திங்கள், 9 செப்டம்பர், 2013

பி.டி.எப். பைல் பற்றி சில தகவல்கள்!!!

நாம் இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும். இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது.

அரபு விலைமாதர்களும், பலியாடுகளும்

மொரோக்கோவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த நதியா வீதிக்கு வந்த பொழுது அவளுக்கு 15 வயது. பிள்ளைகளை பராமரிக்க முடியாத, மதுவுக்கு அடிமையான தந்தை அவளை வீதிக்கு அனுப்பியிருந்தார். "எப்படியாவது பணம் சம்பாதித்து வாழ்" என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, ராபாத் நகரின் தெருக்களில் நின்று 20 யூரோக்கு உடலை விலை பேசுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இப்போது நதியா பன்னிரண்டு வருட அனுபவமுள்ள பாலியல் தொழிலாளி. ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலிமா ஹோட்டல், பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கிறார். நதியாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மொரோக்கோவில் பொதுவாகவே கணவன் துணையின்றி குழந்தை வளர்க்கும் தாய்மாரை விபச்சாரிகளுக்கு சமமாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு தடவையும் நதியா வேறு வேலை தேடிச் செல்லும் பொழுது, முதலாளி அவளுடன் படுக்கக் கேட்கிறார். மறுத்தால் வேலை கிடைக்காது.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம், தெரியாத உண்மை

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை, இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது...

1) பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!!

இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள். அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர், தீயவற்றை அழிக்கும் கடவுளாகவும் வணங்கப்படுகிறார். யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

“புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது”

“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” இவ்வாறு கூறியுள்ளார், சுப்ரமணியம் சுவாமி.‘சுவாமி கூறியிருப்பது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா? அவர் எந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறினார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது புலம்பெயர்ந்த தமிழ்ப் பிரமுகர்களுக்குத் தமது ஆற்றலின் வரையறைகள் விளங்க வேண்டும்.

அமைச்சர் மேவின் சில்வாவின் தரக்குறைவான பேச்சும் நடத்தையும் நமக்குப் பழக்கமானவை. அவருடைய அடியாட்கள் தமது கைவரிசையைக் காட்டாதவரை, அவருடைய கருத்துகளுக்கு யாரும் ஒரு முக்கியத்துவமும் வழங்குவதில்லை. திருமதி நவநீதம்பிள்ளையை நிந்திக்கும் விதமாக அவர் கூறியவை ஒரு சாக்கடைப் பத்திரிகையேனும் பிரசுரிக்கத் தகுதியற்றவை. எனினும், சில முக்கிய நாளேடுகள் அவருடைய கூற்றுக்கு முக்கியத்துவம் வழங்கிப் பிரசுரித்திருந்தன. அவை அவருடைய கருத்தை ஏற்றனவா இல்லையா என்பதல்ல இங்குள்ள கேள்வி. அவரது கூற்றைப் பிரசுரிக்க வேண்டிய தேவை என்ன? அது நமது ஊடகங்களின் தராதரம் பற்றிய கேள்வியாகிறது. பொறுப்புள்ள அனைத்துப் பத்திரிகைகளும் அதைப் புறக்கணித்திருந்தால் அது பெரும்பாலும் நமது விருந்தினருடைய காதில் விழாது போயிருக்கலாம். எனவே, அச் செய்திக்கு முக்கியம் வழங்கியோர் அது அவருடைய செவிக்கு எட்டுவதை விரும்பினர் என்றே கருத வேண்டியுள்ளது. இதற்கு வேறு சான்றுகளும் துணையாகின்றன.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள்!

இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண்ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்களுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற பிரச்னை, அவர்களைத் தூங்கவிடாமல் செய்யும். கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாமா?

ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்!

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

உழைக்கும் கனவில் சென்று சடலமாய் வீடு திரும்பிய சாந்தி

தனது தாய் நாட்டை விட்டு, உறவுகளை விட்டு தனது குடும்பத்தின் வறுமை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்று உழைத்து அதன் மூலம் தனது குடும்பத்தை வாழ வைக்கலாம் என்ற நம்பிக்கையில் வெளி நாடு செல்லுவோர் வரிசையில் சென்றவள்தான் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான ஓமடியாமடு கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி.

மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா கமலின் ‘விஸ்வரூபம் – 2′…!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்ட கமல்ஹாசனின் சமீப கால படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.கடந்த ஆண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் அவர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல