புதன், 5 டிசம்பர், 2012

அதிக நேரம் கணனி பார்த்தால்.............

பக்கத்தில் கணனி இருந்தால் பலருக்கு மனைவி, மக்கள் அலுவலக வேலை..... என எதுவும் நினைவில் எழாது. கம்பியூட்டர் என்பது பலருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். கம்பியூட்டர் தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்பியூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்பியூட்டரே கதி என இருப்பவர்களுக்கு “கம்பியூட்டர் விஷன் சின்ட்ரோம்” என்கிற பிரச்சினை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.

போதைக்கு அடிமையான மகனால் பிச்சையெடுக்கும் கலாநிதி

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் வீதிகளில், இரண்டு டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.

உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளது

உடலுக்கு வெளியே இதயம் தெரியுமாறு பிறந்த பெண் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லி. அவர் 16 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவபரிசோதனைக்கு சென்றார்.

97 வயதிலும் நாதஸ்வரம் வாசிக்கும் மூத்த கலைஞன்

97 வயதிலும் நாதஸ்வரத்தை அற்புதமாக வாசிக்கின்ற மாபெரும் கலைஞர்தான் கந்தசாமி இராமமூர்த்தி. இவரின் பூர்வீகம் யாழ்ப்பாணம். ஆனால் மட்டக்களப்பைத்தான் வாழ்விடமாக கொண்டு இருக்கின்றார்.

பரம்பரை பரம்பரையாக கோவில்களுக்கு மங்கள இசை வாசிக்கின்ற பாரம்பரியத்தில் பிறந்தவர்.

கோவிலில் கண்ணீர் வடித்த கற்சிலை!

லிந்துலை மட்டகல தோட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் கற்சிலை ஒன்றில் இருந்து நேற்று கண்ணீர் வடிந்து உள்ளது.1960 களில் இருந்து இக்கோவில் அங்கு இருந்து வருகின்றது. கரகம் ஆடுகின்ற இடத்தில் கற்சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

வெலிக்கந்தை முகாமில் பிரபாகரனின் இன்னொரு மகன்! - பாகம் 2




கேள்வி: பின்னர் என்ன நடந்தது?

பதில்: நான் அநாதை ஆனேன். வீதிகளில் அலைந்து திரிந்தேன். கடைகளில் உணவு இரந்து பெற்று உண்டேன். கடை ஓரங்களில் படுத்தேன். மாற்றி உடுக்க உடுப்பு இல்லை. ஏதோ நான் வாழ்ந்தேன்.

ஒரு நாள் என்னை கடந்து சில வாகனங்கள் தொடராக சென்றன. நான் பயத்தில் ஓடிப் போய் வாய்க்கால் ஒன்றுக்குள் மறைந்து கொண்டேன். அவை சென்ற பிற்பாடு பழையபடி என் இடத்தில் வந்து அமர்ந்தேன். ஆனால் சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு வான் வந்தது. எனக்கு அருகில் தரித்து நின்றது.

வெலிக்கந்தை முகாமில் பிரபாகரனின் இன்னொரு மகன்! (பாகம் 1)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான மர்லன் என்பவர்தான் இலங்கையில் மிக உயரமான மனிதனாக இருக்க வேண்டும். இவரது உயரம் ஏழு அடி, மூன்று அங்குலம். வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்.

ரஜினி பற்றிய கட்டுரை

எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.

கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது:

மனித மூளையும் கண்டுபிடிச்சாச்சு!!!!!!!!!!!!!

செயற்கை மனித மூளை
 
மனித உடலுக்கு தேவையான செயற்கைஉறுப்புகளை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது செயற்கை மனித மூளையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது மனித மூளையை போன்று நுண்ணறிவுடன் செயல்படுகிறது. சூப்பர் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய சினிமாப் பாணியில் பைஃனாஸ் நிறுவனம் திறந்து வன்னி மக்களை கொள்ளையடிக்கும் குழு !

இறுதிப்போரில் உடமைகளை இழந்து, உறவுகளை இழந்து, வீடு வாசல்களை இழந்த தமிழர்கள், தற்போது தான் மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்துள்ளார்கள். ஆனல் தற்கு முன்னதாகவே இவர்களை குறிவைத்துள்ளது ஒரு கும்பல். போர் முடிந்து 3 வருடங்களுக்குப் பின்னர், சிறுகச் சிறுக சேமித்து, தமது வாழ்வாதாரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர தமிழர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களையும் ஆசை காட்டி மோசம் செய்கிறார்கள் சில தமிழர்கள் என்றால் பொறுத்துக்கொள்ள முடியுமா ?

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 10

அன்ரன் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும் அன்ரன் பாலசிங்கம் உடனடியாகவே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு நிலமையை விளங்கப்படுத்தியதுடன் குறித்த வித்தியாசமான பத்திரிகையாளருடைய தேவைப்பாடு அவரை தொடர்ந்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விடயங்களை பிரபாகரனிற்கு விளங்கப்படுத்தினார். அன்ரன் பாலசிங்கத்தின் நீண்ட விளக்கங்களை கேட்ட பிரபாகரன் இந்த விளக்கங்களை ஒரு கருத்தாகவே பொருட்படுத்தாமல் இது தவறுதலாக நடந்திருக்கலாம் இது தொடர்பில் நான் விசாரித்து சொல்கிறேன் எனக் கூறிவிட்டு பாலசிங்கத்தினுடனான தொடர்புகளை துண்டித்து விட்டு உடனடியாக பொட்டம்மானுடன் தொடர்புகொண்டு நிலமையை கேட்க முற்பட்டார்.

நாடு கடந்த அரசின் அமர்வுகள் ரத்தானதற்கு உள்வீட்டு முரண்பாடுகள் காரணமா ?

நாடு கடந்த அரசின் 4 வது அமர்வுகள் லண்டனில் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. இதன் முதல் அமர்வு பிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பாக நடைபெற்றது. இருப்பினும் அடுத்து நடைபெறவிருந்த அமர்வுக்கான மண்டபம் திடீரென ரத்தானதால், நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பிரன்ட் டவுன் ஹால் (மண்டபம்) கடைசி நேரத்தில் ரத்தாக யார் காரணம் என்ற கேள்விகளுக்கு இதுவரை ஒரு தெளிவான விடை கிடைக்கவில்லை. இருப்பினும் இலங்கையில் இருந்து வெளியாகும் அரச ஊடகமாக த ஐலன் என்னும் பத்திரிகை, இதற்கு காரணம் பிரன்ட் நகரசபையில் வேலைசெய்யும் சிங்களவர் தான் என விரலைக் காட்டியுள்ளது. சன்ன லொக்கு லியனகே என்னும் சிங்களவரே, பிரன்ட் மண்டபத்தை நாடு கடந்த அரசுக்கு கொடுக்கவேண்டாம் என்று கூறியுள்ளாராம். இதற்கான காரணம் என்ன என்று கேட்டால் இடியப்பச் சிக்கலாக உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல