ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடம்
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது அவரது ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உடல் சேர்வுவாதமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். முற்றாக சுய நினைவை இழந்த நிலையிலேயே பார்வதி அம்மாள் காணப்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். எண்பது வயதான பார்வதி அம்மாள் தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பார்வதி அம்மாளின் கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமே அவரை பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை
பாகிஸ்தான் அதிபருடன் திருமணமா?
பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கும், அமெரிக்காவில் நியுயார்க்கில் டாக்டராக பணியாற்றும் தன்வீர் சமானிக்கும் துபாயில் திருமணம் நடந்ததாக வதந்திகள் வெளியாகின. இதை அதிபர் சர்தாரியின் உதவியாளர் மறுத்து இருக்கிறார். எதிர்கட்சியினர் அதிபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கற்பனை கதைகளை எடுத்து விடுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




