வெள்ளி, 26 மார்ச், 2010

விரும்பிய வீடியோ காட்சிகளை தனியாக பாதுகாக்க உதவும் இணையதளம்

வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணுவோம்.
குறிப்பாக, ஒரு நடனக்காட்சி அல்லது நகைச் சுவைக் காட்சி நம்மைக் கவரலாம்.

அதன்போது எப்படி ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாக வைத்துக்கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும்.

இந்த பிரச்சினையைத் தீர்க்க வீடியோ கட்டர் என்ற புரோகிராம் http://www.freevideocutter.com/  என்ற முகவரியில் உள்ள தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த புரோகிராமினை இன்ஸ்டோல் செய்த பின் புரோகிராமினை இயக்கவும். பின் “Open Video“ என்ற கட்டளையை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த புரோகிராம் அந்த வீடியோவின் போர்மெட், பிட்ரேட், பிளே ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகிய வற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப் நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடதுபக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும்.

வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் போர்மெட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற போர்மெட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும் பும் போர்மெட்டினையும் இதில் முடிவு செய்திடலாம். பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த போர்மெட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஓடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய் திடலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல