புதன், 5 ஜூன், 2013

பச்சை குத்தினால் ஆல் பாஸ்வோர்ட் ஓகே!

நம் காலத்தில் நிறைய கஜினிகள் உலவுகிறார்கள்.ஆம்- நிறைய பேருக்கு இப்போதெல்லாம் பாஸ்வோர்ட் வைத்த உடனே ஸ்பீடாய் மறந்துவிடும். அல்லது ரொம்ப சிம்பிளான பாஸ்வோர்ட் யூஸ் பண்ணி ஹேக்கர்களுக்கு வேலையை ஈஸியாக்கி விடுவார்கள். இதனை முறியடிக்கும் வண்ணம் மோட்டோராலா ஒரு புது வகை சிலிக்கான் ஸ்டிக்கரை உருவாக்கி உள்ளது.

அல்லேலோபதி என்றால் என்ன?

“அல்லோபதி தெரியும், அல்லேலோபதி என்பது புதிதாயிருக்கிறதே, டைப் அடித்தவர் ஏதாவது கோளாறு பண்ணி விட்டாரோ’ என்றெல்லாம் குழம்ப வேண்டாம். தாவரவியலில் “அல்லேலோபதி’ என்று ஒரு பிரிவு நிஜமாகவே இருக்கிறது. ஒரு தாவரம் வெளியிடுகிற பல்வேறு ரசாயனங்கள் அக்கம்பக்கத்திலுள்ள தாவரங்களில் தாக்கங்களை ஏற்படுத்துகிறதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைப் பற்றி ஆராய்வதுதான் அல்லேலோபதி.

’இதுவும்தாண்டா போலீஸ்!

காஷ்மீரில் சப் இன்ஸ்பெக்டர் சிவ கிருஷ்ண சர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார். சராசரி எஸ்.ஐ அல்ல. பல பதக்கங்கள், விருதுகள் பெற்றவர். மாநிலத்தின் மிக உயர்ந்த ஷேர்,இ,காஷ்மீர் விருதை இருமுறை வென்றவர். தீரச் செயலுக்கான ஜனாதிபதி விருதும் பெற்றவர்.

வீட்டில் ஒளிந்திருக்கும் ஒன்பது அலர்ஜி மையங்கள்!!!

மெத்தையுடன் கூடிய இருக்கைகள் மற்றும் படுக்கைகள்

மெத்தையுடன் கூடிய பகட்டான இருக்கைகளும், படுக்கைகளும் (upholstered furniture) வீட்டின் தோற்றத்தினை மாற்றியமைத்து ஆடம்பரமாகக் காட்டும். ஆனால் அவைதான் மைட்(dust mites) எனப்படும் மிகச்சிறிய உண்ணிகளுக்கு வசதியான தங்குமிடங்கள் ஆகும். எனவே வீட்டிலுள்ள உறை போட்ட மற்றும் உறை போடாத இருக்கைகளையும் படுக்கைகளையும் அவ்வப்போது துடைத்து தூசிகள் அண்டாதவாறு பாதுகாத்து வையுங்கள். வேக்யூம் க்ளீனர் பயன்படுத்தி, தூசிகளை அகற்றுங்கள். மூலையில் வைக்கப்பட்டிருந்த ஃபர்னிச்சர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவற்றை அப்படியே வீட்டுக்குள் கொண்டு வராதீர்கள். மெத்தையுடன் கூடிய பகட்டான இருக்கைகளும், படுக்கைகளும் உள்ளே ரகசியமான துவாரங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் ஈரம், தூசிகள் இருக்கலாம். எனவே ஈரப்போக்கிகளைக் (dehumidifier) கொண்டு உள்ளே நிறைந்திருக்கும் ஈரத்தினை அகற்றுங்கள். மேலும் வழவழப்பான தோல் மற்றும் வினைல் பொருள்களால் ஆன ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். மெத்தையுடன் கூடிய இருக்கைகள் மற்றும் படுக்கைகளைத் (upholstered furniture) தவிருங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா?


நிறைய மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு, உடலில் உள்ள சில பிரச்சனைகளே காரணமாகும். சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் சாதாரணமானவர்களுக்கு, இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஆபீசில், போர் அடிக்கும் போது எப்படி டைம் பாஸ் பண்ணலாம்?? அருமையான டிப்ஸ்!!

1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.

2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை (அல்லது ஃபிகர்களை) எண்ணிக் கொண்டிருக்கலாம்.

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் 1

1.மால்களில் பார்க்கக்கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கும் போது தட்டுப்படுவார்களா?

2.நண்பர்களுடன் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, பில் தரும்பொழுது அழைப்பு வர மாதிரி செல்போன எங்கைய்யா வாங்குறீங்க?

இந்த மாசக்கடைசி ஆனாலே இப்படித்தான் :

1.இப்ப எடுத்து ஓட்டுடா பாப்போம்...என்கிறது எனது பைக்

2. மூணு கொய்யா 5 ருபா! மச்சி, எப்பவுமே ஃபரேக்ஃபாஸ்ட் ஃபுருட்ஸ் தான் சாப்டணும்னு டிவில டாக்டர் சொன்னாரு

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்

1.ஐம்பது பைசா கிராப் ஷீட்ல அவ்வளவு பொறுமையாக கோடு போட்டது யாரு ..?

2.நமது ராணுவம் பதுங்கி இருந்து தாக்குவது எப்படி என்பதை நமது ட்ராஃபிக் போலீசிடம் ஏன் கற்றுக் கொள்ள கூடாது ..?

தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கும் உணவு பொருட்கள்!!!

எங்கு பார்த்தாலும், விவாகரத்து, குடும்ப சண்டை மற்றும் கணவன்-மனைவிக்கு இடையே மோதல்கள் என நாளிதழ்களிலும், கண்முன்னும் பார்க்கும் 21-ம் நூற்றாண்டில், இன்னமும் சமுதாயம் அமைப்பு உடையாமல் பாதுகாக்கும் அம்சமாக குடும்பம் உள்ளது. சமூக அமைப்பு உடையாமல் இருப்பதற்கு கணவன் மனைவியிடம் இருக்கும் அன்யோன்யமான உறவும் காரணமாக உள்ளது. அன்யோன்யமான உறவிற்கு மனப்பூர்வமான உறவு மட்டுமல்லாமல், உடல் பூர்வமான தாம்பத்ய உறவும் இன்றியமையாது உள்ளது. சில சச்சரவுகளை பெரிது படுத்தப்படாமல், பள்ளியறைகளிலேயே பேசி முடிக்கப்படுவதும், ஆண் பெண் இடையே உள்ள இனக்கவர்ச்சியாலும் உறவு வலுப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

தவறான அளவுள்ள பிராவை அணிவதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!!!

பெரும்பாலான பெண்கள் ஸ்மார்ட்டாகவும், ஃபேன்ஸியாகவும் இருக்கும் பிராவை அதிகம் தேர்ந்தெடுத்து அணிவார்கள். இவ்வாறு தற்போது பல பிராக்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் அழகாக வந்துள்ளன. ஆனால் அவ்வாறு அதனை வாங்க நினைக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சரியான அளவு பிராவை அணியாவிட்டால்,

"கர்ப்பிணிகளே! கைக்கால் வீக்கத்தால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சில டிப்ஸ்..."

கர்ப்பமாக இருக்கும் போது வயிறு மட்டும் வீங்கினால் பரவாயில்லை. ஆனால் கைகளும், கால்களும் வீக்கமடையும். குறிப்பாக கர்ப்பத்தின் இறுதி மூன்று மாதத்தில் தான், இத்தகைய வீக்கங்கள் ஏற்படும். அதிலும் கால் வீக்கம் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு கைகள் மற்றும் கால்கள் வீக்கமடைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை உடலில் நீர்ச்சத்து தேங்கியிருப்பது மற்றும் அதிகப்படியான இரத்த ஓட்டம் ஒரே இடத்தில் இருப்பது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல