செவ்வாய், 20 ஏப்ரல், 2010

கடவுளும் விஞ்ஞானியும்

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார். அப்போது ஒரு விஞ்ஞானி வந்து "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் கற்று விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்ததை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.

"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.

"அதாவது வெறும் மண்ணிலிருந்து உமது சாயலில் ஒரு உருவத்தைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.

அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம்.

எனவே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவத்தை செய்யத் தொடங்கினாராம்.

அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல