ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒக்ஸ்போர்ட்டில் இன்று ஆற்ற இருந்த சிறப்பு உரை இரத்துச் செய் யப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் யூனியன்அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத்தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.
புதன், 1 டிசம்பர், 2010
கருணாநிதி சொத்து விபரத்தை வெளியிட்டார்
முதல்-அமைச்சர் கருணாநிதி தனது சொத்துக்கணக்கை வெளியிட்டார். கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்று அவர் கூறி உள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Labels:
உலகப்பார்வை
ஸ்பெயினில் பிடிபட்ட தீவிரவாதிகள் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் கைக்கூலிகள்
ஸ்பெயினில் பிடிபட்ட வெளிநாட்டினர்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 7 கொள்ளையர்கள் பிடிபட்டனர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவன் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவன்.
அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டுகள், விசா உள்ளிட்ட பயணம் செய்வதற்கான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் முதலியன நிறைய அளவில் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பாஸ்போர்ட்டுகள், விசா மற்றும் பணத்தை, பார்சிலோனா நகருக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகளிடம் இருந்து அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 7 கொள்ளையர்கள் பிடிபட்டனர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவன் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவன்.
அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டுகள், விசா உள்ளிட்ட பயணம் செய்வதற்கான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் முதலியன நிறைய அளவில் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பாஸ்போர்ட்டுகள், விசா மற்றும் பணத்தை, பார்சிலோனா நகருக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகளிடம் இருந்து அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
Labels:
உலகப்பார்வை
வந்தது பாம்பல்ல "நீல்' இன மீன்
மட்டக்களப்பு கல்லடி ஆற்றில் ஆயிரக்கணக்கில் பாம்பு வருவ தற்கும் சுனாமி ஏற்படுவதற்கும் சம்பந்தப்படுத்தி வரும் தகவல் களில் எவ்விதமான உண்மையும் இல்லை என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார். இது ஒருவித விலங்கு இனத் தைச் சேர்ந்த நீல் எனப்படுகிற மீன் வகையாகும். இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
Labels:
இலங்கை
ஓரினச்சேர்க்கையாளர்களை கைது செய்வேன்
ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெரும் அளவில் இருக்கிறார்கள். இதனால் அந்த நாட்டில் எய்ட்ஸ் நோயும் அதிக அளவில் உள்ளது.
Labels:
உலகப்பார்வை
பாகிஸ்தான் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது
பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி. 45 வயதான இவர் இஸ்லாம் மதத்தை அவமதித்தாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்தும் தனக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்றும் கோரி ஆசியா பீவி ஜனாதிபதி சர்தாரிக்கு மனு செய்தார். இதை ஏற்று சர்தாரி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.
Labels:
உலகப்பார்வை
ஆண் குழந்தை வயிற்றுக்குள் கரு
பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு கரு இருந்த விசித்திர சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது சட்டீஸ்வர் மாநிலத்தின் தாம்தரி மாவட்டத்தின் அபான்பூர் பகுதியை சேர்ந்தவர் திகம்சந்த், அவரது மனைவி பிலேஸ்வரி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் வயிற்றுப் பகுதியில் வீக்கமாக இருந்ததுடன், குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
நவீன அடிமைகள்
இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் முக்கியமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை தேடிச் செல்லும் பெண்கள். வறுமை நிலையில் இருந்து தமது குடும்பத்தை மீட்கவென பல கனவுகளைச் சுமந்து கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குச்செல்கின்றனர். அவர்களில் பலர் தாம் செல்லும் நாடுகளில் தமது எஜமானர்களின் விசுவாசத்துக்கேற்றவாறு பணிசெய்து, தாம் நாடு கடந்து சென்றதன் நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
சீனா சதி செய்ததாக சர்ச்சை
ஆசிய விளையாட்டு, “டேக்வாண்டோ' போட்டியில் பங்கேற்ற தைவான் வீராங்கனை யாங்ஜன் சர்ச்சைக்குரிய முறையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு சீனாவின் சதிதான் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது. இதனால், சீனா மற்றும் தைவான் இடையே அரசியல் ரீதியாக மோதல் உருவாகியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
பெண்கள் விரைவில் பருவம் அடைதலின் காரணங்களும் சிக்கல்களும்
பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால், மகள் இப்பொழுது 10 -12 வயதிலேயே அடைந்து விடுகிறாள். கடந்த சில தசாப்தங்களாகவே இம்மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. 1800இன் நடுப்பகுதிகளில் அமெriக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் 1960களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது.
Labels:
பெண்கள் பக்கம்
பொது இடங்களிலுள்ள கணனியைப் பயன்படுத்துகிறீர்களா?
நீங்கள் சொந்தமாக கணனி இணைய இணைப்பு வைத்திருந்தாலும் கூட சில வேளைகளில் இண்டர்நெட் மையம், நூல் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் காணப்படும் பலரின் பாவனைக்கென வைக்கப்பட்டிருக்கும் கணனிகளையும் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கும் வரலாம். இவ்வாறு பொது இடங்களிலுள்ள கணனிகளைப் பயன்படுத்தும் போது
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
வட கொரியா அதிக செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட குழந்தையென சீனா தெரிவிப்பு
சீன அதிகாரிகள் தமது நட்பு நாடான வட கொரியா மீது அதிருப்தியை கொண்டுள்ளமை அமெரிக்க இராஜதந்திர தொடர் பாடல்கள் தொடர்பாக கசிந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
சரணடைந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஓமந்தை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் திணக்களம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜதுரை சசிசந்திரன் என்ற நபரே தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜதுரை சசிசந்திரன் என்ற நபரே தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Labels:
இலங்கை
தென் கொரியாவில் மாடியிலிருந்து வீழ்ந்து இலங்கையர் மரணம்!
தென் கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் 7 மாடிக் கட்டிடத்திலிருந்து வீழ்ந்து மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கொரிய அதிகாரிகள் இது தொடர்பாகத் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் லக்ஷித ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.
கொரிய அதிகாரிகள் இது தொடர்பாகத் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் லக்ஷித ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.
Labels:
இலங்கை
யாழில் ஒரே நேரத்தில் 3 வர்த்தக நிலையங்கள் கொள்ளை!
யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில் கைத்தடிச் சந்தி பகுதியில் நேற்று ஒரே நேரத்தில் வர்த்தக நிலையங்கள் மூன்று கொள்ளையிடப்பட்டுள்ளன..
முழுமையான பாதுகாப்பு மிக்க பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது..
முழுமையான பாதுகாப்பு மிக்க பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Labels:
இலங்கை
புலிகளின் புலனாய்வு வலையமைப்பு முக்கியஸ்தர் (பானு) எனப்படும் செல்வராசா சீலன் கொழும்பில் கைது!
புலிகளின் புலனாய்வு வலையமைப்பு முக்கியஸ்தர் (பானு) எனப்படும் செல்வராசா சீலன் கொழும்பில் கைது!
இலங்கையில் புலிகளின் புலனாய்வு வலையமைப்பு வலுவான நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் புலிகளின் புலனாய்வு வலையமைப்பு வலுவான நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு சிறை
அவுஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனையை விதித்துள்ளது. இணையத்தளத்தின் ஊடாக சூதாட்டத்தை மேற்கொண்டு வந்தமை தொடர்பிலேயே இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தேவாலயம் ஒன்றின் நிதியத்தில் இருந்து இணையத்தளம் ஊடாக 1.5 மில்லியன் டொலர்களை குறித்த இலங்கையர் களவாடியுள்ளார். அத்துடன் பொதுநலவாய வங்கியில் இருந்து மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாத வரையான காலப்பகுதியில் 223 மூவாயிரத்து 404 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையரை நாடு கடத்தும் ஏதுநிலை குறித்தும் பிரிஸ்பேன் நீதிபதி ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த வெளியேறும் இடத்தை புலம்பெயர் தமிழர்கள் அறிந்திருக்கவில்லை
லண்டனில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு தமது எதிர்பினைக் காட்ட முனைந்தவர்கள் எந்தவொரு நாட்டின் தலைவரோ அல்லது சிறப்பு பிரதிநிதிகளோ சாதரண பயணிகள் வெளியேறும் பகுதியினால் வெளியேற மாட்டார்கள் என்பதனை தெரிந்து கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி செயலக கொள்கை ஆராய்ச்சி மற்றும் தகவல் திணைக்கள பணிப்பாளர் லூஷன் ராஜகருண தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
இத்தாலிய பிரபல திரைப்பட இயக்குநர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
இத்தாலிய பிரபல திரைப்பட இயக்குநர் மரியோ மொனி செலி மருத்துவமனையொன்றின் ஜன்னலினூடாக பாய்ந்து தற்கொலை செய்து கொண் டுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
ஆட்டங்காண வைத்துள்ள உலக அந்தரங்கங்கள்
“விக்கிலீக்ஸ்' என்ற என்ற இந்த இணையத்தளம், பெயர் அறிவிக்காத தனிநபர் பங்களிப்புக்களையும், அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் சமய ஸ்தாபனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களிலிருந்து சட்டபூர்வமற்ற முறையில் பெறப்பட்ட தகவல்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவ்வாறு சர்வதேச முக்கிய இரகசியங்களை வெளியிட்டுள்ள இந்த இணையத்தளமானது சுவீடனிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது. என்பதை மட்டுமே தற்போது அறிந்து கொள்ளமுடிகின்ற அதேவேளை இந்த இணையத்தளத்தின் பங்களிப்பாளர்களின் விபரங்களையோ அல்லது முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொண்ட வழிறைகளைப் பற்றியோ அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் இரகசியங்கள் பேணப்பட்டுள்ளன. இது மாத்திரமன்றி இவ் இணையத்தளமானது நிறுவிய ஓராண்டுக்குள்ளேயே அம்பலத்துக்குவராத 1.2 மில்லியன் முக்கிய ஆவணங்களை தரவிறக்கியுள்ளது. இந்த ஆவணங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் இலங்கை சம்பந்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளின் அரசியல் அந்தரங்க இரகசியங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின்அமெரிக்க தூதரங்களுக்கிடையில் பரிமாறிக்கொண்ட விடயங்கள் ஆகியவற்றை துல்லியமாக பரகசியப்படுத்தியது விக்கிலீக்ஸ். இதனால் குறிப்பாக அமெரிக்கா பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
உலக எய்ட்ஸ் தினம்
எய்ட்ஸ் (AIDS) என்றால் என்ன?
AIDS என்ற சொல் Acquired Immune Deficiency Syndrome என விளக்கப்படுகிறது.
AIDS என்ற சொல் Acquired Immune Deficiency Syndrome என விளக்கப்படுகிறது.
Labels:
இன்று
இதய அடைப்பு
நாற்பது வயதை கடந்துவிட்ட இருபாலாரும் தற்போதுள்ள சூழலில் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்று ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதுமை என்பது அறுபது வயதில் தான் தொடங்கும் என்ற சித்தாந்தம் சென்ற தலைமுறையினருடன் கடந்துவிட்டது. தற்போதுள்ள வேகமான வாழ்க்கை நடைமுறையால் முதுமை நாற்பது வயதிலேயே எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டதை அனைவரும் மனதிற்குள் ஒப்புக் கொள்கிறார்கள். குறிப்பாக, இதயம் தொடர்பான சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதிலும் மாரடைப்பு குறித்து அதிகம் கவலை கொள்கிறார்கள். இந்நிலையில் மாரடைப்பு வந்தவுடன் அவர்களுக்கு “கார்டியோஜெனிக் ஷொக்' என்ற சிகிச்சை மூலம் பெரும்பாலானவர்களைக் காப்பாற்றி, மருத்துவ சேவை செய்து வருவதில் தன்னிகரற்ற மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனை. இம்மருத்துவமனையில் இதய சிகிச்சைப்பிரிவில் மூத்த மருத்துவராகப் பணியாற்றிவருபவரும், வழங்கிய செவ்வி.
Labels:
நோய்கள்
80 பிராணிகளுடன் ஒரே வீட்டில் வாழும் அதிசய குடும்பம் (படங்கல் இணைப்பு)
20 பாம்புகள், 15 ஊர்வன, 25 முலையூட்டிகள் உட்பட 80 பிராணிகளுடன் வீடொன்றில் குடும்பமொன்று வாழ்ந்து வரும் அதிசயம் பிரித்தானிய மோர்லி நக ல் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
வயிற்றுக்குள் இருந்து இசை
சுவீடனைச் சேர்ந்த நபரொருவர் வயிற்றில் இருந்து சிறிய “ஓடியோ' முறைமையொன்றினூடாக பல மணி நேரமாக இசையை ஒலிபரப்புச் செய்து சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
கருத்தடை உறைகளால்தொப்பி
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் எயிட்ஸ் நோய் பரவி வருவதை கவனத்திற் கொண்டு பாதுகாப்பான பாலியலை ஊக்குவிப்பதற்கு மாணவர்கள் குழுவொன்று விடுத்த கோரிக்கையை யடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்ஹிஸித் வெஜ்ஜஜீவா கருத்தடை உறைகளான தொப்பியை அணிந்திருப்பதை படத்தில் காணலாம்.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
நத்தார் தாத்தாக்கள்
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நத்தார் தாத்தாக்களுக்கான ஓட்டப் போட்டியில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நத்தார் தாத்தா உடையணிந்து பங்கேற்றனர்.
இந்த ஓட்டப் பந்தயத்தில் சேகரிக்கப்பட்ட பணமானது அங்கவீனமடைந்த சிறுவர்களுக்கான தொண்டு ஸ்தாபனமொன்றுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
இந்த ஓட்டப் பந்தயத்தில் சேகரிக்கப்பட்ட பணமானது அங்கவீனமடைந்த சிறுவர்களுக்கான தொண்டு ஸ்தாபனமொன்றுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
Labels:
உலகப்பார்வை
10 மீற்றர் உயரமான சொக்கலேட் நத்தார் மரம் (படங்கள் காணொளி இணைப்பு)
சொக்கலேட்டைப் பயன்படுத்தி 10 மீற்றர் உயரமான நத்தார் மரமொன்றை பிரான்ஸை சேர்ந்த முன்னணி சொக்கலேட் தயாரிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பற்றிக் ரோஜர் என்ற இந்த சொக்கலேட் தயாரிப்பாளரால் வடிவமைக்கப்பட்ட இந்த சொக்கலேட் நத்தார் மரம் 4 தொன் நிறையுடையதாகும்.
Labels:
வினோதமான செய்திகள்
சூரியனுக்கு உரிமையாளர் நானே (படம் இணைப்பு)
சூரியனின் உரிமையாளர் தானே என ஸ்பெயினிலுள்ள கலிசியா பிராந்தியத்தைச் சேர்ந்த அஞ்ஜெலஸ் துர்ரான் (49 வயது) என்ற பெண் உரிமை கோரியுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
எழுத்தறிவை வளர்க்க 5 வயது சிறுமிக்கும் 6 வயது சிறுவனுக்கும் திருமணம் (படங்கள் இணைப்பு)
மாணவர்களிடையே எழுத்து திறமையை வளர்ப்பதற்காக 5 வயது சிறுமிக்கும் 6 வயது சிறுவனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததன் மூலம் பிரித்தானிய பாடசாலை யொன்று பெரும் சர்ச்சைக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. மாணவர்கள் தமது அனுபவங்கள் மூலம் எழுத்தாற்றலை பெறுவதை ஊக்குவிக்கும் தனது திட்டத்தின் ஒரு அங்கமாகவே வோர் செஸ்டர்ஷியலுள்ள வார்டன் ஆரம்பப் பாடசாலையானது இந்த திருமணத்தை நடத்தி வைத்தது.
Labels:
வினோதமான செய்திகள்
காதலை தேடி படகில் சமுத்திரப் பயணத்தை மேற்கொண்ட சிறுவர்கள் (படங்கள் இணைப்பு)
50 நாட்களாக பசுபிக் சத்திரத்தில் அலைந்து திரிந்த பின் உயிருடன் மீட்கப் பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 3 சிறுவர்கள், காதலுக்காகவே கடல் பயணம் மேற்கொண்ட இரகசியம் வெளியாகியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன் திருமண நிச்சயதார்த்தத்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி (படங்கள் இணைப்பு)
பிரித்தானிய இளவரசர் வில்லியத்திற்க்கும் அவரது காதலி கேட் மிடில்டனுக்கும் இடையிலான காதல் 2007 ஆம் ஆண்டளவில் விரிசல் அடைவதற்கு காரணமாயிருந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகிய யுவதியான லெக்கி லிஸா (23 வயது), இளவரசன் திருமண நிச்சயதார்த்தம் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சி யடைவதாக தெரிவித்தார்.
Labels:
உலகப்பார்வை
இத்தாலிய பிரதமர் வாசஸ்தலங்களில் ரஷ்ய, பிரேசில் அழகிகளுக்கு தனிப்பட்ட விருந்துபசாரம்
இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி தனது வாசஸ்தலங்களில் ரஷ்யா மற்றும் பிரேசிலைச் சேர்ந்த இளம் பெண்கள் பலருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்து விருந்துபசாரங்கள் நடத்தியதாக நடியா மக்றி என்ற விலைமாது ஞாயிற்றுக்கிழமை ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
பள்ளிவாசல் தீ வைத்து கொளுத்தப்பட்டது
அமெரிக்க ஒரேகன் மாநிலத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ 10 நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)























