வியாழன், 18 பிப்ரவரி, 2010

கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை

அமெரிக்க ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 51 வயது நபரொருவர், காதலர் தினத்தையொட்டி 24 மணி நேரத்தில் 7,777 தடவைகள் கட்டியணைத்து புதிய சாதனையொன்றை மேற்கொண்டார்.

லாஸ் வெகாஸ் நகரிலுள்ள பாரிஸ் லாஸ் வெகாஸ் ஹோட்டலின் வெளியே நின்றவாறு அவ்வழியே செல்வோரை கட்டியணைத்தே ஜெப் ஒன்டாஷ் (Jeff Ondash ) என்ற மேற்படி நபர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார். இதன் பிரகாரம் மணிக்கு 324 தடவைகள் கட்டியணைத்து (நிமிடத்துக்கு சுமார் 5 கட்டியணைப்புகள்), இதற்கு முன் டுப்ளினைச் சேர்ந்த சியோபன் ஒகோனர் என்பவரால் நிறைவேற்றப்பட்ட சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

சியோபன் நிமிடத்துக்கு இரு கட்டியணைப்புகளையே நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜெப் ஒன்டாஷ் நீண்ட நேரமாக கட்டியணைப்பதில் ஈடுபட்டவர் என்ற உலக சாதனையையும் நிறைவேற்றியுள்ளார்.

மேலும் இவர் ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 1205 கட்டியணைப்புகளை மேற்கொண்டமைக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல