செவ்வாய், 2 மார்ச், 2010

மென்மையான சருமத்திற்கு ..............

* மஞ்சள்த் தூள், சந்தனப் பொடி மற்றும் ஒலிவ் எண்ணெய் கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

*பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

* அறையில் எப்போதும் ஈரப்பதத்தின் நிலைவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

* வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் ''ஷவல்'' நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத்தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.

*விற்றமின் ''ஏ'' மற்றும் ''சி'' அதிகமுள்ள உணவுகளை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.

* கரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

* பாலும், எலுமிச்சைச் சாறும் கலந்த கலவையை கத்தில் பூசி * பாலும், எலுமிச்சைச் சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் ''பிளீச்'' செய்யலாம். * வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கறுத்து விடும்.

இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாறை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.

* கடுகு எண்ணெயை உடலில் பூசி 5 நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மா அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல