ஞாயிறு, 7 ஜூன், 2015

நியூ­ஸி­லாந்தில் அகதிகளாக தஞ்சம் கோரி தீமோரில் தவிக்கும் இலங்­கை­யர்கள்

நியூ­ஸி­லாந்தில் தஞ்சம் கோரி ஆபத்­தான கடற்­ப­யணம் மேற்­கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்­தைகள் உட்­பட 54 இலங்­கை­யர்கள், தீமோர் தீவில் கைவி­டப்­பட்ட நிலையில் இருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

மேலும், இவர்­க­ளுடன் பங்­க­ளா­தே­சத்­த­வர்கள் 10 பேர், மியன்­மாரைச் சேர்ந்த ஒரு­வ­ரு­மாக மொத்தம் 65 பேர் இந்த அவல நிலைக்கு ஆளாகி, தீமோர் தீவின் கப்பாங் என்ற இடத்தில் அந்த நாட்டின் பொலிஸ் காவலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

மூக்­கைச்­ சுற்றி தோல் உரி­கி­றதா..?

பொது­வாக இரண்டு வகை­யான சருமம் உள்­ளது. ஒன்று எண்ணெய் பசை சருமம், மற்­றொன்று வறட்­சி­யான சருமம். எண்ணெய் பசை சருமம் உள்­ள­வர்­க­ளுக்­குள்ள பிரச்சினை, முகம் எப்­போதும் எண்ணெய் வழிந்­த­வாறு முகப்­பரு, பிரச்சி­னை­யுடன் இருக்கும். வறட்­சி­யான சருமம் உள்­ள­வர்­க­ளுக்கு, சரும அரிப்பு, எரிச்சல், அசிங்­க­மான சொர­சொ­ரப்­பான சருமம் என்று இருக்கும். அது­மட்­டு­மின்றி, இந்த வகை சரு­மத்­தி­ன­ருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சி­னைகள் போன்­றவை இருக்கும். அதிலும் வறட்­சி­யான சருமம் உள்­ள­வர்­க­ளுக்கு, ஒரு­சில இடங்­க­ளான மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்­பட்டு, தோல் உரிய ஆரம்­பிக்கும். இவற்றைத் தவிர்க்க ஒரு­ சி­ல­வற்றை அன்­றாடம் பின்­பற்றி வந்தால், நிச்­சயம் வறட்­சியைத் தவிர்க்­கலாம். இப்­போது மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க சில வழி­கள் பற்றி பார்ப்போம்.

மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனச்­சுத்­தி­க­ரிப்பு ஒரு வர­லாற்று தொடர்­க­தையா...?

முஸ்­லிம்கள் மீது அடா­வ­டித்­தனம் கார­ண­மாக உலகில் மதிப்­பி­ழந்த பர்மா தனது பெயரை மியன்மார் என மாற்றிக் கொண்­டது. மீண்டும் மியன்மார் எனும் பெயரும் மாற்றம் பெறுமோ?என்ற சந்­தேகம் எழு­கி­றது

உல­கி­லுள்ள சிறு­பான்மைச் சமூ­கங்­களில் அதி உச்­சக்­கட்ட துன்­பங்­களை அனு­ப­விக்கும் சிறு­பான்மை சமூ­க­மென்றால் மியன்மார் முஸ்­லிம்­கள்தான்

இன்ஃ­பு­ளு­வென்சா! கர்ப்­பிணித் தாய்­மார்கள் அவ­தானம்!

இன்ஃ­பு­ளு­வென்சா (Influenza) எனப்­ப­டு­வது ஃபுளூ எனப் பொது­வாக அழைக் ­கப்­படும் பற­வை­க­ளிலும், பாலூட்­டி­க­ளிலும் காணப்­படும் ஒரு ­வ­கைத்­தொற்று நோயாகும். ஆர்த் ­தோ­மிக் ­சோ­வி­ரிடே குடும்பத்தைச் சேர்ந்த

ஆர்.என்.ஏ தீ நுண்மத்­தினால் (virus) உண்­டாவது. இந்நோய் தற்­போது இலங்­கையில் மிகவும் வேக­மாக பரவி வரு­கின்­றது. குறிப்­பாக கர்ப்­பிணித்தாய்­மார் கள், சிறு­வர்கள், முதி­ய­வர்கள், இளம் வய­தினர் என அனை­வ­ரையும் தாக்கும் இந்நோய் மர­ணத்தை விளை­விக்­கக்­கூ­டி­யது என சுகா­தார கல்விப்பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

யுத்தகாலத்தில் திருமலையில் இடம்பெற்ற கொடூரங்கள்...

நாட்டில் யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் திரு­கோ­ண­மலை கிரா­மப்­பு­றங்­களைச் சேர்ந்த மக்கள் அனு­ப­வித்த இன்­னல்கள் ஏராளம். பலர் தங்கள் பிள்­ளை­களை பறி­கொ­டுத்­தனர். மேலும் சிலர் கட்­டா­யத்தின் பேரில் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். மேலும் பலரோ விசா­ர­ணைக்­கென அழைத்துச் செல்­லப்­பட்டு காணாமல் போன­வர்கள் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்­ளனர்.

இந்­த­நி­லையில், அவர்­களின் உற­வி­னர்கள் இன்றும் கண்ணீர் வடித்­த­வண்­ண­முள்­ளனர். அவ்­வா­றா­ன­வர்­களின் கண்ணீர் கதை­களே இவை...

தமிழ்ச் சமூகம் விழித்துக் கொள்ளுமா?

புங்­கு­டு­தீவில் வித்­தியா என்ற மாணவி கூட்டு வன்­பு­ணர்­வுக்குப் பலி­யாக்­கப்­பட்ட கோரம், தமிழ்ச் சமூ­கத்தில், பல்­வேறு தாக்­கங்கள்- – விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்தச் சம்­ப­வத்தின் விளை­வாக, மக்­க­ளி­டையே எழுந்த கோபம், ஆற்­றாமை, போராட்டம் போன்­ற­வற்றைப் பற்­றியே இது­வரை வெளிப்­ப­டை­யாகப் பேசப்­பட்டு வரு­கி­றது. ஆனால், இன்­னொரு பக்­கத்தில் இந்தக் கோர நிகழ்வின் விளை­வாக, புங்­கு­டு­தீவில் இருந்து பல குடும்­பங்கள் வெளி­யேறும் நிலை ஒன்று உரு­வா­கி­யுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது. ஆயு­த­மோ­தல்கள் நிகழ்ந்த காலத்தில், தமிழ்ச் சமூ­கத்­துக்கு இடம்­பெ­யர்வு ஒன்றும் புதிய அனு­ப­வ­மாக இருக்­க­வில்லை.

லிபியாவிலும் கால் வைத்துள்ள ஐ.எஸ்.அமைப்பு

 image source: google
ஈராக்­கிலும் லிபி­யா­விலும் பெரு நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்­றி­யுள்ள ஐ.எஸ். அமைப்­பினர் தற்­போது லிபி­யாவில் பெரு நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்­று­வதில் அதிக அக்­கறை காட்­டு­கின்­றனர். இந்த அக்­க­றைக்கு மூன்று கார­ணங்கள் உண்டு.

முத­லா­வது முஅம்மர் காடாஃ­பியின் கொலைக்குப் பின்னர் பல கூறு­க­ளாகப் பிள­வு­பட்­டி­ருக்கும் லிபி­யாவை கைப்­பற்­று­வது இலகு.

தண்­டனை கடு­மை­யா­க இருப்பின் குற்­றச்­செ­யல்­களை தடுக்­க­மு­டியும்

வித்­தியா வன்­பு­ணர்வுக் கொலை­யுடன் புங்­கு­டு­தீவில் இது மூன்­றா­வது சம்­ப­வ­மாக இடம்­பெற்­றுள்­ளது. எனவே, இதற்கு ஒரே­வழி குற்­ற­வா­ளி­க­ளுக்­கான தண்­ட­னை­யினை துரி­த­மாக வழங்­கு­வ­தே­யாகும். தண்­டனை கடு­மை­யா­கவும், விரை­வா­கவும் இருந்தால் குற்றச்செயல்­களை குறைக்­க­மு­டியும். மக்­க­ளுக்கு சட்­டத்­தின்­மீது நம்­பிக்கை ஏற்­ப­ட­வேண்­டு­மாயின் தண்­ட­னைகள் விரை­வாக வழங்­கப்­பட வேண்டும் என்று வித்­தி­யாவின் குடும்­பத்­தினர் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

ஒரு சக்­க­ர­வர்த்­தியின் முடி துறத்­தலும் காற்­பந்­தாட்ட சாம்­ராஜ்­யத்தின் எதிர்­கா­லமும்

காற்­பந்­தாட்ட உலகின் சாம்­ராஜ்யம். அதில் சக்­க­ர­வர்த்­தி­யாகத் திகழ்ந்த மனிதர். என்னைப் பார், எனக்கு வய­தா­னாலும் நான் சிங்கம் தான் என்றார். எனது அர­சாங்கம் கறை­ப­டிந்­தி­ருக்­கி­றது என்று எவ­ரேனும் சொன்னால், அதனை சரி­யான திசையில் செலுத்தும் ஆற்றல் எனக்கு இருக்­கி­றது என்று அவர் வெற்றிப் பெரு­மி­தத்­துடன் சொன்னார்.

மீண்டும் மர­ண­தண்­டனை யாருக்கு வைக்­கப்­படும் குறி?

மர­ண­தண்­டனை குறித்த விவா­தங்கள் இலங்­கையில் மீண்டும் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ளன.

இதற்கு, சர்­வ­தேச புகை­யிலை எதிர்ப்பு தின நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன நிகழ்த்­திய உரை மட்டும் காரணம் அல்ல, புங்­கு­டு­தீவில் வித்­தியா என்ற மாண­விக்கு நிகழ்த்­தப்­பட்ட கொடூ­ரமும் கூட ஒரு காரணம் தான்.

விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனை சரணடையுமாறு கூறவில்லை: மறுக்கிறார் கனிமொழி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான எழிலன் என்ற சசிதரனை இலங்கை ராணுவத்திடம் சரணடையுமாறு தாம் கூறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மறுத்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆப்பு வைத்த ஒரு செல்ஃபி

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட செல்ஃபியை வைத்து சிரியாவில் உள்ள அவர்களின் தலைமையகத்தை கண்டுபிடித்து தகர்த்துள்ளது அமெரிக்கா. செல்ஃபி மோகம் பிடித்து திரிவது உலக மக்கள் மட்டும் அல்ல. உலகையே மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் தான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல