செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

நகைகளை பராமரிக்கும் முறை

நகைகள் வாங்கும் அளவிற்கு அதை பெரும்பாலானோர் பராமரிப்பதில்லை. நகைகளை முறையாக பராமரித்தால் தான், அவை நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். நகைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக...

முத்து நகைகள்:

* முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.

* முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும்.

* முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும். பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கி விடும்.

வெள்ளி நகைகள்:

* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்.

* அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.

* மிதமாக சுட வைத்த தண்­ரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.

* வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு மங்கி கருத்து விட்டதா? கவலை வேண்டாம். வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.

தங்க நகைகள்:

* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் žக்கிரம் தேய்ந்து விடும்.

* தங்க நகைகளை, பூந்திக் கொட்டையை தண்­ரில் ஊற வைத்து அந்த தண்­ரால் கழுவலாம். இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.

* நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து விடும்.
எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும். பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.

கற்கள் பதித்த நகைகள்:

* கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.

இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.

கூடல்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல