வியாழன், 1 ஏப்ரல், 2010

குங்குமப் பூ

1. 16ம் நூற்றாண்டில் இலக்கியத்தில் இடம் பெற்ற மலர் உணவு வகை குங்குமப்பூ ஆகும்.

2. அபுல் ஃபாஸ்ல் கும்குமப்பூவைப் பற்றி எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.

3. அயினி அக்பரி நூலில் அபுல் ஃபாஸ்ல் குங்குமப்பூவை பற்றி காஷ்மீரில் உள்ள இந்த பூ வயல்கள் சிடு மூஞ்சிகளைச் கூட சிரிக்க வைக்கும் அழகு கொண்டவை என கூறி இருக்கிறார்.

4. அக்பரின் மகனான ஜஹாங்கீர் குங்குமப்பூ வயல்களில் இருந்து வீசும் மணம் பற்றி எழுதி உள்ளர். ( இப்படி தான் வரலாற்றில் குறிப்பிட்டு உள்ளது என்று எண்ணுகிறேன். )

5. ஜஹாங்கீர் தனது சுயசரிதை நூலான துஜ்க் ஏ ஜஹாங்கிரியில் கும்ங்குமப்பூவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

6. கஷ்மீரில் குங்குமப்பூவை காங்போஷ் என்று குறிப்பிடுகிறார்கள்.

7. காஷ்மீரில் தன் குங்குமப்பூ அதிக உற்பத்தி ஆகிறது.

8. ஆசியா மைனர் மற்றும் கிரீஸ் தான் இதன் தாயகம் ஆகும்.

9. கே.டி. ஆச்சய்யா என்பவர் தான் இப்பூவின் தாயகம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

10. இப்பூ காஷ்மீருக்கு பாரசீகர்கள் காஷ்மீரை வெற்றி கொண்டபின் தங்கள் நாட்டில்ருந்து காஷ்மீருக்கு கொண்டு வந்தார்கள்.

11. முதன் முதலாகக் இப்பூ கி.மு 500 ஆம் ஆண்டுக்கு முன்பே அறுவடை செய்யப்பட்டது.

12. இப்பூ உலகிற்க்கு விற்பனைக்கு வெளி வந்தது கி.மு. 6ம் நூற்றாண்டில் தான்.

13. பொனீசியர்கள் தான் இப்பூவை வெளி உலகிற்கு அறிமுகம் படுத்திய வணிகர்கள்.

14. 16ம் நூற்றாண்டில்தான் இப்பூ காஷ்மீருக்கு வந்தது என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்லுகிறது.

15. க்வாஜா மசூத் வாலி, ஹஜ்ரத் ஷேக் ஷரிஃபுதீன் என்ற 2 ஸூபிக்கள் தான் இப்பூவை கஷ்மீருக்கு அறிமுகப் படுத்தினர்.

16. இந்த 2 துறவிகள் கஷ்மீரில் இருக்கும் போது உடல் நலம் இல்லாமல் போனது. அவர்களை உள்ளூர் தலைவர் மருந்து கொடுத்து குணமாக்கினர். அதனால் அவர்களுக்கு பரிசாக கொடுத்து சென்றனர்.

17. இப்பூவை அறுவடையின் போது இந்த 2 துறவிக்கு நன்றி தொரிவிக்கும் விழாவாக காஷ்மீரில் கொண்டாடுகின்றனர்.

18. பாம்போர் என்ற இடத்தில் தான் காஷ்மீரில் அதிகம் இப்பூ விளைவிக்கிக்கப்ப படுகிறது.

19. இங்குதான் இப்பூவை அறிமுகம் செய்த ஞாநிகளின் நினைவாக அவர்களுக்கு பொற்கோபுரம் அமைத்து இருக்கிறார்கள்.

20. ஆயுர்வேதத்தில் இப்பூவின் மருத்துவ குணம் இருப்பதால் இத்துறையில் அதிகம் பயன்ப் படுத்துகிறார்கள்.

21. இப்பூ முகப்பரு, மூட்டுவாதம், மூச்சிரைப்பு, குடற்ப்பூச்சி, இருமல், ஈரல் கோளாறுகள், தொண்டைக் கரகரப்பு ஆகிய கோளாறுக்கு மருந்தாக பயன் படுகிறது.

22. இப்பூவை கொண்டு தயாரிக்கும் தின்பண்டங்கள் உடலுக்குக் கதகதப்பையும், ஊக்கத்தையும் தரவல்லது.

23. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் செய்யப் படுகிறது.

24. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் விரும்பி காஷ்மீரில் அதிகம் செய்யப் படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல