புதன், 3 மார்ச், 2010

கூகுள் தரும் சைட்விக்கி

தொடர்ந்து ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் சைட்விக்கி என்ற புதிய சிறப்பான செயல்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இணைய தளம் ஒன்றைப் பார்க்கையில் இது சைட் பார் ஒன்றைத் திறக்கும். இதில் தாங்கள் பார்க்கும் இணைய தளம் குறித்த தங்கள் கருத்துகளைப் பார்ப்பவர்கள் குறித்து வைக்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் எழுதி வைத்ததைப் படிக்கலாம்.

இவ்வாறு எழுதப்படும் குறிப்புகளின் தன்மையின் அடிப்படையில் இந்த சாதனம் அவற்றை வரிசைப்படுத்தி வைக்கிறது. முழு இணைய தளம் அல்லது ஒரு பகுதி மட்டும் குறித்தும் கருத்துகளை இதில் பதியலாம். ஏற்கனவே ஒருவர் ஓர் தளம் குறித்து குறிப்பு எழுதி, பின் மீண்டும் எழுதுவதனையும் இது புரிந்து கொள்கிறது. இதற்கான தொழில் நுட்பம் இந்த சைட்விக்கியில் தரப்பட்டுள்ளது என இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்த கூகுள் து�ணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறினார். மற்றவர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகள் பயனுள்ளவையா, இல்லையா என்று பிறர் கருத்துகளையும் இதில் பதியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல