை அவுஸ்திரேலிய ஊடகத்தில்

The Global Mail ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

15 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட 30 மாடிக் கட்டிடம்

15 நாட்களில் 30 மாடி உயர கட்டிடம் ஒன்றை கட்டி முடித்து சீனா புதிய சாதனை படைத்துள்ளது. இக்கட்டிடம் சீனாவின் ஹியூனான் மாகாண தலைநகரான சாங்ஷா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பான் மடையன்! மந்திரவாதி!! துரோகி!!! பிள்ளையானின் புலம்பல்?

வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்திருக்கின்றேன். மட்டக்களப்பான் மடையனென்றும் மந்திரவாதிகளென்றும்; சொல்வார்கள். நாம் அவர்கள் பக்கமிருந்தால் எம்மை நல்லவர்களென்று சொல்வார்கள். ஏதாவது அவர்களுக்கு எதிராகச் சொல்லிவிட்டால் துரோகியென்பார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்தார்.

ஐ.நா. தீர்மானம் எதிரொலி அமெரிக்க பொருட்களுக்கு இலங்கையில் எதிர்ப்பு!

இலங்கை::ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியதால், இலங்கை கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும்படி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை மூடுகிறது அரசாங்கம்? - வாரஇதழ் தகவல்!!

இலங்கை::ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவிற்கு விசா வழங்குவதற்கு கனடிய தூதரகம் இழுத்தடிப்பு!

கடந்த ஆண்டு நவம்பரில் கனடா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான திரு மாவை சேனாதிராஜாவிற்கு விசா வழங்குவதற்கு கனடியத் தூதரகம் பின்னடித்துள்ளது.

தமிழீழம் மலர மீண்டும் ரெசோ அமைப்பு மலர வேண்டும் - கி.வீரமணி

தமிழீழத் தனிநாடு உருவாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக 1985-ல் செயல்பட்ட "டெசோ" அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் கி. வீரமணி கூறியதாவது:

உலகில் மிகவும் விலையுயர்ந்த தேநீர்

பண்டா கரடியின் மலம் சேர்க்கப்பட்ட உலகின் மிகவும் விலையுயர்ந்த தேநீர் விற்பனைக்கு விடப்படவுள்ளது.இந்த சேதன மூலப்பொருட்களை உள்ளடக்கிய தேநீரானது உடல்நலத்துக்கு மிகவும் உகந்ததென மேற்படி தேயிலையை தயாரித்துள்ள சீன தொழில் முயற்சியாளரான அன் யன்ஷி (41 வயது) தெரிவித்தார்.

தரையிலிருந்து 200 அடி உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை (படங்கள் இணைப்பு)

மொனாக்கோவில் மொன்ரே கார்லோ நகரில் தரைமட்டத்திலிருந்து 200 அடி உயரத்தில் அரை அங்குல அகலமான கயிற்றில் நடந்து மிட்ச் கெமீட்டர் என்ற 23 வயது இளைஞர் சாதனை படைத்துள்ளார். கீழே குனிந்து பார்த்தால் தலைசுற்றி விழக்கூடிய அபாயகரமான நிலையில் 50 மீற்றர் நீளமான மேற்படி கயிற்றில் இரு தடவைகள் நடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

தனியொரு ஈரலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு (படங்கள் இணைப்பு)

தனியொரு ஈரலுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சம்பவம் பார்சிலோனாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் புதன்கிழமை வெளியிடப் பட்டுள்ளன.

12 வயதில் 5 அடி 2 அங்குல கூந்தல் (படங்கள் இணைப்பு)

12 வயதில் 5 அடி 2 அங்குல நீளத்துக்கு கூந்தலை வளர்த்து பார்ப்பவரை வியப்பில் விழி உயர்த்த வைத்த பிரேசில் நாட்டு சிறுமி, தனது கூந்தல் முழுவதையும் 3500 ஸ்ரேலிங் பவுணுக்கு விற்க தீர்மானித்துள்ளார்.

நிர்க்கதியான நிலையில் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்

வேலையிழந்து நிர்க்கதியான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பியவண்ணம் உள்ளனர். அதேவேளை வேலைவாய்ப்புத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் தொகை குறைந்தபாடில்லை. இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில் தமது எதிர் காலம் குறித்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் மேலும் ஒரு பகுதியினர் காணப்படுகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளார் – பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா)!

இலங்கை::தமிழக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளார் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

கருணாநிதி உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைமையை அடைந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் தேசத் துரோகியாக வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி - திவயின!

இலங்கை::இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில், யோசனை ஒன்றை கொண்டு வரும் சூழ்ச்சியில், தேசத்துரோகியாக, வெளிநாட்டுசக்திகளுக்கு உதவிய இலங்கை வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவர் தொடர்பாக தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

குடும்பத்தில் நானே நிஜமான சர்வாதிகாயாக உள்ளேன்

தனது குடும்பத்தின் உண்மையான சர்வாதிகாரி தானே என சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் மனைவி அஸ்மா, தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிவைத்த இலத்திரனியல் அஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமை ஏமாற்றமளிக்கின்றது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது நிலைப்பாட்டை விளக்கி நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட கல்லறையிலிருந்து வெளியேற்றப்பட்ட அச்சமூட்டும் சடலம் (படங்கள் இணைப்பு)

சீனாவில் 130 ஆண்டுகள் பழைமையான அச்சமூட்டும் வகையில் காணப்பட்ட ஆணின் சடலமொன்று கல்லறைகளிலுள்ள கலைப்பொருட்களை கொள்ளையிடுபவர்களால் தோண்டி எடுக்கப்பட்டு கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது.

அந்தரத்தில் பறந்த மதகுரு (படங்கள் இணைப்பு)

தனது பாதணிகளிலிருந்து செம்புகை வானில் பரவ அந்தரத்தில் பௌத்த மதகுரு ஒருவர் பறந்து செல்லும் அதிசய காட்சியை காணும் வாய்ப்பு அண்மையில் பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லா வில்லெட்டே எனும் இடத்தைச் சேர்ந்த மக்களுக்கு கிடைத்துள்ளது.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வல்லுறவு

நபரொரரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 39 வயது பெண்ணொருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பார்க்ஸைட் எனும் இடத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஹெலன் எல்டர் என்ற மேற்படி பெண், நபரொருவரின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்து அந்நபரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கையை துளைத்த மர ஆணியுடன் 4 மணி நேர போராட்டம்

தனது வீட்டின் மரப்படிக்கட்டை திருத்துவதற்காக ஆணி அறையும் இயந்திரம் மூலம் ஆணி அறைவதில் ஈடுபட்டிருந்த நபரொருவர், ஆணி கையை ஊடுருவி மரப்படிக்கட்டில் பாய்ந்த நிலையில் 4 மணித்தியாலங்களின் பின் மரப்படிக்கட்டின் பகுதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

வித்தயாசமான மணமகன் தேவை விளம்பரம்

திருமணமாகி 3 வருடங்களுக்கு பாலியல் உறவை தள்ளி வைக்கக் கூடிய மணமகன் தேவை என சீனாவைச் சேர்ந்த 38 வயது பெண்ணொருவர் இணையத்தளம் மூலம் விளம்பரம் செய்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் விளக்க கடிதம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

தமிழாக்கத்தின் முழு வடிவம்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல