ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

முதுமையில் பாலுணர்வு குறைவது ஏன்?

மண்ணில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் குடல் பசியும், உடல் பசியும் (பாலுணர்வு) இயற்கையாய்த் தோன்றுவன. தனிப்பட்ட முறையில் அவ்வுயிர் வாழ தேவை குடல் பசி. உண்டால்தான் அவ்வுயிர் ஜீவிக்க முடிகிறது. அதே போல் அந்த உயிரின் சந்ததி பின்னும் இவ்வுலகில் தொடர்ந்து நிலவ உடல் பசி அவசியம். அந்த உணர்வால் உந்தப்பட்டுத் தான் எல்லா உயிர்களும் தனது ஜோடிகளுடன் புணர்வது, தனது வாரிசுகளை உருவாக்கி தனது மரபினை இம்மண்ணுலகில் வாழையடி வாழையாய் வரமுடிகிறது.

இந்த பாலுணர்வு பெண்களுக்குப் பூப்பு அடைந்தவுடன் ஆரம்பமாகி, மூப்பு எய்தும் வரை நீடிக்கிறது. இவர்களுக்கு மாதவிலக்கு ஒரு கணக்காய் விளங்கு கிறது. காரணம், அதற்கான உடல் ஊக்கிகள் உலாவரும் காலத்தைப் பொறுத்து இது அமைகிறது.

ஆண்களுக்கும் இவ்வுணர்வு ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் சொல்லப் போனால், சிறிது பின்னால் ஆரம்பித்து பின்னால் முடிகிறது எனலாம். இதற்கும் ஹார்மோன்களே பொறுப்பேற்கிறது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டீரான் ஹார்மோன்களும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும் மேற்கண்ட பாலுணர்வுகளையும் அதற்கேற்ற உடல் வாகினையும் தருகின்றன.

முதுமையில் பாலுணர்வு குறைய காரணங்கள்

1. உடல், மனம் சார்ந்த நிலைகள்- உடலில் உலவும் பாலுணர்வு ஹார் மோன்கள் வயது ஆக ஆக குறையத் தொடங்குவதால்- மனத்திலும் மற்ற பிரச்சினைகள் ஆக்கிரமித்துக் கொள்ள இதைப் பற்றிய சிந்தனையே இல்லா மல் போகிறது எனலாம்.

2. வயதினை ஒட்டி வளரும் நோய்கள் நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, இதய நோய், பாலுறுப்புகளில் ஏற்படும் அழற்சி மற்றும் அறுவைச் சிகிச்சைகள் இவ்வுணர் வினை குறைக்கின்றன.

3. உடல் நோய்களுக்குத் தரப்படும் சில மருந்துகளும் பாலுணர்வை மங்கச் செய்துவிடுகின்றன. உதாரணமாக, உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் சில, மன வியாதிக்குத் தரப்படும் மாத்திரைகள், குடற்புண்ணுக்குத் தரப்படும் சில மருந்துகள். தூக்க மாத்திரைகள் ஆகியவை.

4. மதுவின் பக்கவிளைவாக இது காணப்படுகிறது.

5. நமது நாட்டின் பண்பாட்டின் வெளிப்பாடு முக்கியக்காரணம். மகன், மகளுக்குத் திருமணம் செய்வித்த பின்பு ஏன் பருவம் அடைந்த பின்னே அவர்கள் ஒரே படுக்கையில இணைந்து படுப்பதைப் பாவமாய்க் கருதும் தம்பதியர் பலர் உள்ளனர். உடல், உணர்வு இரண்டும் ஒத்துழைத்தாலும், உலகியல் கண்டு ஒதுங்கி நிற்பதால் இவ்வுணர்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது.


ஆனால் உடலுறவு- பாலுறவு தேவையென்று உள்ளம் கூறிவிட்டால் அதை அடக்கி அவதிப்படுவதை விட செயல்படுத்துவதே செம்மை தரும். இதனால் உடல் நன்மை பெறும். உள்ளம் புத்துணர்வு பெறும். இளமை இனிதே தொடரும் என பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன..
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல